ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக பதவியேற்றார்…

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள், பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இன்று (12) பிற்பகல், கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. ரணில் விக்ரமசிங்க அவர்கள், இதற்கு முன்னர் ஐந்து முறை பிரதமராகப் பதவி வகித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 12.05.2022  

பிரதமராக பதவியேற்றார் ரணில் – இந்தியா வெளியிட்டுள்ள நம்பிக்கை

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், அரசியல் ஸ்திரதன்மை ஏற்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாக இந்திய அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ளி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரபூர் ட்விட்டர் பக்கத்தில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் ஜனநாயக வழிமுறைகளின்படி பிரதமர் பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரதமராக கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் … Read more

அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (13) மு.ப 06.00 மணிக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் பி.ப 02.00 மணிக்கு அமுல்படுத்தப்படும்…  

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (13) காலை 06.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. மீண்டும்  பி.ப 02.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், மறுநாள் (2022.05.14) காலை 06.00 மணி வரை அமுலில் இருக்கும். அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது … Read more

பிரதமர் பதவிக்கு ரணிலின் நியமனத்தை ஏற்க முடியாது: கர்தினால் (Photos)

பிரதமர் பதவிக்கு ரணிலின் நியமனத்தை ஏற்க முடியாது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்ததாக கூறப்படும் முடிவு குறித்து பேராயர் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் அதிருப்தி தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பு விழாவை இரத்துச் செய்ய வேண்டும் “ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் ஒரு பிரதிநிதி மட்டுமே மற்றும் அவர் நாடாளுமன்றத்தில் … Read more

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல பலஸ்தீன அரசாங்கம் தீர்மானம்.

பெண் ஊடகவியலாளரின் கொலை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல இருப்பதாக பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலால் கொல்லப்பட்ட ஷிரின் அபு அக்லா பெண் ஊடகவியலாளரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட போது அவர் இது பற்றி கருத்து வெளியிட்டார். பலஸ்தீன மேற்குக் கரை பிரதேசத்தில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட அத்து மீறலை அறிக்கையிடுவதற்காக சென்றிருந்த வேளையில் இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளார். ஆனால், இந்தத் தாக்குதலை பலஸ்தீன ஆயுததாரிகள் … Read more

திரு.ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்…

பிரதமரின் செயலாளராக திரு.ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க அவர்கள், இன்று (12) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். திரு. ஏக்கநாயக்க அவர்கள், இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். 2015 – 2019 காலப்பகுதியில் மூன்று தடவைகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் செயலாளராக கடமையாற்றிய அவர், நான்காவது தடவையாகவும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். திரு. ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க அவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது … Read more

பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழி

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க புதிய பிரதமர் ரணில் விகிரமசிங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.  பிரதமராக பதவியேற்றதில் இருந்து, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதே அவரது முதன்மையான பணியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா மற்றும் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மேற்குலக நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைகளும் விரைவில் இடம்பெறவுள்ளன.  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார … Read more

இலங்கையில் மீ்ண்டும் 16 மணித்தியாலங்கள் ஊரடங்கு நடைமுறை

இலங்கையில் மீண்டும் 16 மணித்தியாலங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  நாடு முழுவதும், இன்று பிற்பகல் 2 மணி முதல்  பொலிஸ்  ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் போடப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணி வரை நடைமுறையில்  இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துமூல அனுமதியின்றி, பொதுச்சாலை, தொடருந்து பாதை, பொதுப்பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லையென ஜனாதிபதி … Read more

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்சினை இல்லை – மத்திய வங்கி ஆளுநர்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்சினை இல்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், ரூபாய் தொடர்பாக பிரச்சினை இல்லை என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் செலவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் பணவீக்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.