கறைபடிந்த நாள்! கலவர பூமியான இலங்கை (Video)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது கடந்த 9ஆம் திகதி ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடெங்கும் பரவிய வன்முறைகள் காரணமாக 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 250 பேர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 232 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். உயிரிழந்த 9 … Read more

நீண் தூரப் போக்குவரத்து சேவைகள் இடம்பெற மாட்டாது

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட ஏழு மணித்தியாலங்களில் மாகாணங்களுக்குள் டிப்போ மட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் நீண்ட தூரப் போக்குவரத்து பஸ் சேவைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதனால் அவர்கள் இன்று சேவைக்கு சமூகமளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, மாகாணங்களுக்குள், … Read more

விரைவாக செயற்படாவிடின் நாடு முழுமையாக செயலிழந்துவிடும் – முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர்

அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிக்கப்படாமையால் நாடு முழுவதும் செயலிழந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதற்கு ,பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க வேண்டும். பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கத் தேவையானவர்கள் தொடர்பில், பாரளுமன்ற உறுப்பினர்கள் விரைவாக கலந்துரையாடி  தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.   அத்துடன், எந்தவொரு கட்சியும் பிரதமர் பதவிக்காக ஒருவரின் பெயரை  குறிப்பிடாத பட்சத்தில், பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற … Read more

மகிந்தவின் ஆதரவாளர்களுக்கு உயர் இடத்திலிருந்த வந்த தகவல்! அம்பலப்படுத்தப்படும் விடயம்

மைனாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கப் போவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தான் உட்பட சுமார் 10 பேர் வரையிலானோர் அலரி மாளிகைக்கு அருகில் சென்றதாக பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் திகதி மகிந்தவின் ஆதரவாளர்களால், அலரிமாளிகைக்கு அருகிலும் காலிமுகத்திடல் பகுதியிலும் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுத்து வந்த மக்கள் தாக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து நாட்டின் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்த நிலையில் அலரி மாளிகை பகுதியில் தாக்கப்பட்ட பெண்ணொருவர் தனது நேரடி அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இதன்போது … Read more

அரசு , தனியார் துறையினர் முன்னெடுத்த வேலை நிறுத்தம்

அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் பலவற்றினால் முன்னெடுக்கப்பட்ட தொடர் பணிப்புறக்கணிப்பை இன்று காலை 7.00 மணியுடன் முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், துறைமுகம், மின்சாரம் என பல துறைகளின் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். இதேவேளை, இலங்கை நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையும் முடிவுக்கு வந்துள்ளது. அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை குறைப்பதற்குமே இந்த தீர்மானம் … Read more

புதிய பிரதமராக ரணில் இன்று பதவியேற்கலாம்!

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் பதவியேற்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இன்று மாலை 6.30 மணிக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க  கொள்ளுப்பிட்டியில் உள்ள விகாரை ஒன்றுக்கும் கங்காராம விகாரைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் 5 முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ளார். அத்துடன் நாளைய … Read more

இதுவரை நடந்தவற்றிற்கு நான் மிகவும் வருந்துகின்றேன்! நாமல் ராஜபக்சவின் உருக்கமான பதிவு (Photo)

அண்மைய சம்பவங்களில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வு முகப்புத்தக தளத்தில் அவர் இது தொடர்பில்  பதிவொன்றை இட்டுள்ளார்.  இந்த துயரமான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக மறைந்த கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள அவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன், இதுவரை … Read more

கட்சித் தலைவர்கள் கூட்டம்  இன்று பாராளுமன்றத்தில்

கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.  சூம் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக கட்சித் தலைவர்கள் சந்திப்பு ஒன்று நேற்று (11) இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான ரணில் விக்ரமசிங்க, ரவுப் ஹக்கீம், ரஞ்சித் மத்தும பண்டார, எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பலர் இதில் இணைந்து கொண்டனர். இந்த சந்திப்பில் சபை முதல்வரும் ஆளும் கட்சி பிரதம கொறடாவும் பங்கேற்காமை குறித்து சபாநாயகர் அலுவலகம் ஊடக … Read more

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு

இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 380 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதற்கமைய, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 363 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதேவேளை, ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 443.88 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் கொள்வனவு விலை 466.64 ரூபாயாக பதிவாகியுள்ளது. Source link

கடற்றொழிலாளர்களின் கவனத்திற்கு…..

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 12ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் அண்மையாகவுள்ள மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கும் மேலாக காணப்படுகின்றஆழமான தாழமுக்கம் மே 11ஆம் திகதி பிற்பகல் 11.30 மணிக்கு வட அகலாங்கு 16.20 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 80.90 E இற்கும் இடையில் காங்கேசந்துறைக்கு வடகிழக்காக 700 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. அது அந்தப் … Read more