கடற்றொழிலாளர்களின் கவனத்திற்கு…..

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 12ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் அண்மையாகவுள்ள மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கும் மேலாக காணப்படுகின்றஆழமான தாழமுக்கம் மே 11ஆம் திகதி பிற்பகல் 11.30 மணிக்கு வட அகலாங்கு 16.20 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 80.90 E இற்கும் இடையில் காங்கேசந்துறைக்கு வடகிழக்காக 700 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. அது அந்தப் … Read more

அமைச்சு பதவிகள் தொடர்பில் ரணிலுடன் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படாதென தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்ட எவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டாம் என ரணில் விக்ரமசிங்கவிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 15 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.   இதேவேளை, இன்று அல்லது நாளை ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமாக பதவியேற்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது Source link

பிரதமர் பதவி தொடர்பில் சரத் பொன்சேகாவை தொடர்புகொண்ட ஜனாதிபதி – கொழும்பு ஊடகம் தகவல்

பிரதமர் பதவியை வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவைத் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாததன் காரணமாக தற்போதைய அரசியல் நெருக்கடியை முறியடிக்கும் முயற்சியில் ஜனாதிபதி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தாம் பிரதமராக நியமிக்கப்பட்டால், நாட்டை ஆளக்கூடிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் … Read more

ராஜபக்சக்களுக்கு சொந்தமான ஹோட்டலுக்கு தீவைப்பு

தங்காலை மெடில்ல பிரதேசத்தில் ராஜபக்சக்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஹோட்டலுக்கும் ஒரு குழுவினர் தீ வைத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஹோட்டலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் கடந்த ஒரு மாத காலமாக அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் கடந்த திங்கட்கிழமை அரசாங்க ஆதரவு தரப்பினர்கள் ஏற்படுத்திய குழப்பம் வன்முறையாக மாறியது. இதனால் பலர் கொல்லப்பட்டதுடன், வாகனங்களுக்கும் தீவைத்து … Read more

இலங்கையின் மொத்த குடும்ப வருமானத்தில் 51.3 வீதத்தை பெறும் செல்வந்தர்கள்

இலங்கையின் பணக்கார 20 சதவீத குடும்பங்கள் நாட்டின் மொத்த குடும்ப வருமானத்தில் சுமார் 51.3 சதவீதத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஏழ்மையான 20 சதவீதத்தினர் 2019 இல் 4.6 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளனர் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (CSD)தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2ம் திகதி வெளியிடப்பட்ட ‘2019 குடும்ப வருமானம் மற்றும் செலவினங்கள் (HIES) கணக்கெடுப்பு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. ‘பணக்கார குடும்பங்கள்’ என வரையறுக்கப்பட்ட … Read more

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள ஸ்தீரமற்ற தன்மை – சீன தூதுவரை சந்தித்தார் சஜித் (Photo)

இலங்கை அரசியலில் ஒரு ஸ்தீரமற்ற நிலை உருவாகியுள்ள பின்னணியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சீனத் தூதுவரை இன்று சந்தித்து பேசியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தமான தருணத்தில் இலங்கைக்கு சகோதரத்துவக் கரம் நீட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சீனத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிப்படைத் தன்மையுடன் நாட்டை நிர்வகித்தல், இலஞ்சம், ஊழல், … Read more

இந்த வாரத்தில் ,பெரும் பான்மையினரின் நம்பிக்கையைக் கொண்ட பிரதமர், அமைச்சரவை நியமனம் 

தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்தவும் மேலும், நாடு அராஜகத்துக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில் தற்போது தடைப்பட்டுள்ள, அரச நிருவாகத்தை முன்னெடுப்பதற்காக புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்தார். இந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் பெரும் பான்மையினரின் நம்பிக்கையைக்கொண்ட, அதேபோன்று நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையையும் நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி கூறினார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இன்று (11) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் ஆற்றிய விசேட உரை. (2022.05.11)

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் ஆற்றிய விசேட உரை. (2022.05.11) வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் அனுமதியுடன், ஏனைய மதத் தலைவர்களே, தாய், தந்தையர்களே, சகோதர சகோதரிகளே, அன்புள்ள குழந்தைகள் மற்றும் நண்பர்களே, இன்று எமது நாடு அதன் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிகழ்விற்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்கொண்ட சிரமங்களினால் சமூக மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையை உருவாக்கியது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக, பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும்  பெரும்பான்மையான கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, … Read more