அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் ஆற்றிய விசேட உரை. (2022.05.11)

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் ஆற்றிய விசேட உரை. (2022.05.11) வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் அனுமதியுடன், ஏனைய மதத் தலைவர்களே, தாய், தந்தையர்களே, சகோதர சகோதரிகளே, அன்புள்ள குழந்தைகள் மற்றும் நண்பர்களே, இன்று எமது நாடு அதன் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிகழ்விற்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்கொண்ட சிரமங்களினால் சமூக மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையை உருவாக்கியது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக, பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும்  பெரும்பான்மையான கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, … Read more

பிரதமர் பதவியை ஏற்காத சஜித் – எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகும் ஆபத்து

புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர தீர்மானித்துள்ளது. இந்நிலைமையால் சஜித் பிரேமதாசவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி நீக்கப்பட உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, புதிய எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பல தடவைகள் கோரிய போதிலும், பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து அவர் … Read more

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்…

ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் தொடர்ந்து முன்னெடுத்தல் தொடர்பான சகல செயற்பாடுகளையும் அமுல்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் இரண்டு மேலதிக ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரப் பிரதானி ஒருவரான கே.டி.எஸ்.ருவன் சந்திர அவர்கள், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாகவும், மேலதிக ஆணையாளர்களாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளரான ரோஹன புஷ்பகுமார மற்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். … Read more

ஜே.ஜே. ரத்னசிறி அவர்கள் அரச பொது நிர்வாக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்…

ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய, மக்களின் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்து  பேணுவதற்கு  நேற்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஜே.ஜே. ரத்னசிறி அவர்கள், மீண்டும் அதே அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 11.05.2022  

மேல் மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை – வெளியானது விசேட அறிவிப்பு

 மேல்மாகாணத்தின் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை (12) விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை  மூடப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் தெரிவித்துள்ளார். Source link

வன்செயல்களுக்காக மக்களை ஒன்று திரட்டும் 59 வட்ஸ்அப் குழும்பங்கள்

வன்செயல்களுக்காக அழைப்பு விடுக்கும் 59 வட்ஸ்அப் குழுமங்களின் அட்மின்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பொலிசார் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். இவர்களுக்கு எதிராக கணனி குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். வன்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை 1997 அல்லது 118 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல்களை வழங்க முடியும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். ரெல் ஐ ஜி பி அட் பொலிஸ் டொட் ஜி ஓ வி டொட் எல் கே tell [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாகவும் … Read more

பிரதிப் பொலிஸ்மா அதிபர் மீது தாக்குதல்: நாளை அடையாள அணிவகுப்பு

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் நாளை அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்படவுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்படுள்ளனர். ஒரு சந்தேக நபர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (12) மு.ப 07.00 மணிக்கு தளர்த்தப்பட்டு,  மீண்டும் பி.ப 02.00 மணிக்கு அமுல்படுத்தப்படும்

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (12) காலை 07.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. மீண்டும்  பி.ப 02.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், மறுநாள் (2022.05.13) காலை 06.00 மணி வரை அமுலில் இருக்கும். அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது … Read more

ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்படுகிறது

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்படுகிறது.  பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு ,மறுநாள் (13) காலை 6.00 மணிவரை அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் பவுசர் உரிமையாளர்களின் திடீர் முடிவு  

நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விநியோகத்திற்காக வந்துள்ள அனைத்து பவுசர்களும் கொலன்னாவ எரிபொருள் களஞ்சிய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.