எரிபொருள் பவுசர் உரிமையாளர்களின் திடீர் முடிவு  

நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விநியோகத்திற்காக வந்துள்ள அனைத்து பவுசர்களும் கொலன்னாவ எரிபொருள் களஞ்சிய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றிரவு ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது! பொலிஸார் அறிவிப்பு

இன்று இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையான நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  ஊரடங்குக் காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடவேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூடவேண்டாம் எனவும் பொதுமக்களை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.    தேவைப்படும் போது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அனுமதி! வெளியானது விசேட அறிவித்தல் (Photo)  Source link

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தை, இன்று பிற்பகல் 3 மணிக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூம் Zoom  தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இந்த கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தை நடத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கூட்டம் இரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னதாக தெரிவித்திருந்தார். எனினும் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜூம் Zoom தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி … Read more

அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று தெளிவுபடுத்தினார். அரசின் வருவாயைப் பெருக்க வேண்டிய தேவை வலுவாக உள்ளது என்றார். அரசாங்க வருமானம் போதவில்லை என்றால், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் பணத்தை அச்சிட வேண்டும். அந்த நடைமுறையை மத்திய வங்கி மேற்கொள்ள வேண்டும். அதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. அரசாங்க வருவாயை அதிகரிக்க வேண்டும். சம்பளம் … Read more

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ திருகோணமலை கப்பல்துறையில்

பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ திருகோணமலை கப்பல்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இன்று (11) கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ‘நாட்டின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், முன்னாள் பிரதமர் அவர் விரும்பும் இடத்திற்கு ,பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார். அனைத்து பிரஜைகளையும் பாதுகாக்கும் கடப்பாடு உண்டு அதன் அடிப்படையில் நாம் செயல்பட்டு வருகின்றோம்’ என்றும் பாதுகாப்பு செயலாளர் … Read more

இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் நடைமுறையிலுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி நாட்டில் இன்றைய நிலவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன்படி ஊரடங்கு தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.  மேலும் அவர் கூறுகையில், இன்று ஒரு பிரச்சினையும் பதிவாகாத பட்சத்தில் நாளை காலை ஊரடங்கு உத்தரவை நீக்கி சிறிது நேரத்தின் … Read more

யுபுன் அபேகோன் நாளை ரோம் தடகள போட்டியில் பங்கேற்பு…

இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் நாளை (12) தனது இரண்டாவது தடகள போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்த ரோம் தடகளப் போட்டி இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறவுள்ளது. போட்டிஅட்டவணைக்கு அமைவாக  யுபுன் 150 மீட்டர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் பங்கேற்க உள்ளார். கடந்த மாதம், 2022 ஆம் ஆண்டின் முதல் வெளிப்புறப் போட்டியில் யுபுன் பங்கேற்றார். யுபுன் 150 மீற்றர் தூரத்தை 15.16 வினாடிகளில் ஓடி புதிய ஆசிய சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்புலன்ஸ் சாரதிகள் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட கோரிக்கை

கலவரங்களின் போது ஆம்புலன்ஸ்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என ஆம்புலன்ஸ் சாரதிகள் சங்கம் நாட்டில் உள்ள அனைத்து மக்களிடமும் விசேட கோரிக்கையை முன்வைத்துள்ளது. அலரிமாளிகைக்கு முன்பாகவும் காலி முகத்திடலிலும் இடம்பெற்ற கலவரத்தின்போதும், பல அம்பியூலன்ஸ்கள் தாக்கப்பட்டுள்ளன என்று சங்கத்தின் தலைவர் டபுள்யூ. டி விஜேசிங்க தெரிவித்துள்ளார். மேலும், நோயாளர்களை விரைவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதுடன், அனைத்து நோயாளர்களின் உயிர்களையும் காப்பாற்ற ஆம்புலன்ஸ் சாரதிகள் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், அம்புலன்ஸ்கள் மீது தாக்குதல்கள் இடம்பெறுவது … Read more