கொழும்பிலிருந்து அவரசமாக மகிந்த வெளியேற்றப்பட்டது ஏன்? பாதுகாப்பு தரப்பு விளக்கம்

பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், மகிந்த விரும்பும் இடத்திற்கு மாற்றப்படுவார் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். மகிந்த அலரி மாளிகையில் இருந்த போது ஆயிரக்கணக்கானவர்களினால் சுற்றிவளைக்கப்பட்டிருந்ததாகவும், அவரைப் பாதுகாக்கும் விதமாக தற்காலிகமாக குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில நாட்களுக்கு மகிந்த குடும்பம் திருகோணமலை கடற்படை தளத்தில் தங்கவைக்கப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார். … Read more

ஊரடங்கையும் மீறி தொடரும் போராட்டங்கள்: எல்லைமீறும் வன்முறைகள் – செய்திகளின் தொகுப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலையை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அதனை பொருட்படுத்தாத போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இன்று காலை 07 மணிவரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் நாளை வியாழக்கிழமை காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசுக்கெதிராக பாரிய போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக அங்கொடை பகுதியில் காவல்துறையின் பேருந்து மீது தீவைக்க முயன்ற சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்ட … Read more

Play-off சுற்றுக்கு சென்னை அணிக்கு வாய்ப்பு உண்டா

சென்னை அணி ‘பிளே-ஆஃப்’ Play-off சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள 3 போட்டிகளிலும் கூடுதலான ஓட்ட எண்ணிக்கையில் வெற்றி பெற வேண்டும். இந்தியாவில் நடைபெற்றுவரும் 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் , நடப்பு ஆண்டுக்கான தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இத்தொடருக்கான 70 லீக் போட்டிகள் மும்பை, புனே ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது அடுத்த சுற்றான பிளே-ஆஃப் சுற்று: … Read more

ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதைக் கருத்திக்கொண்டு ரயில் சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்ததாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, நேற்றிரவு முதல் அனைத்து இரவு நேர ரெயில்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று சேவையில் ஈடுபடும் ரெயில்கள் அவற்றின் அடைவிடங்களை மாத்திரம் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.

பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே… நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே – வைரமுத்து நெகிழ்ச்சி

சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக  மாறியுள்ளது.   மக்கள் புரட்சியும்,  அரசியல் குழப்பமும் இலங்கை பற்றிய செய்தியை உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றிருக்கின்றது.  அதேசமயம், கடந்த 2009ஆம் ஆண்டு இதே மாதத்தில் இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் கோரத்தினையும் உலகம் இன்று நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றது.  அதை அறிந்த உலகத்தார் இலங்கை ஆட்சியாளர்களை வசை பாடாமல் தவிர்த்தால் தான் ஆச்சர்யம்.  இது இவ்வாறு இருக்க  இந்திய சினிமாவில்  மிகப்பெரிய கவிஞரான கவிப்பேரரசு வைரமுத்து  தற்போதைய இலங்கை … Read more

அசானி வலுவிழந்து புயலாக நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் அறிவிப்பு

வங்கக் கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த அசானி வலுவிழந்து புயலாக நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம்  அறிவித்துள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே 60 கி.மீ தொலைவில் அசானி புயல் தற்போது நிலவுகிறது என்றும் அசானி புயல் நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என்றும்  இந்திய வானிலை ஆய்வு நிலையம்  தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8 ஆம் திகதி, புயலாக உருவெடுத்தது. அதற்கு ‘அசானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த … Read more

கொழும்பில் இருந்து மகிந்த தப்பியது எப்படி….!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கொழும்பிலிருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. திருகோணமலையை அண்மித்த தீவு ஒன்றில் ராஜபக்ச குடும்பம் மற்றும் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் தங்கியுள்ளதாக தெரிய வருகிறது. மகிந்த, சமல், பசில் ஆகியோரும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குடும்பமும் இங்கு பதுங்கியுள்ளதாக தெரிய வருகிறது. கொழும்பிலிருந்து அங்கு தப்பிச் செல்வதற்கு தேவையான உதவிகளை இராணுவத்தினர் செய்துள்ளனர். இதற்கான அனுமதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. … Read more

மகிந்த ராஜபக்சவை உடன் கைது செய்யுங்கள் – தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல்களில் சிறைக் கைதிகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டி, சிறைச்சாலைகள் ஆணையாளரை உடனடியாக கைது செய்யுமாறு தொழிற்சங்க கூட்டமைப்பு (TUC) கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். மைனகோகம மற்றும் கோட்டகோகம மீது தாக்குதல் நடத்துவதற்காக வத்தரேகா சிறைச்சாலையிலிருந்தும் கைதிகள் களமிறக்கப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, சிறைச்சாலைகள் ஆணையாளரை உடனடியாகக் கைது செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்றைய தினம் ஒன்றிணைந்த … Read more

கொத்தளிக்கும் கொழும்பு இலங்கையை நோட்டமிட்ட இந்திய கடற்படை அதிகாரிகள் (Video)

இந்தியா தொடர்ச்சியாக இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கிவருகின்றது. ஏன் இந்தியா தற்போதைய அரசை காப்பாற்ற முன் வருகின்றதா என்ற கேள்வி இதன்போது எழுந்தது. இதற்கு கருத்து தெரிவித்த இந்திய தூதுவர்,  “ நாங்கள் இலங்கைக்கு கொடுக்கும் நிதியுதவிகளோ பொருளாதார உதவிகளோ எமது புகோள அரசியலின் பாதுகாப்பிற்கே தவிர இந்த அரசை பாதுகாப்பது எமது நோக்கமல்ல என்று. ஆனால் இது உண்மையில்லையென இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்துள்ளார். எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே … Read more

சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பம்

இலங்கைக்கான உதவிகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இலங்கை தரப்புக்கும் இடையிலான தொழில்நுட்ப கலந்துரையாடல் நேற்று (9) ஆரம்பமானது. இது தொடர்பான கலந்துரையாடல்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இணைய வழியூடாக இடம்பெறுகின்ற இந்த கலந்துரையாடலுக்கு நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி , நிதியமைச்சின் மற்றும் இலங்கை மத்திய … Read more