இந்தியாவிற்கு தப்பிச்சென்றதாக கூறப்படும் அரசியல்வாதிகள்! இந்திய உயர்ஸ்தானிகராலயம் தகவல் (PHOTO)

இலங்கையில் இருந்து சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக பரப்பப்படும் செய்திகள் போலியானவை என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருவதை அவதானித்துள்ளோம். இவை போலியானவை, தவறான தகவல்கள், அதில் எவ்வித உண்மையும் இல்லை. இவ்வாறான செய்திகளை மறுக்கும் அதேவேளை, வன்மையாக கண்டிப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. High Commission … Read more

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கை

கொழும்பில் இருந்து, நேற்று (09) வட்டரெக்க சிறைச்சாலைக்கு, சிறைச்சாலை பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட புனர்வாழ்வளிக்கப்படுகின்ற கைதிகள் மீது, மாலபே தலாஹேன பிரதேசத்தில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 10 கைதிகள் உட்பட பல சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக சிறைச்சாலை பஸ்ஸில் இருந்த மேலும் 58 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த சுமார் 30 கைதிகள், பணி வசதி திட்டத்தின் கீழ் கொள்ளுப்பிட்டி … Read more

மகிந்தவை உடன் கைதுசெய்ய வேண்டும் – மைத்திரிபால சிறிசேன கோரிக்கை

அமைதியான மற்றும் நியாயமான மக்களின் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ ஆகியோரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். சுயாதீன நாடாளுமன்ற கட்சிகள் மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு … Read more

பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள், சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இருவரை கொள்ளுப்பிட்டி பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் பேரே வாவி அருகிலுள்ள பாதையொன்றில் தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது சிலர் அவரை வாகனத்தில் இருந்து இறக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். ரத்கம பிரதேச சபை தலைவரின் வீட்டில் இடம்பெற்ற … Read more

யாழில் அங்கஜனின் அலுவலகம் தீவைக்கப்பட்டது (Photo)

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்யில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகமும் போராட்டகாரர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.   நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் போராட்டத்தில் குண்டர்கள் புகுந்து குழப்பம் ஏற்படுத்தினர். இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்த நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இன்றைய … Read more

முன்னிலை சோசலிச கட்சி உறுப்பினரின் கூற்றை முப்படையினர் நிராகரிப்பு

பாதுகாப்பு பிரிவினரினைக் கொண்டு பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பொது மக்களை குழப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ அவர்களால் பொது மக்களை தவறான பக்கத்தில் திசைதிருப்பும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதனை முப்படையினரால் முழுமையாக நிராகரிக்கப்படுவதோடு. பாதுகாப்பு படையினர் ஒரு போதும் பொது மக்களை தூண்டிவிடும் வகையிலான மோசமான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.    

அவென்ரா கார்டன் தீ விபத்து சம்பவத்தில் கடற்படை வீரர் பலி

 நீர்கொழும்பு அவன்ரா கார்டன் உணவக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்தின் போது கடற்படை வீரர்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 29 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கடற்படையில் அரச ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த மினுவாங்கொடையைச் சேர்ந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உணவக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது அதிக புகையை சுவாசித்ததால் அந்த நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  Source link