பிரதமரை நீக்குவதற்கு அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை – வெகுஜன ஊடக அமைச்சர்

அனைத்து கட்சிகளின் உடன்பாட்டுடன் முன்னெடுக்கப்படும் ஒன்றிணைந்த அரசாங்கத்தின் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு புதிய மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி விருப்பத்துடன் இருப்பதாக வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்தார். இது தொடர்பில் தற்பொழுது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ,எதிர்கட்சியுடனும் பொதுஜன பெரமுனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார். பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதி எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறான விடயம் தொடர்பில் … Read more

இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் தொடர் வேலை நிறுத்தம்! வெளியானது அறிவிப்பு

இலங்கையில் தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 12 மணி முதல் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சுகாதார தொழிற்சங்க சம்மேளன ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை மற்றும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் மீதான தாக்குதல் என்பவற்றை கண்டித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  Source link

கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி ஆகிய பொலிஸ் பிரிவுளில், மறு அறிவித்தல் வரும்வரையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   கொழும்பு  காலி முகத்திடலில் இன்று (09)  இடம்பெற்ற அமைதியற்ற நிலையைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    

இன்றும், நாளையும் கம்பஹா- கொழும்பு மாவட்டங்களுக்கு 15,000 எரிவாயு சிலிண்டர்கள்

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இன்றும் நாளையும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவிக்கையில், எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்த சமையல் எரிவாயு உடனான கப்பலை நாளைய தினம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்! சபாநாயகர் எடுத்துள்ள முடிவு (Photo)

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்க சபாநாயகர் இணங்கியுள்ளார்.   இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.      மேலும், 6ஆம் திகதி கொண்டு வரப்பட்ட அவசரகால விதிகளும் 10 நாள் அவகாசத்துக்குள் சபை விவாதத்திற்கு சமர்பிக்க வலியுறுத்தப்பட்டது. விவாதம் நடைபெறும் திகதி  புதன்கிழமை தீர்மானிக்கப்படும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.  … Read more

பிரதமரை தொடர்ந்தும் பதவியில் இருக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி சிலர் இன்று (09) அலரிமாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அலரிமாளிகைக்கு அப்பாலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மேலும பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக சில தரப்பினர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில் பிரதமர் தொடர்ந்தும் பதவியில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் பதவியில் இருந்து வெளியேறினால் நாடு தொடர்ந்தும் … Read more

40,000 மெற்றிக் தொன் பெட்ரோல், மசகு எண்ணெய் அடங்கிய கப்பலகள் 

40,000 மெற்றிக் தொன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்றும் மசகு எண்ணெய் அடங்கிய மேலுமொரு கப்பலும் இன்று நாட்டை வந்தடைய உள்ளன. அவற்றில் அடங்கியுள்ள எரிபொருள் ,இன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்க கூடியதாக இருக்கும் என்று   அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அரச வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு அவசர அறிவித்தல்! இன்று மட்டுமே வாய்ப்பு

நாட்டில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பணம் படைத்தவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளனர். அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதே இன்று பெரும்பாடாய் ஆகியுள்ள நிலையில் வேலையில்லாத் திண்டாட்டமும் தலைத் தூக்கியுள்ளது. கோவிட் பெருந்தொற்று இலங்கையை ஆக்கிரமித்த காலத்தில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்திருந்தன. இதன்போது வேலையிழந்து  இன்றுவரை வேறு தொழில் ஏதும் கிடைக்காமல் காத்திருப்பவர்களும் உண்டு. அதேசமயம், கற்ற கல்விக்கும், தனது தகுதிக்கும் … Read more

மகிந்த இன்று பதவி விலகாவிட்டால் அமைச்சு பதவிகளை கைவிட தயாராகும் நான்கு பேர்

பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று பதவி விலகாவிட்டால் நான்கு அமைச்சர்கள் பதவி விலகத் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கமைய, பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, அலி சப்ரி மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோட்டாபய, மகிந்தவுக்கு எதிராக சதி முயற்சி என்கிறார் உதயங்க வீரதுங்க! … Read more