“Asani” அசானி சூறாவளி

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த“Asani” அசானி என்ற சூறாவளியானது பாரிய சூறாவளியாக வலுவடைந்து மே 08ஆம் திகதி 2330 மணிக்கு வட அகலாங்கு 13.00 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.50 … Read more

அலரி மாளிகையில் இருந்து அகற்றப்படும் முக்கிய ஆவணங்கள்

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று பதவி விலகுவார் என பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அலரி மாளிகைத் தகவல்கள் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது. பதவி விலகல் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அலரி மாளிகையிலுள்ள முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எந்த நேரத்தில் பிரதமர் பதவி விலகலாம் என்ற அடிப்படையில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக அலரி மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இன்றையதினம் பிரதமர் … Read more

ரஷ்யாவிடம் சரணடைவது என்பது இறப்புக்கு சமன்! உக்ரைன் தளபதிகளின் ஆவேசம்

ரஷ்யா உக்ரைன் மக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டவில்லை எனவே அவர்களிடம் சரணடையப்போவதில்லை என்று மரியுபோலில் உள்ள இரும்பு ஆலையில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் உக்ரைன் படைத்தளபதிகள் தெரிவித்துள்ளனர். மரியுபோலில் உள்ள தளத்தில் உள்ள அசோவ் படைப்பிரிவின் தளபதி மற்றும் துணைத் தளபதி ஆகியோர் இன்று செய்தியாளர்களுடன் நடத்திய அரிய இணைய செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளனர். சரணடைவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, எதிரிக்கு இவ்வளவு பெரிய பரிசை தம்மால் வழங்க முடியாது, பிடிபடுவது என்றால் இறந்துவிட்டதாக அர்த்தம் என்றும் … Read more

இலங்கை அணி – பங்களாதேஷ் பயணமானது

இலங்;கை அணி – பங்களாதேஷ் பயணமானது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணி 2 பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இந்தப் பயிற்சிப் போட்டி 11-12ம் திகதிகளில் இடம்பெறும். டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது

12 வயதில் திருமணம்! 15 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாய்… பல தடைகளை தாண்டி சாதித்த பெண்

12 வயதில் திருமணமாகி 15 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான பெண் பல்வேறு தடைகளை தாண்டி பின்னாளில் மூன்று முதுகலை பட்டங்களை வாங்கி சாதித்துள்ளார். கேரளாவை சேர்ந்தவர் சபியா Safiya Othayachandiyil. இவர் இப்போது 50 வயதை நெருங்கி கொண்டிருக்கிறார். Safiyaவுகு 12 வயதில் திருமணம் ஆகியிருக்கிறது. 15 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் ஒரு குழந்தைக்கு தாயானார். தனது 22வது வயதில் விட்ட படிப்பை மீண்டும் தொடர்ந்த Safiya … Read more

பிரதமர் இன்று அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதியில் வழிபாடு

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று காலை அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதியில் வழிபாடுகளில் ஈடுபட்டு நல்லாசி பெற்றார். இதன் பின்னர் விஹாராதிபதி நுவர கலாவியோவின் தலைமை சங்க நாயக்கர் சங்கைக்குரிய பள்ளேகம ஹேமரத்ன தேரரைச் சந்தித்து அவரது சேமநலன்களைக் கேட்டறிந்தார். இதன் பின்னர் றுவன்வெலி சாயவில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நாளை ரயில், பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெறும்

ரயில் மற்றும் பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதில் சேவையில் ஈடுபடுகின்ற எந்தவொரு ஊழியரும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடமாட்டார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்

இலங்கை மக்களுக்கு முதல் தடவையாக இந்தியாவின் எரிவாயு! ஆறு வாரங்களுக்கு எரிவாயு தட்டுப்பாடு

நிலவும் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக இந்தியாவில் இருந்து முதல் முறையாக உள்நாட்டு எரிவாயுவை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த வாரம் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கூட்டமொன்றை நடத்தியுள்ளார். இதன்போது தமது நிறுவனம் தொடர்ச்சியான எரிவாயு விநியோகத்தைப் பெற்றால், சந்தைத் தேவையில் … Read more

நெருக்கடியை தீர்க்க அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படத் தயார் – ஜனாதிபதி தெரிவிப்பு

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பில் அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுதல் குறித்து பரிசீலிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையுடன் இன்று, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 13 முக்கிய தீர்மானங்களை அதன் நிறைவேற்று சபையில் முன்வைத்து ஏகமனதாக நிறைவேற்றியது. இத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், … Read more