நெருக்கடியை தீர்க்க அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படத் தயார் – ஜனாதிபதி தெரிவிப்பு

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பில் அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுதல் குறித்து பரிசீலிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையுடன் இன்று, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 13 முக்கிய தீர்மானங்களை அதன் நிறைவேற்று சபையில் முன்வைத்து ஏகமனதாக நிறைவேற்றியது. இத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், … Read more

சமர்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பாக அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுதல் பற்றி அவதானம் செலுத்தப்படும்…

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பில் அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுதல் குறித்து பரிசீலிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையுடன் இன்று, (08) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 13 முக்கிய தீர்மானங்களை அதன் நிறைவேற்று சபையில் முன்வைத்து ஏகமனதாக நிறைவேற்றியது. … Read more

1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் நடைமுறைப்படுத்தல் விபரங்கள்

இலங்கையின் உணவு, சுகாதாரம் மற்றும் சக்திப் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் 2022 மார்ச் 17ஆம் திகதி இந்திய ஸ்டேட் வங்கி ஊடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த கடனுதவித் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதுடன் அரிசி, செத்தல் மிளகாய் போன்ற உணவுப்பொருட்கள் இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கை மக்களினதும் அரசாங்கத்தினதும் முன்னுரிமை அடிப்படையில் சீனி, பால்மா, கோதுமை, மருந்து, எரிபொருள் மற்றும் உற்பத்தித்துறை சார்ந்த மூலப்பொருட்கள் … Read more

டொலரின் பெறுமதி 400 ரூபாவாகும்! ரணில் தெரிவிப்பு

டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி தொடச்சியாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் வாரமளவில் டொலரின்பெறுமதி 400 ரூபாவை அண்மிக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,  வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலர் தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளனர். மறுபுறம் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரித்த நிலையில் உள்ளன.இலங்கையில் தனிநபர் வருமானம் டொலரை விட குறைந்த மட்டத்திற்கு சென்றுள்ளது. நட்டமடையும் அரச நிறுவனங்கள் குறித்து அவதானம் செலுத்த … Read more

முதன் முறையாக கையில் குழந்தையை ஏந்தியபடி காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகையான காஜல் அகர்வால் பிரபல தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்பின்னர் நடிகை காஜலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இது தொடர்பான குழந்தையின் புகைப்படம் வெளியாகி வைரலாகி இருந்தது. தற்போது மார்டன் உடையில், புகைப்படம் ஒன்று வைரலாகி வரும் நிலையில், கையில் ஏந்தியப்படி குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஹேம்நாத்தால் கர்ப்பமான பெண்.. … Read more

இலங்கையை பொறுத்தவரை சற்று மோசமான நிலை! பிரதமரிடம் நேரடியாக கூறப்பட்ட விடயம் (Video)

 “பிரதமர் பதவியில் நீங்களே தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும், உங்களால் மட்டுமே நாட்டில் நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியும்” என பிரதமர் மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்த சர்வமதத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்துமத விவகாரங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் கலாநிதி இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் கலாநிதி ஹசன் மௌலானா உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள் நேற்று மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்த … Read more

பாவனி – அமீர் கல்யாணமா.. தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக கிசுகிசுக்கப்படுபவர்கள் நடிகை பாவனி மற்றும் நடன இயக்குனர் அமீர். நடிகை பாவனி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த சீரியலுக்கு பின் சில காலம் கழித்து மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தார். மேலும், தற்போது பாவனி – அமீர் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆட … Read more

இலங்கை விமான நிலையங்களில் நடைமுறைக்கு வரும் புதிய நடவடிக்கை – செய்திகளின் தொகுப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாட்டிலுள்ள விமான நிலையங்களில் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் பிரபு பிரிவுகளுக்காக உணவு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் சுதந்திர சேவை சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அதன் தலைவர் ஜானக விஜேபதிரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர … Read more

மகிந்த பதவி விலகினால் சிக்கப் போகும் பெரும் புள்ளிகள்! தப்பிக்கும் பிரயத்தனத்தில் அரசியல்வாதிகள்

சமகால அரசியல் நெருக்கடியில் யார் பதவி விலகுவது என்பது தொடர்பில் ராஜபக்சர்கள் மற்றும் அவர்களின் தொண்டர்களுக்கு இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.  நாளையதினம் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி உள்ளன.  இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மகிந்த பதவியில் இருந்து விலகி செல்வதை பாரிய மோசடிகளில் ஈடுபட்ட அவர்களின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் … Read more

மக்களுக்கு பயந்து தப்பியோடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

மக்களின் எதிர்ப்பு காரணமாக அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தமது இல்லங்களை விட்டு வெளியேறி தற்காலிக குடியிருப்புகளுக்குச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடாளுமன்றம் மற்றும் அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் வீடுகளை தற்காலிகமாக கைவிட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் அமைச்சர்கள் ஏற்கனவே தமது தனிப்பட்ட வீடுகள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தற்காலிகமாக கைவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் … Read more