தொடரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் – பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

அமைதிப் போராட்டமாக நடைபெற்று வந்த போராட்டம் மாற்றப்பட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு இதனை கூறியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு முதலில் நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும் பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது. ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமைதியான முறையில் தமது போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தும் இலங்கை மக்களின் ஜனநாயக … Read more

மியன்மாருக்கான இலங்கை தூதுவர் தனது கடமைகளை பொறுப்பேற்பு

மியன்மாருக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட ஜே.எம். ஜனக பிரியந்த பண்டார 2022 மே 02 ஆந் திகதி யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். கடமைகளை பொறுப்பேற்றவுடன் தூதுவராலய ஊழியர்களிடம் உரையாற்றிய தூதுவர், இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான தேரவாத பௌத்தத்தின் அடிப்படையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்தார். பரஸ்பர நன்மைக்காக இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார தொடர்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். தூதுவர் ஜனக … Read more

தேசிய கனிஷ்ட தடகள போட்டித்தொடர்

தேசிய கனிஷ்ட தடகள போட்டித்தொடர் கொழும்பு சுகததாஸ மைதானத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 16, 18, 20 மற்றும் 23 வயது பிரிவுகளில், நான்கு கட்டங்களின் கீழ் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இம்முறை தடகள போட்டிகளில் அதிகளவிலான வீர வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என நம்புவதாக இலங்கை தடகள போட்டி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பதவி விலகும் பிரசாரங்களால் கடும் மன உளைச்சலில் பிரதமர்

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தை மேலும் வேகமாக முன்னெடுக்க அரசாங்கத்திற்குள் இருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த பிரசார மாயையைக்குள் நாட்டின் முன்னணி பத்திரிகைகளும், செய்தி இணையத்தளங்களும் சிக்கியுள்ளதாக ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நேற்றிரவு உருவாக்கப்பட்ட இந்த பிரசாரத்திற்கு அமைய மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி பதவி விலக அனைத்தும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. எனினும் இந்த பிரசாரத்தை பிரதமரின் ஊடக செயலாளர் உத்தியோகபூர்வமாக மறுத்திருந்தார். … Read more

2021ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை

2021ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான அனுமதி மற்றும் பரீட்சை அட்டவணைகள் உரிய பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார். அனுமதிப் பத்திரங்கள் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர், பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை சாதாரண தரப்பரீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் … Read more

குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் பொதுவான சேவைகள்

இடைநிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு விநியோக நடவடிக்ணககள் நாளை மறுதினம் (09) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒரு நாள் சேவை தவிர்ந்த பொதுவான சேவைகளே இவ்வாறு இடம்பெறவுள்ளன. இதுதொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (07) விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:    

கொழும்பின் முக்கிய சந்தியில் வீதிகளை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்! போக்குவரத்து ஸ்தம்பிதம் (Live)

கொழும்பு ஆமர் வீதியில் முக்கிய சந்தியொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பல வீதிகளை மூடியுள்ளனர். இதனால் குறித்த வீதிகள் ஊடான போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. தமக்கு எரிவாயு கிடைக்கும் வரையில் தாம் இங்கிருந்து செல்லப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.  முதலாம் இணைப்பு கொழும்பு – ஆமர் வீதி பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எரிவாயு கொள்கலன்களுடன் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததுடன், அப்பகுதியில் பெருமளவானோர் ஆர்ப்பாட்டத்தில் … Read more

அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியமை, மக்களுடைய பொது வாழ்வைப் பாதுகாத்து சமூக நிலைபெறுதகுநிலையை உறுதிப்படுத்துவதற்கே

அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியமைஇ மக்களுடைய பொது வாழ்வைப் பாதுகாத்து சமூக நிலைபெறுதகுநிலையை உறுதிப்படுத்துவதற்கேயாகும் என்று என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: நேற்று (மே 06) தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அவர்கள் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியமைக்கான காரணம், சமகால பொருளாதார, சமூக நெருக்கடிகளை வெற்றிகொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புக்களுக்குத் தேவையான காரணிகளாகவுள்ள அரசியல் நிலைபெறுதகு நிலையை உறுதிப்படுத்தவும், மக்களின் பொது வாழ்வை தங்குதடையின்றி … Read more

ஜனாதிபதி கோட்டபாய அழைப்பு – பிரதமராக சஜித் பொறுப்பேற்க வாய்ப்பு

இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதவியேற்க வாய்ப்புள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது தொடர்பான எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் மீண்டும் இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தை நடத்தி … Read more

இலங்கையில் 15 மணி நேர மின்வெட்டு: ஏற்படப் போகும் அபாயம் தொடர்பில் நிதி அமைச்சரின் அறிவிப்பு

எதிர்காலத்தில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அலி சப்ரி  அமைச்சரவையில் இதனை  தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமாகி விட்டதாகவும், அந்நியச் செலாவணிக் கையிருப்பு 50 மில்லியன் டொலருக்கும் குறைவாக உள்ளதாகவும் அவர் கூறினார். பதவி விலகும் பிரசாரங்களால் கடும் மன உளைச்சலில் பிரதமர்  எதிர்காலத்தில் எரிபொருள் இருப்புகளை இறக்குமதி செய்வது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், அதற்கமைய மின்சார விநியோகம் பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். … Read more