ஜனாதிபதி கோட்டபாய அழைப்பு – பிரதமராக சஜித் பொறுப்பேற்க வாய்ப்பு

இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதவியேற்க வாய்ப்புள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது தொடர்பான எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் மீண்டும் இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தை நடத்தி … Read more

இலங்கையில் 15 மணி நேர மின்வெட்டு: ஏற்படப் போகும் அபாயம் தொடர்பில் நிதி அமைச்சரின் அறிவிப்பு

எதிர்காலத்தில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அலி சப்ரி  அமைச்சரவையில் இதனை  தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமாகி விட்டதாகவும், அந்நியச் செலாவணிக் கையிருப்பு 50 மில்லியன் டொலருக்கும் குறைவாக உள்ளதாகவும் அவர் கூறினார். பதவி விலகும் பிரசாரங்களால் கடும் மன உளைச்சலில் பிரதமர்  எதிர்காலத்தில் எரிபொருள் இருப்புகளை இறக்குமதி செய்வது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், அதற்கமைய மின்சார விநியோகம் பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். … Read more

பாரிய பொருளாதார நெருக்கடியால் கட்டுமான தொழில் வீழ்ச்சி: தொழிலாளர்கள் விசனம் (Photos)

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகக் கட்டுமான பணியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கட்டடப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக தற்பொழுது சிமெந்தின் விலை 2700 தொடக்கம் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்வதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “கட்டுமான பணிக்குத் தேவையான இதர பொருட்களும் பல மடங்கு அதிகரித்த விலை காரணமாக நமது தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்து … Read more

தன் வீட்டின் முன்னால் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரணில் கொடுக்கும் வாய்ப்பு

தனது வீட்டிற்கு முன்னால்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் ரணில் விக்ரமசிங்க தன்னை வந்து சந்திக்குமாறு தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பில் அமைந்துள்ள வீட்டுக்கு முன்னாலே இவ்வாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும் அவரின் ஆதரவாளர்கள் குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   இது குறித்து ரணில் மேலும் தெரிவிக்கையில், எனது வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விரும்பினால் சிறிகொத்தாவில் திங்களன்று என்னை … Read more

அவசரக்கால சட்டம் பிரகடனம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா (Photos)

இலங்கையில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தபட்டமை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கவலை வெளியிட்டுள்ளார். அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், ”மற்றொரு அவசர நிலை குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளது. அமைதியான குடிமக்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும் மற்றும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால்களுக்கு நாட்டை மீண்டும் செழிப்புக்கான பாதையில் கொண்டு வர நீண்ட கால தீர்வுகள் தேவை. அவசர நிலை அதற்கு உதவாது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.   Concerned by another State of … Read more

இலங்கையில் நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டம் தொடர்பில் வெளியான விசேட அறிக்கை (Photos)

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூக ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவுமே அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும், தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி. குறுகிய கால மற்றும் நீண்ட கால விளைவுகளுடன் கூடிய பல காரணிகளின் விளைவாக ஒட்டுமொத்தமாக சுதந்திரத்தின் பின்னர் இலங்கை தற்போது மோசமான பொருளாதார மற்றும் சமூக … Read more

எரிபொருள் தர பரிசோதனை குறித்து, எரிசக்தி – மின்சக்தி அமைச்சு விளக்கம் – காலி எரிபொருள் சம்பவம் குறித்தும் விசாரணைகள்

எரிபொருள் இறக்குமதிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது முதல், அதன் விநியோகம் வரையில் நான்கு கட்டங்களில் அதன் தரம்  பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே விநியோகிப்படுவதாக  எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் தரம் பற்றி சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சு அறிவித்துள்ளது. காலி எரிபொருள் விநியோக நிலையம் ஒன்றில் விநியோகிக்கப்பட்ட எரிபொருளின் தரம் பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எரிபொருள் நிரப்பும் நிலையத்திலுள்ள எரிபொருள் விநியோக தாங்கியில் நிரம்பியிருந்த நிலத்திற்கு கீழ் நீர் அகற்றப்படாது ,எரிபொருள் … Read more

நாட்டில் தனியார் பேருந்து சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் நேற்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய பொது நிர்வாக முடக்கல் போராட்டம் (ஹர்த்தால்) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் நேற்றைய தினம் போக்குவரத்து சேவை ஸ்தம்பிதமடைந்திருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் தனியார் போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பியிருந்தது. என்ற போதும் எரிபொருள் பிரச்சினை காரணமாக சேவைகளை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு … Read more

தமிழ் வர்த்தகரின் வீட்டில் ரகசிய அரசியல் சந்திப்பு – அசிங்கப்படுத்த வேண்டாம் என நடேசன் கோரிக்கை

பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்கத்தின் பலமான ஒருவருக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் தாயாருக்கும் இடையில் தனது வீட்டில் இல்லத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக முன்வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என தொழிலதிபர் திருகுமார் நடேசன் தெரிவித்துள்ளார். “திருமதி ஹேமா பிரேமதாச என்பவர் நான் மதிக்கும் ஒரு பெண்மனியாகும். கடந்த 10 வருடங்களாக நான் அவரை சந்திக்கவில்லை. மேலும், ஒரு வாரத்திற்கு மேலாக நான் இலங்கையில் இருக்கவில்லை. தொழில் விடயமாக வெளிநாடு சென்றிருந்தேன். மேலும், நீங்கள் கூறுவது போல் ஹேமா … Read more