தமிழ் வர்த்தகரின் வீட்டில் ரகசிய அரசியல் சந்திப்பு – அசிங்கப்படுத்த வேண்டாம் என நடேசன் கோரிக்கை

பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்கத்தின் பலமான ஒருவருக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் தாயாருக்கும் இடையில் தனது வீட்டில் இல்லத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக முன்வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என தொழிலதிபர் திருகுமார் நடேசன் தெரிவித்துள்ளார். “திருமதி ஹேமா பிரேமதாச என்பவர் நான் மதிக்கும் ஒரு பெண்மனியாகும். கடந்த 10 வருடங்களாக நான் அவரை சந்திக்கவில்லை. மேலும், ஒரு வாரத்திற்கு மேலாக நான் இலங்கையில் இருக்கவில்லை. தொழில் விடயமாக வெளிநாடு சென்றிருந்தேன். மேலும், நீங்கள் கூறுவது போல் ஹேமா … Read more

அவசர காலச் சட்டம் என்றால் என்ன…! அதன் ஆபத்துக்களும் விளக்கங்களும் – ஒரு மீள் பார்வை

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையில் வெளிநாட்டு கையிருப்பு மிக குறைந்த அளவிலேயே இருப்பதாக நிதி அமைச்சர் அண்மையில் நாடாளுமன்றில் அறிவித்திருந்தார். இவ்வாறான பின்னணியில் அத்தியாவசிய பொருட்களுக்கு நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாளுக்கு நாள் பொருட்களின் விலைவாசியும் உயர்ந்தவண்ணமுள்ளது. எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் பின்னணியில் நீண்ட நேரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளனர். ஜனாதிபதி செயலகம், … Read more

இலங்கையில் கலப்படமான எரிபொருள் – எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

எரிபொருட்களின் தரம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குருநாகல் – நாரம்மல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளின் தரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட எரிபொருள் மாதிரிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு ஆய்வுகூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எரிபொருள் பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. கடந்த ஐந்தாம் திகதி நாடளாவிய ரீதியில் சுமார் … Read more

பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் – நாமல் ராஜபக்ச வெளியிட்ட தகவல் (Video)

பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிபிசியிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளர். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், போதிய வருமானம் இன்றி வரிச்சலுகை வழங்கும் அரசின் முடிவு சரியல்ல என்றும் அவர் கூறினார். உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் பொருளாதாரத்தில் பணத்தை மீள முதலீடு செய்யும் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதி நம்பியவாறு அது நடக்கவில்லை எனவும் … Read more

மாலி அமைதிகாப்பு பணிகளுக்கான 4வது படைக்குழுவினர்

இரத்தினபுரி குருவிட்டவில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் இன்று காலை (4) மாலி ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக புறப்படும் 243 படையினர் அடங்கிய 4 வது குழுவினரின் பங்கேற்புடன் ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு சிவப்புகம்பள வரவேற்பளிக்கப்பட்டது. இராணுவத்தின் 12 படையணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 அதிகாரிகள் மற்றும் 223 சிப்பாய்கள் அடங்கிய குழுவினர் மே மாத இரண்டாம் வாரத்தில் … Read more

வத்தளையில் மூன்று கடைகளில் ஏற்பட்ட தீயை அணைக்க இலங்கை கடற்படை உதவி

வத்தளை, எலகந்த பிரதேசத்தில் இரண்டு மாடிக் கட்டிடமொன்றில் அமைந்துள்ளது மூன்று ஜவுளிக் கடைகளில் இன்று (மே 06) காலை ஏற்பட்ட தீயை இலங்கை கடற்படையினர் அணைத்துள்ளனர். தீ சம்பவம் பற்றிய தகவலைப் பெற்றதைத் தொடர்ந்து, கடற்படை தீயணைப்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து குடியிருப்பாளர்களின் உதவியுடன், தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் அதை  மேலும் பரவாமல் தடுத்ததாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீயை அணைப்பதற்காக கடற்படை  முகாம் கெமுனுவில் இணைக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டதாக கடற்படை தகவல்கள் … Read more

இலங்கையை அழிக்காமல் உடனடியாக பதவி விலகுங்கள்: கொந்தளித்த சங்கக்காரவின் மனைவி

இலங்கையை அழிக்காமல் உடனடியாக பதவி விலகுமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் மனைவி யெஹாலி சங்கக்கார,  கோரிக்கை விடுத்துள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  இதேவேளை, தேசிய நெருக்கடிக்கு அரசாங்கம் இன்னும் தீர்வை வழங்கவில்லை என்றும்,மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். Source link

2021(2022) க.பொ.த (உ/த) பரீட்சை நாடகம், கலை நடைமுறைப் பரீட்சை குறித்து விசேட அறிவிப்பு

2021(2022) க.பொ.த (உ/த) பரீட்சையில் நாடகம் மற்றும் கலைக்கான (சிங்கள/தமிழ்) நடைமுறைப் பரீட்சைகளில் இன்று (06) தோற்ற முடியாமல் போன பரீட்சார்த்திகள் , நாளை (07) தமக்கான பரீட்சை மண்டபத்திற்கு சென்று செயல் முறை பரீட்சைக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிகொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன இன்று(06) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பரீட்சை; ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன இதனை குறிப்பிட்டுள்ளார்..

அவசரகால நிலையை பிரகடனம் செய்த ஜனாதிபதி – கனடா கடும் கண்டனம் (Photo)

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் குறித்து கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார். “கடந்த வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அமைதியான கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அனுபவிக்கும் குடிமக்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெருமையாகும். அப்படியானால், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானது” என கனேடிய உயர்ஸ்தானிகர் ட்வீட் செய்துள்ளார். இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக … Read more