அவசரகால நிலையை பிரகடனம் செய்த ஜனாதிபதி – கனடா கடும் கண்டனம் (Photo)

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் குறித்து கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார். “கடந்த வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அமைதியான கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அனுபவிக்கும் குடிமக்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெருமையாகும். அப்படியானால், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானது” என கனேடிய உயர்ஸ்தானிகர் ட்வீட் செய்துள்ளார். இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக … Read more

விசேட வர்தமானி அறிவிப்பு

இன்று (06)  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ,அவசரகால சட்ட நிலை  பிரகடனத்திற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் நலனைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ,அவசர காலச் சட்ட நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக விசேட வர்த்மானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, http://documents.gov.lk/files/egz/2022/5/2278-22_T.pdf

நாடாளுமன்றம் அருகில் பதற்றம் – போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் (Video)

நாடாளுமன்றம் அருகில் மீண்டும் போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பாலமுனை சம்பவம்:ஆராய்வதற்கென பொலிஸ் குழு

அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை பிரதேசவாசிகளுக்கும் பொலிசாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சம்பவம் பற்றி விசாரிக்கவென விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பாலமுனை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைக்கு அருகில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை நிறுத்துவதற்கு பொலிசார் முயன்ற போது அவர் பொலிசாரின் உத்தரவையும் மீறி தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதன்போது அவர் சறுக்கி விழுந்ததைத் தொடர்ந்து அந்த இடத்திற்குச் சென்ற கும்பலொன்று பொலிசார் மீது தாக்குதல் நடத்தியமை தெரியவந்துள்ளது. … Read more

பொலிஸாரின் அறிவிப்பு

நாட்டில் பல்வேறு குழுக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். ஜனநாயக முறையில் போராடுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. எனினும் குழப்பம் விளைக்கும் வகையில் செயறப்படுதல், பொது மக்கள் அல்லது பொது பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அதன்படி, அமைதியான முறையில் ஆர்ப்பாட்ட பேரணிகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சரவையில் கடும் வாக்குவாதம் – ராஜினாமா செய்ய தயாராகும் அமைச்சர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி முற்றுப்புள்ளி இன்றி தொடர்ந்த வண்ணமே உள்ளது.  இந்நி்லையில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் அண்மையைில் பதவியேற்ற அமைச்சரவை மீண்டும் கலைப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  சமகால அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் பதவி விலகுவது குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.  இதன்போது கடும் கோபம் அடைந்த ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் கடும்வாக்குவாதம் இடம்பெற்றதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.  விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு இன்று ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கமைய இன்று … Read more

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் நியமனம்…

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று, (06) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். 1960இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் முதல் தரப் பட்டம் பெற்ற பேராசிரியர் ஜி.எச் பீரிஸ் அவர்கள், 1965இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார புவியியல்  துறையில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக தனது முதல் நியமனத்தைப்பெற்ற அவர், 44 வருடங்களாக பல்கலைக்கழக … Read more

பரபரப்பான சூழ்நிலையிலும் பலரின் கவனத்தை ஈர்த்த பொலிஸ் அதிகாரி

அரசாங்கத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கலைப்பதற்கு, சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் இன்று பிற்பகல் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதன் போது நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் மாணவர்கள் மீது பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டனர். இந்த நிலையில் அங்கிருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கையில் காயத்துடன் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு குறித்த … Read more