பரபரப்பான சூழ்நிலையிலும் பலரின் கவனத்தை ஈர்த்த பொலிஸ் அதிகாரி

அரசாங்கத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கலைப்பதற்கு, சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் இன்று பிற்பகல் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதன் போது நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் மாணவர்கள் மீது பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டனர். இந்த நிலையில் அங்கிருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கையில் காயத்துடன் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு குறித்த … Read more

ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொலிஸார் முன்வைத்த கோரிக்கை: நீதிபதி எடுத்த முடிவு – செய்திகளின் தொகுப்பு

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் போராட்டம் தொடர்பில் பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையைப் பரிசீலிப்பதிலிருந்து கொழும்பு நீதவான் ஹர்ஷன கெகுனாவல விலகியுள்ளார். கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த போராட்டம் தொடர்பாக 102 வழக்குகள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கோட்டை பொலிஸ் தரப்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஷவீந்திர விக்ரம தெரிவித்தார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை … Read more

வடமாகாண கிராமப்புற பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் வழமை போன்று

வடமாகாணத்தில் இன்றைய தினம் கிராமப்புற பாடசாலைகள் வழமை போன்று நடைபெறுவதாக மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் ரி. ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். இன்று எமது செய்திப் பிரிவிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கு, இன்றைய தினம் பஸ் சேவை இடம்பெறாமை மற்றும் எரிபொருள் பிரச்சினை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூகமளிக்காமையினால் பாடசாலை கல்வி செயற்பாடுகள் இடம்பெறவில்லை. Logini Sakayaraja

தேசிய ரணவிரு நினைவு மாதம் பிரகடனம்…

ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி இன்று, (06) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வுபெற்ற) அவர்கள், முதலாவது ரணவிரு கொடியை ஜனாதிபதி அவர்களுக்கு அணிவித்தார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுதந்திரமான நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த, துணிச்சலான போர் வீரர்களை ரணவிரு மாதம் நினைவுகூருகிறது. ஜனாதிபதி அவர்களுக்கு தேசிய … Read more

சபாநாயகர் அறைக்குள் நுழைந்த சஜித் அணியினர்! பெரும் கூச்சல் (Photo)

நாடாளுமன்றத்தில்  விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்குமாறு  கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் அறைக்கு சென்றுள்ளனர். அங்கு சபாநாயகரை சந்தித்து நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எவ்வாறாயினும் சபாநாயகர் கோரிக்கையை நிராகரித்ததை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கத்தி பெரும் கூச்சலிட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதேவேளை, நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  Source link

பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.  சபையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் விசேட அறிக்கையொன்றை  சபாநாயகர் வெளியிட்டார்.  

ஐ.பி.எல் கிரிக்கெட் – டெல்லி அணி அபார வெற்றி

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று (05) நடைபெற்ற போட்டியில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. ஐ.பி.எல் தொடரில் நேற்று (05) மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி களத்தடுப்பில் ஈடுப்பட்டது. இதனால், முதலில் துடுப்பாட்டத்தை செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 207 … Read more

காலி முகத்திடல் போராட்டத்தில் தமிழீழத்திற்கு பாதை அமைக்கப்பட்டால்..! பௌத்த மதத்தின் மீது தாக்குதல் நடந்தால் – பகிரங்க எச்சரிக்கை (Photos)

பௌத்த மதத்தை அவமதித்து வேறு மதத்தை ஊக்குவித்து நடந்து கொள்வார்களாக இருந்தால் அவர்களை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், காலிமுகத்திடலில் பௌத்த மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றால், பௌத்த பிக்குகள் அவமதிக்கப்படுவார்களாக இருந்தால், தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி அவமதிக்கப்படுமாக இருந்தால், தமிழீழத்திற்கு பாதை அமைக்கப்படுமாக இருந்தால், பௌத்த … Read more

எதிர்வரும் திங்கட்கிழமை நான்காவது டோஸ் தடுப்பூசி வழங்க நடவடிக்கை

கொவிட் 19 வைரசு தொற்றுக்கெதிராக வழங்கப்படும் நோய்த்தடுப்பு தடுப்பூசியின், நான்காவது டோஸை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்தார். இதற்கமைவாக பூஸ்டர் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டார். 20 – 60 வயதிற்கு … Read more