உலக அளவில் கொரோனா:இதுவரை 62 லட்சத்து 71 ஆயிரத்து 889 பேர் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51.57 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 57 லட்சத்து 92 ஆயிரத்து … Read more

பொது மக்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் – இன்று காலை ஏற்பட்ட அசம்பாவிதம்

அம்பாறையில் தலைக்கவசம் அணியாத நபரை பொலிஸார் கொடூரமாக தாக்கியமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பலர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிலில் தலைக்கவசம் அணியாமல் சென்ற நபரை பொலிஸார் நிறுத்திய போதும் நிறுத்தாமல் சென்றமையினால் அவரை கொடூரமாக தாக்கியதாக தெரியவருகிறது. பொலிஸாரின் தாக்குதல் காரணமாக படுகாயமுற்ற … Read more

பாராளுமன்றத்தில் இன்றும் ,சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் மீதான விவாதம்

பாராளுமன்றம் மீண்டும் ,இன்று (06) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. வழமையான அலுவல்களையடுத்து, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை மேற்கொண்ட பேச்சுவார்த்தை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் இன்றும் இடம்பெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் நிதியமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (06)  இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் … Read more

பேருந்தில் ஒரு ரூபாவை குறைத்து வழங்கிய முதியவரை கொடூரமாக தாக்கிய நடத்துனர்

பொலன்னறுவை பகுதியில் பேருந்தில் ஒரு ரூபாவை குறைத்து வழங்கிய முதியவரொருவரை பேருந்து நடத்துனர் தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 72 வயதான சிறுநீரக நோயாளர் ஒருவர் பேருந்து கட்டணத்தை விடவும் ஒரு ரூபாவை குறைத்து வழங்கியமையால், கோபமடைந்த பேருந்து நடத்துனர் முதியவரை தாக்கியுள்ளார். இதன்போது காயமடைந்த நோயாளர் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை போக்குவரத்து சபையின் பொலன்னறுவை பேருந்து சாலையில் சேவையாற்றும் பேருந்து நடத்துனரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். இதன்போது பேருந்தில் பயணித்த சிலர் அதனை காணொளியாக பதிவு … Read more

நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம்! – வங்கிப் பணிகள் பாதிப்பு – போக்குவரத்து முடக்கம் (Photo)

நாடு தழுவிய ரீதியில் இன்று முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்த முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளர். அத்துடன், நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தனியார் … Read more

முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாடு செல்வதற்கான தடை மேலும் நீடிப்பு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாடு செல்வதற்கான தடை எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் ஹர்ஷன கெக்குனவல இன்று (05) இந்த உத்தரவை பிறப்பித்தார். ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு அழைப்பாணை விடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். இவரை கடந்த இரண்டாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜாராகுமாறு நீதவான் அழைப்பாணை விடுத்திருந்தது. இருப்பினும் அன்றைய தினம் பொது … Read more

நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் – பொலிஸார் விடுத்துள்ள விசேட கோரிக்கை

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் நாளைய தினம் முன்னெடுக்கவுள்ள ஹர்த்தாலை முன்னிட்டு அமைதியான போராட்டங்களில் ஈடுபடுமாறு பொதுமக்களிடம் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண வேண்டுகோள் விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இதனை குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வணிக நிறுவனங்களை மூடுமாறு அச்சுறுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

பாராளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழுவின் அனுமதி

இரு அமைச்சுக்களின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஒருவர் மற்றும் 3 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு இன்று (05) பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று இடம்பெற்ற பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் இந்த அனுமதி வழங்கப்பட்டது. தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த மைக்கல் டி. சில்வா, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் டி.எம்.ஐ. பண்டாரநாயக்க மற்றும் … Read more

ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரின் உதவி உயர்ஸ்தானிகர் (பாதுகாப்பு) மற்றும் தூதுக்குழுவினர் சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரின் உதவி உயர்ஸ்தானிகர் (பாதுகாப்பு) கில்லியன் ட்ரிக்ஸ் தலைமையிலான குழு, 2022 ஏப்ரல் 28ஆந் திகதி சான்சரி வளாகத்தில் வைத்து பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரனைச் சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடியது. இந்த சந்திப்பில், உதவி உயர்ஸ்தானிகர் கில்லியன் ட்ரிக்ஸ் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு உதவுவதற்காக இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தின் முயற்சிகளை சிறப்பாக எடுத்துரைத்துப் பாராட்டினார். ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பணியகத்தின் … Read more