ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரின் உதவி உயர்ஸ்தானிகர் (பாதுகாப்பு) மற்றும் தூதுக்குழுவினர் சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரின் உதவி உயர்ஸ்தானிகர் (பாதுகாப்பு) கில்லியன் ட்ரிக்ஸ் தலைமையிலான குழு, 2022 ஏப்ரல் 28ஆந் திகதி சான்சரி வளாகத்தில் வைத்து பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரனைச் சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடியது. இந்த சந்திப்பில், உதவி உயர்ஸ்தானிகர் கில்லியன் ட்ரிக்ஸ் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு உதவுவதற்காக இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தின் முயற்சிகளை சிறப்பாக எடுத்துரைத்துப் பாராட்டினார். ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பணியகத்தின் … Read more

இலங்கையில் எரிபொருள் வழங்குவதற்கு இன்று முதல் வரையறை

எரிபொருள் வழங்குவதில் இன்று முதல் மீண்டும் வரையறைகள் விதிக்கப்படவுள்ளன. இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் சிற்றுந்து, மகிழுந்து மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு 8,000 ரூபாவுக்கும் எரிபொருள் வழங்கப்படவுள்ளது. எனினும், இந்த எரிபொருள் விநியோக கட்டுப்பாடு பேருந்து, பாரவூர்தி மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இல்லை எனவும் இலங்கை பெட்ரோலியக்  கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. Source link

நாளை ,வழமையான ரெயில், பஸ் சேவைகள்

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அனைத்து பஸ்களும் நாளை வழமையான முறையில் சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. அனைத்து தொழிற்சங்கங்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். நாளை போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து பஸ்களுக்கும் தேவையான பாதுகாப்பை வழங்குமாறு உரிய பிரிவினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐயாயிரத்து 200 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதில் ஆயிரத்து 500 பஸ் வண்டிகள் தூர இடங்களுக்காக இணைத்துக் … Read more

மீண்டும் வரையறுக்கப்பட்ட அளவில் எரிபொருள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை இன்று முதல் மீண்டும் மட்டுப்படுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம் இரண்டாயிரம் ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டிகளுக்கு மூவாயிரம் ரூபாவாகும், கார், வேன் மற்றும் ஜீப் வண்டிகள் ஆகிய வாகனங்களுக்கு எண்ணாயிரம் ரூபாவாகவும் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் விநியோக மட்டுப்படுத்தலானது பஸ்கள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு பொருந்தாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு … Read more

நாடாளுமன்ற வளாகத்தில் ஹொரு கோ கம உருவானது! (VIDEO)

அரசாங்கத்திற்கு எதிராக கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம உருவாகியுள்ள நிலையில், தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் ஹொரு கோ கம உருவாகியுள்ளது. நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியில் கோட்டா கோ கம என்ற மாதிரி கிராமமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், அலரி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அந்த பகுதியில் மைனா கோ கம என்ற … Read more

தேசிய சட்டமன்றத்தின் தலைவரும் தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான சுவான் லீக்பாய் 700,000 தாய் பாட்களை இலங்கைக்கு கையளிப்பு

தேசிய சட்டமன்றத்தின் தலைவரும் தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான சுவான் லீக்பாய் 700,000 தாய் பாட் பெறுமதியான காசோலையை தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்காப்பின் நிரந்தரப் பிரதிநிதியான சி.ஏ. சமிந்தா ஐ. கொலொன்ன அவர்களிடம் 2022 ஏப்ரல் 25ஆந் திகதி பேங்கொக்கில் உள்ள பாராளுமன்றத்தில் வைத்து கையளித்தார். இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ எடுத்த தனது முயற்சிக்கு ஆதரவளித்தமைக்கு நன்றி தெரிவித்த அதேவேளையில், ரத்தனகோசின் காலத்திலிருந்து பௌத்தத்தின் அடிப்படையில் தாய்லாந்துடன் நீண்டகால உறவை … Read more

பிரதமர் பதவியை எனக்கு கொடுங்கள் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுகிறேன் – பசில் கோரிக்கை

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி தனக்கு வழங்கப்படுமாயின் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை பலத்தை தன்னால் நிரூபிக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள கூறுகின்றன. இதற்கு முன்னர், தனக்கு இதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு பசில் ராஜபக்ச, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன் அதற்கு பதில் கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிரதி சபாநாயகர் பதவி தொடர்பான வாக்கெடுப்பின் போது பொதுஜன பெரமுன … Read more

செயற்படாத கடன்களாகவுள்ள 54 பில்லியன் ரூபா வழங்கப்பட்ட விதம் தொடர்பில் முழுமையான அறிக்கையை ஒரு மாதகாலத்துக்குள் வழங்கவும்

தனியார் நிறுவனங்கள் பலவற்றுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டு தற்பொழுது செயற்படாத கடன்களாகவுள்ள 54 பில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்ட நிறுவனங்கள், அவை மதிப்பிடப்பட்ட விதம் மற்றும் இவற்றை அனுமதிப்பதற்கு தொடர்புபட்ட அதிகாரிகள் உள்ளிட்ட விடயங்களைக் கொண்ட முழுமையான அறிக்கையொன்று ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷவுக்குப் பணிப்புரை விடுத்தார். இது தொடர்பான விபரங்கள் அடுத்த கோப் குழுக் … Read more

நெற் செய்கைக்குத் தேவையான இரசாயன உரத்தை விரைவில் வழங்க நடவடிக்கை

  நெற் செய்கைக்குத் தேவையான இரசாயன உரத்தை விரைவில் வழங்குவதாக விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜானக்க வக்கும்புற தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்த அமைச்சர் சிறு போக உற்பத்திக்கு தேவையான திண்ம மற்றும் திரவ கரிம உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் nமைச்சர் கூறினார்.யூரியா உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளது. அதன்படி, 65 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உர நிறுவனம் இதற்கான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. உர விநியோகத்திற்காக … Read more

எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம்

கடந்த மாதம் 18ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெட்ரோலியக்  கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்தித்து வருகின்றது  என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விலைகள் அதிகரித்துள்ள போதிலும் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவை நடத்திலேயே விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யும் குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக நட்டம் அதிகரித்து … Read more