எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம்

கடந்த மாதம் 18ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெட்ரோலியக்  கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்தித்து வருகின்றது  என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விலைகள் அதிகரித்துள்ள போதிலும் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவை நடத்திலேயே விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யும் குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக நட்டம் அதிகரித்து … Read more

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர் மகிந்த

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழக முதல்வர் உதவி வழங்க முன்வைத்துள்ளமை குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய உணவுப்பொருட்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக, தமிழக முதல்வர் மு.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பில் பிரதமர் செயலகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  இலங்கையின் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சினையாக பார்க்காது மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களிக்கும் தமிழ்நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பில் … Read more

திருகோணமலை மாவட்ட கடமைகளை பொறுப்பேற்றார்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பி.எச்.என்.ஜயவிக்ரம தமது கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றார். “திருகோணமலை மாவட்டம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகும். பல்லினங்கள் மற்றும் பல மொழிகளை பேசும் மக்களை கொண்ட மாவட்டமாகும். நாடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் தமக்கு இந்நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது. தமக்கு வழங்கப்பட்ட இந்நிமனத்திற்கான பொறுப்புக்களை இன மத மொழி வேறுபாடின்றி மேற்கொள்வதாக” … Read more

நாடாளுமன்ற வளாகத்தில் கடும் பதற்ற நிலை

நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகளை தகர்த்து மாணவர்கள் உள்நுழைய முற்பட்ட நிலையில் இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.    Source link

டெஸ்ட், ஒருநாள் போட்டி, ரி-ருவென்டி போட்டிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுத்தல் 

டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், ரி-ருவென்டி போட்டிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுத்தல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தலில் அவுஸ்திரேலிய அணி முதலிடத்திலுள்ளது. இரண்டாவது இடத்தில் இந்திய அணியும், மூன்றாமிடத்தில் நியூசிலாந்து அணியும் உள்ளன. நான்காமிடத்தில் தென்னாபிரிக்க அணியும், ஐந்தாமிடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன. ஏழாவது இடத்தில் இலங்கையும் உள்ளன. ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்திலும், இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. மூன்றாமிடத்தில் அவுஸ்திரேலிய அணியும், நான்காம் இடத்தில் இந்திய அணியும் ஐந்தாமிடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன. எட்டாவது … Read more

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை அணி

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக 18 வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி எதிர்வரும் 8 ஆம் திகதி பங்களாதேஷிற்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கமைய முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியொன்றில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 15 ஆம் திகதியும், … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளை முதல் நீக்கப்படும் சேவைகள்

நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் நாளை முதல் சில சேவைகளை விலக்கிக் கொள்வதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இன்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர். அதற்கமைய அனைத்து விமான நிலையங்களிலும் விசேட பிரமுகர் முனைய நுழைவாயில்களுக்கான சேவையில் இருந்து விலகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒரு தீர்வு எட்டப்படும் வரை விசேட பிரமுகர் முனைய நுழைவாயில்களுக்கான … Read more

இன்றும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 05ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான … Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த பாராளுமன்றத்தில் விவாதம்

சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்களின் கீழ் நிதி அமைச்சரினால் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட கூற்றுத் தொடர்பான விவாதம் பி.ப 5.30 மணி வரை நடைபெற்றது. பாராளுமன்றம் நேற்று  மு.ப 10.00 மணிக்குக் கூடியதுடன், அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் “கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு  சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின்  தீர்ப்பை … Read more

நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

விக்ரம் தமிழ் திரையுலகில் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் விக்ரம். இவருடைய நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த திரைப்படம் மஹான். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. ஆனால், படத்தில் நடித்திருந்த நடிகர்களின் நடிப்பு வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. சொத்து மதிப்பு இந்நிலையில் நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 150 … Read more