குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் வழமைபோன்று

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் இன்று (04) வழமைபோன்று இடம்பெறுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் செயலிழப் காரணமாக, இன்றைய தினம் அத்தியாவசிய சேவை மற்றும், ஏனைய சேவைகளுக்காக விஜயம் செய்வதை தவிர்த்து கொள்ளுமாறு நேற்று (03) பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக திணைக்களத்தின் ஒரு நாள் சேவையில் தாமதம் ஏற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது . இருப்பினும் தற்பொழுது இந்த திடீர் செயலிழப்பு சரிசெய்யப்பட்டு வழமையான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் … Read more

ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எந்த பிரேரணைக்கும் ஆதரவு வழங்கப்படமாட்டாது

ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று அரசாங்க தரப்பில் இருந்து தனி குழுவாக செயற்படும் 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று (03) கொழும்பில் இடம்பெற்ற பேச்சு வார்தைகளின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை, எந்தவித அர்த்தமும் அற்றதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

திடீர் காய்ச்சல் காரணமாக 11 மாதக் குழந்தை மரணம்! யாழில் சம்பவம்

 திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக 11 மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.   யாழ். கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்று காலை குழந்தைக்கு காய்ச்சல் இருந்தமையினால் பனடோல் கொடுக்கப்பட்டுள்ளது எனினும் பிற்பகல் 2 மணிக்கு காய்ச்சல் கடுமையாக இருந்தமையினால் குழந்தை மிருசுவில் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் … Read more

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சாகர் கோட்பாட்டால் தொடர்ந்து வழிநடத்தப்படும் இந்தியா

இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி மருந்துகள் மற்றும் மருத்துவப்பொருட்கள் உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்களால் சுகாதாரத்துறை அமைச்சர் கௌரவ சன்ன ஜயசுமன அவர்களிடம் 2022 ஏப்ரல் 29 ஆம் திகதி கொழும்பில் கையளிக்கப்பட்டது. இம்மருத்துவப்பொருட்கள் அடங்கிய தொகுதி இந்தியக் கடற்படைக் கப்பல் கரியால் மூலமாக கொண்டுவரப்பட்டதுடன் பேராதனை போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளன. இப்பொருட்களை துரிதமாக இலங்கைக்கு விநியோகிப்பதற்காக இந்திய கடற்படைக் கப்பலான கரியால் சேவையில் அமர்த்தப்பட்டமையானது இலங்கைக்கும் அந்நாட்டு மக்களின் … Read more

தமிழர்கள் ஏன் கோட்டாகோகமவிற்கு செல்வதில்லை

Courtesy: ஜெரா இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி இன, மத பேதமின்றி அனைவரையும் தாக்கியிருக்கிறது. சுனாமிக்குப் பின்னர் இன, மத பேதம் கடந்து இலங்கை வாழ் இனங்கள் எதிர்கொள்ளும் பேரிடர் இது. போர், கலவரங்கள், போன்றவற்றை இத்தீவு இடர்களாக எதிர்கொண்ட போதிலும் அவை தமிழர்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தின. இம்முறை ஏற்பட்டிருக்குப் இப்பொருளாதாரப் பேரிடரானது அனைத்துத் தரப்பினரையும் மிக மோசமாகத் தாக்கியிருக்கின்றது. இதிலிருந்து மீ்ள்வதற்கே பல ஆண்டுகள் எடுக்கலாம் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள். இந்தப் பொருளாதாரப் பேரிடரை, … Read more

இலங்கையின் பரந்தளவான தேவைகளை தொடர்ச்சியாக நிறைவேற்றிவரும் இந்திய உதவிகள்

2022ஆம் ஆண்டில் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான பொருளாதார உதவியானது இலங்கை மக்களினதும் அரசாங்கத்தினதும் பரந்தளவிலான தேவைகளை நிறைவேற்றுவதில் மிகவும் வலுவான ஆதாரமாக காணப்படுகின்றது. 2.  உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி திட்டமானது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுடன், அத்திட்டத்தின் கீழ் புதுவருடத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட 16000 மெட்ரிக்தொன் அரிசி நாடளாவிய ரீதியில் உள்ள சதோச … Read more

பதவி விலகமாட்டேன்! உறுதியாக அறிவித்தார் மகிந்த

 அழுத்தங்களுக்கு அடிபணிந்து  பதவி விலகப் போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரவித்துள்ளார்.   அதேசமயம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கவும் தாம் தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே பிரதமர்  இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகள் மற்றும் , முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்கப்படும் எனவும் பிரதமர்  தெரிவித்துள்ளார். Source link

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அபாய நிலை! வரலாற்றுத் தவறை ஏற்றுக்கொண்டது அரசாங்கம் – நிதி அமைச்சர் கடும் எச்சரிக்கை (Video)

நாட்டில் தற்போது பற்றாக்குறையாக உள்ள  அத்தியாவசியப் பொருட்கள் எதிர்வரும் காலங்களில் நாட்டில் முற்றாக இல்லாமல் போகும் அபாயம் இருப்பதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  இந்நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நாடாளுமன்றத்திலும், ஒட்டுமொத்த … Read more

கொழும்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொள்ளுப்பிட்டி அலாி மாளிகைக்கு முன்னார் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களை உடனடியாக அகற்றுமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். நடைபாதை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், வீதியில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் சகல கட்டமைப்புகளையும் அகற்றுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். சமகால அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் பொது மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் பதவி விலக வேண்டும் … Read more