மட்டக்களப்பில் 138 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சூரிய சக்தி மின்சார உற்பத்தி நிலையம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு 138 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சூரிய சக்தியினைப் பயன்படுத்தி 200 மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத்திட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக விசேட கலந்துரையாடல் நேற்று (03) கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டுமான வசதிகள் இராஜாங்க அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இத்திட்டத்திற்கான அனுமதி, இட ஒதுக்கீடு போன்ற பல முக்கிய விடயங்கள் … Read more

மீண்டும் மின்வெட்டு! நேரம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று (04) 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இரண்டு பிரதான வலயங்களில் காலை 09.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை மின்வெட்டு  நடைமுறைப்படுத்தப்படும்  என மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய மண்டலங்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை 02 மணி நேரமும், மாலை 05.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை … Read more

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று (04) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. இதன் போது ,நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பில்  சபைக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது. நிதி அமைச்சர் இதுதொடர்பில் விளக்கமளிப்பார். பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது. கடந்த மார்ச் மாதம் எட்டாம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோப் குழு அறிக்கைள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதமும் … Read more

பல இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு … Read more

பரபரப்பிற்கு மத்தியில் கூடும் நாடாளுமன்றம்: இன்றையதினம் ஏற்படவுள்ள பல அதிரடி திருப்பங்கள்

நாடாளுமன்றம் இன்றைய தினம் மீண்டும் கூடவுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் இன்றைய தினம் மிகவும் முக்கியமான நாளாக அமையும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளதுடன் மறுபுறம் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் பதவி விலகினால், ஒட்டுமொத்த அமைச்சரவையும் தானாகவே கலைக்கப்பட்டு அரசாங்கம் ஒன்று இல்லாத நிலைமை ஏற்படும். இந்நிலையில், … Read more

சேவைகள் வழமைக்கு: பொது மக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

பொது மக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக இன்றைய தினம் தமது அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நேற்றைய தினம் அறிவுறுத்தியிருந்தது. கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ஒரு நாள் சேவைகளிலும் தாமதம் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோளாறு திருத்தம் செய்யப்பட்டு சேவைகள் வழமை போன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்படுவதாக … Read more

மகிந்தவின் பதவி விலகல் குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பல ஊகங்கள் மற்றும் அறிக்கைகள் வெளியாகியிருந்த போதிலும், பிரதமர் பதவி விலக மாட்டார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட மற்றும் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி. காசிலிங்கம் ஆகியோர், பிரதமர் பதவி விலகப் போவதில்லை என்றும், அதற்கு நேர்மாறான தகவல்கள் அல்லது அறிக்கைகள் “தவறானவை” என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து கொழும்பு ஆங்கில் … Read more

இத்தாலி செல்ல முற்பட்ட இலங்கையர்கள் ஐவர் கைது!

போலி விசாக்களை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் தனது 14 மற்றும் 18 வயதுடைய மகள்களுடன் கத்தாரின் தோஹா ஊடாக இத்தாலிக்கு செல்வதற்காக நேற்று இரவு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். எவ்வாறாயினும், அவர்களின் விசா ஆவணங்கள் … Read more

அலரிமாளிகை வளாக பகுதியில் மக்கள் மத்தியில் குழப்ப நிலை (Video)

அலரிமாளிகை வளாகத்தில் மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் பகுதியில் இன்றைய தினம் மக்களுக்கு இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.   குறித்த பகுதியில் பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான பதாதையொன்றை நபரொருவர் இன்று காட்சிப்படுத்தியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏனைய மக்கள் குறித்த நபருடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராகவே தாம் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், இங்கு பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிஸாருடன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முறுகலை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் எனவும் … Read more