அலரிமாளிகை வளாக பகுதியில் மக்கள் மத்தியில் குழப்ப நிலை (Video)

அலரிமாளிகை வளாகத்தில் மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் பகுதியில் இன்றைய தினம் மக்களுக்கு இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.   குறித்த பகுதியில் பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான பதாதையொன்றை நபரொருவர் இன்று காட்சிப்படுத்தியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏனைய மக்கள் குறித்த நபருடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராகவே தாம் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், இங்கு பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிஸாருடன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முறுகலை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் எனவும் … Read more

வீதியில் டயர்களை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டம் – கொழும்பு புறநகர் பகுதியில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு – ஹொரணை பிரதான வீதியின் பொகுந்தர பிரதேசத்தில் வீதியை மறித்து இன்று (03) இரவு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. எரிபொருட்கள் கிடைக்காத காரணத்தினால் எரிபொருள் வரிசையில் காத்திருந்த மக்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீதியில் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியின்மையுடன் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.00 மணியளவில் பொகுந்தர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் சேகரிப்பதற்காக வந்திருந்த போதிலும், மாலை 5.00 மணியளவில் எரிபொருள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் … Read more

பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்க மாட்டோம் – தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு நன்றி கூறிய ஜனாதிபதி (Photo)

 குறுகிய அரசியல் நலன்களை முன்னிறுத்தி மக்களை சங்கடப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 6ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். இன்று (03) பிற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இக்கலந்துரையாடலின் போது, ​​அத்தியாவசிய சேவை வழங்குனர்கள் பலவற்றின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தமது பணிகளைத் தொடர்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரிவித்தனர். தற்போதைய … Read more

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செய்வதற்கு எதிர்பார்க்கப்படும்  வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம்…  

குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் 06ஆம் திகதி நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்திற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என பல அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தமது சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இன்று (03) பிற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய … Read more

நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிடக் காத்திருக்கும் ஒரு குழு

அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத வளாகத்தைச் சுற்றி பேருந்துகளின் மூலம் முற்றுகையிட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   கொழும்பில் இன்றையதினம்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இம்மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் பிரசாரத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. Source link

பிரதமர் பதவியில் திடீர் தீர்மானம் – பிரதமர் செயலகம் வெளியிட்ட அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை காட்ட எந்தவொரு கட்சியும் தயாராக இருந்தால், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுமாயின் ஜனாதிபதி கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்து புதிய பிரதமரை அறிவிக்க வேண்டும் என்பதே மகிந்தவின் கருத்தாக இருப்பதாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அப்படி இல்லாமல் பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவை கலைக்கப்பட்டு குழப்பமான சூழ்நிலை உருவாகலாம் எனவும் … Read more

குறைந்த வருமானத்தைக்கொண்ட 33 இலட்ச மக்களுக்கு 3 மாதங்களுக்கு மேலதிக கொடுப்பனவு

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் சிரமங்களுக்குள்ளாகியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி வழங்குதற்கு அமைச்சரவையில் நேற்று (02) தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். இதன் … Read more

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கி காலி முகத்திடலில் போராட்டம்(video)

காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கிய பதாகை காட்சிக்காக  வைக்கப்படுகின்றது.  இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள்  ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  இந்த நிலையில் கொழும்பு காலி முகத்திடலில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டக் களத்தில் இலங்கையில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன. எனினும், கடந்த சில … Read more

பெருநாள் முழுவதும் மண்ணெண்ணெய் தேடி அலைவதிலேயே முடிந்தது: சலிப்பின் உச்சத்தில் முஸ்லிம் மக்கள்

நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான முறையில் சந்தோசமாகப் பெருநாளைக் கொண்டாட முடியவில்லை; மண்ணெண்ணெய் தேடி அலைவதிலேயே பெருநாள் முடிந்தது என இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.  அவர்கள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மண்ணெண்ணெய்யுமில்லை, எரிவாயுவுமில்லை. இதனால் நோன்பின் இறுதி நாளை சிறப்பாகக் கொண்டாட முடியவில்லை. நோன்பு காலத்தில் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் தேடி அலைந்தோம். போதாமைக்கு மின்சாரமுமில்லை. உணவை சமைத்துக் கொள்ள முடியாமல் உள்ளது. இதற்குமேல் பட்டினிதான். பொருட்கள் … Read more

துரிதமான முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளம் காண்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம்

முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளம்; காண்பதற்காக உப குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 10.  துரித முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங் காணல் நாட்டில் தற்போது நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக துரிதமாக வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையிலான முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங் காண்பதற்காக கீழ்வரும் அமைச்சர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா அவர்கள் வெகுசன ஊடக அமைச்சர் … Read more