இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஓர் தகவல்! விசேட கொடுப்பனவிற்கு அனுமதி

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் சமுர்த்தி, வயோதிப, சிறுநீரக மற்றும் வலுவிழந்தோர் கொடுப்பனவுகளை பெறும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், அக்கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்புப் பட்டியலிலுள்ள குடும்பங்களுக்கு துரிதமாக உதவி வழங்க வேண்டிய தேவையை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. உலக வங்கிக் குழும நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கருத்திட்டமான குறிப்பீடற்ற துரித பதிலளிப்பு பிரிவின் மூலம் அதற்கான நிதியை வழங்குவதற்கு உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய அடையாளம் … Read more

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை

நேற்று (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையினால்  வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக , வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 230 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கீரி சம்பா ஒரு கிலோ கிராமின் விலை 260 … Read more

“தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்” –  பிரதமர்

“பிறர் குறித்த உணர்வுடன் தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ,புனித ரமழான் நோன்புப்பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமர் புனித ரமழான் நோன்புப்பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி பின்வருமாறு: ரமழான் தின செய்தி – 2022 மே 03 உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈத்-உல்-ஃபிதர் பெருநாளைக் கொண்டாடும் இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமிய சமூகத்தினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாம் நாட்காட்டியின் … Read more

ராஜபக்ச ரெஜிமென்ட் தொடர்பில் இன்று அம்பலமாகவுள்ள மோசடிகள்! பரபரப்பாக காத்திருக்கும் இலங்கை மக்கள்

இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப்புக்கள் இன்று அம்பலப்படுத்தப்படவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பலம் வாய்ந்த அரசியல்வாதி முதல் பிரதேச சபை உறுப்பினர் வரையிலான பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடங்கிய பாரியளவிலான “கோப்புகளை” இன்று நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அரசியல் பீட உறுப்பினர், முன்னாள் கோப் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, மத்திய குழு உறுப்பினரும், ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பின் … Read more

இலங்கைக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்க ரஷ்யா விருப்பம் – மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பு

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் றொஸ்னெல்ப்ட் உட்பட ஐந்து அரச எண்ணெய் நிறுவனங்கள் இலங்கைக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த எண்ணெய் நிறுவனங்கள் மொஸ்கோவில் இருந்து எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயைப் … Read more

மதுபானம் மற்றும் பீர் விலை அதிகரிப்பு

மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்தல் ஒன்றின் (ஒரு கேன்) விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து மதுபான நிறுவனம் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. போக்குவரத்து, மூலப்பொருட்கள் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்து வருவதால், மதுபானம் மற்றும் பீர் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன. அரசாங்கத்தால் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரக்கு மற்றும் பீர் மீதான வரி அதிகரிக்கப்பட்டதன் பின்னர் இதுவரையில் எவ்வித வரி அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என கலால் … Read more

11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் – அனைத்து துறைகளும் முடக்கப்படும் என எச்சரிக்கை

எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லாவிட்டால் எதிர்வரும் 11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 6ம் திகதி அரசாங்கத்திற்கு ஒத்திகை வழங்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னரும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகாவிட்டால் நாடு பூராகவும் சகல துறைகளிலும் தொடர்ச்சியான ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் எனவும் சமரசிங்க தெரிவித்தார். … Read more

ஒல்லாந்து பெண்ணை விகாரைக்கு அழைத்து பிக்கு செய்த மோசமான செயல்

பதுளை துன்ஹிந்த அருவி பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒல்லாந்து நாட்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இந்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். 52 வயதான ஒல்லாந்து நாட்டு பெண் நேற்று துன்ஹிந்த அருவியை பார்வையிட சென்ற போது, இந்த பௌத்த பிக்கு, பெண்ணுக்கு பிரித் நூல் ஒன்றை கையில் கட்டியுள்ளதுடன் விகாரைக்கு வந்து பார்வையிட்டு செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன் பின்னர் பௌத்த பிக்கு … Read more