ஒல்லாந்து பெண்ணை விகாரைக்கு அழைத்து பிக்கு செய்த மோசமான செயல்

பதுளை துன்ஹிந்த அருவி பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒல்லாந்து நாட்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இந்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். 52 வயதான ஒல்லாந்து நாட்டு பெண் நேற்று துன்ஹிந்த அருவியை பார்வையிட சென்ற போது, இந்த பௌத்த பிக்கு, பெண்ணுக்கு பிரித் நூல் ஒன்றை கையில் கட்டியுள்ளதுடன் விகாரைக்கு வந்து பார்வையிட்டு செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன் பின்னர் பௌத்த பிக்கு … Read more

மக்களின் கடும் எதிர்ப்பு – காலி முகத்திடலில் பின்வாங்கிய கலகத்தடுப்பு பொலிஸார்

இன்று காலி முகத்திடலில் குவிக்கப்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார், போராட்டக்காரர்களின் எதிர்ப்பை அடுத்து மீளப் பெறப்பட்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டம் தொடரும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அதிகளவான கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், அந்த இடத்தில் திரண்டிருந்த போராட்டக்காரர்கள் சிலர் காவல்துறையினரை எதிர்கொண்டனர். இறுதியில் பொலிஸார அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் மேடையொன்றை அமைக்கத் தொடங்கியதை அடுத்து, கலகத் தடுப்புப் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மூத்த காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்கள் … Read more

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் போராட்டம்

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம்; தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது. பௌசர் வாடகைக் கட்டணத்தை 30 சதவீதத்தினால் அதிகரிப்பதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரின் உறுதிமொழி கிடைத்ததை அடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை முடிவடைந்துள்ள நிலையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என சங்கத்தின் … Read more

மகிந்த பதவி விலக தீர்மானம் எடுக்கலாம் – பசில் வெளியிட்ட தகவல்

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை கருத்திற் கொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக தீர்மானம் எடுக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான இன்றைய சந்திப்பின் போது பசில் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வாறானதொன்று நடந்தால், புதிய அரசாங்கத்தின் புதிய பிரதமருக்கான வேட்புமனுக்களை கட்சித் தலைமைக் குழுவொன்று கோரினால், மகிந்த ராஜபக்சவைத் தவிர வேறு யாரையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிறுத்தாது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். … Read more

எரிபொருள் விநியோக பணிகள் மூன்று நாட்களில் வழமை நிலைக்கு திரும்பும்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் மூன்று நாட்களில் ,வழமை நிலைக்கு திரும்பும்  என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சுமார் மூன்று மாதங்களாக இடம்பெற்று வந்த எரிபொருளுக்கான நீண்ட வரிசைகளை, முடிவுக்கு கொண்டுவருவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக தற்போது … Read more

எதிர்வரும் 6ஆம் திகதி நாடு முற்றாக முடங்கும் அபாயம்

எதிர்வரும் 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. அரசு,  தனியார் மற்றும் தோட்டத் துறையைச் சேர்ந்த அனைத்துத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர். அதன்படி, அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ள மக்கள் அரசாங்கத்திற்கு  எதிராக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  Source link

தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள மகா நாயக்கர்கள்

எதிர்காலத்தில் எந்தவொரு அரசியல்வாதிகளும் தம்மைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என மல்வத்து பீடம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான தகவலை மல்வத்து பீடத்தின் மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். மாநாயக்க தேரரின் சம்மதத்துடன் நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற இடைக்கால அரசாங்கம் அமைப்பது உள்ளிட்ட ஆறு யோசனைகள் அடங்கிய கடிதம் ஒன்றை மகா நாயக்கர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பியிருந்தனர். குறித்த கடிதத்திற்கு இதுவரையில் எவரும் சாதகமான பதிலை … Read more

ஓய்வுபெறும் இந்திய இராணுவ பதவி நிலை பிரதானிக்கு இராணுவ தளபதி வாழ்த்து

இலங்கை இராணுவத்திற்கு இராணுவப் பயிற்சி வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நன்கொடைகளை வழங்குதல், கொள்கை ரீதியான மேம்பாடுகள், இராணுவத்தின் நிபுணத்துவ பரிமாற்ற திட்டங்கள், பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் ஒன்றிணைந்த இராணுவ பயிற்சிகள், ஆகியவற்றுக்காகவும் பாரம்பரிய நட்புறவுகளுக்கு அப்பால் சென்று தனிப்பட்ட நல்லெண்ணத்தின் அடிப்படையில் கொவிட் – 19 தொற்றுநோய் பரவல் காலத்தில் இலங்கைக்கான மருத்துவ உதவிகள் என்பவற்றை இரு நாட்டு இராணுவங்களும் தானும் என்றும் மறவோம் என் குறிப்பிடப்பட்ட, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் … Read more

லங்கா சதொசவில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

சதொச நிறுவனத்திலும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். கொள்முதல் முறையில் உள்ள சில காரணிகளே இதற்குக் காரணம் என்று அமைச்சர் கூறினார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருக்கின்றனர்.  இந்த நிலையில்,  அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும்  அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சதொச நிலையத்தில் சற்று குறைவான விலையில் பொருட்கள் கொள்வனவு  செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது. Source link

மருந்துகள் , மருத்துவப் பொருட்கள் கையளிப்பு

2022 ஏப்ரல் 29ஆம் திகதி, உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்களால் ஒரு தொகுதி மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவப் பொருட்கள் சுகாதார அமைச்சர் கௌரவ சன்ன ஜயசுமன அவர்களிடம் கொழும்பில் கையளிக்கப்பட்டது. இந்திய மக்களின் அன்பளிப்பான இம்மருந்துப் பொருட்கள் துரிதமாக அனுப்பப்படுவதனை உறுதி செய்வதற்காக இந்திய கடற்படைக் கப்பலான கரியால் சேவையில் அமர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 2.   பேராதனை போதனா வைத்தியசாலையால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இம்மருத்துவப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. 2022 மார்ச் … Read more