இலங்கை மின்சார சபையின் புதிய அறிவிப்பு

புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.  தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    இதேவேளை, இன்றும் நாளை மறுதினம் மாத்திரம் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ரமழான் தினமான நாளைய தினம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  Source link

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரிர் நேற்று நடைபெற்ற போட்டியில் 13 ஓட்டங்ள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று (01) நடைபெற்ற 46வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை … Read more

இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவித்திட்டம்

அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமை ஊடாக மக்களை மையமாகக் கொண்டு,  இந்திய அரசால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு மேலும் வலுவூட்டும் அதேநேரம், இலங்கையிலுள்ள பல்வேறு தரப்பினருக்கும் தேவையான உதவிகளை வழங்குதல் மற்றும் பல்வேறு மனிதாபிமான உதவித்திட்டங்களால் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்தல் ஆகிய நடவடிக்கைகளிலும் இந்தியா நேரடியாக ஈடுபடுகின்றது. 2.   2022 ஏப்ரல் 27ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையில் விதவைகள் மற்றும் ஏனைய பல்வேறு குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவு நிவாரணப் பொதிகள், இரண்டாம் நிலை செயலாளர் … Read more

சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன கட்சியின் மாத்தறை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் அவர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். தென் மாகாண முன்னாள் ஆளுநர் ஹேமல் குணசேகர முன்னிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  Source link

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார்

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவருமானால், அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயார் என அரசாங்க முதற்கோலாசான் , அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் பிளவு காரணமாக அந்த யோசனையின் ஊடாக அவர்களின் எதிர்ப்பார்ப்பை அடைய முடியாதென ரணதுங்க தெரிவித்துள்ளார். குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை மறுதினம் சபாநாயகருக்கு கையளிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நேற்றைய மேதின ஊர்வலத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.. இதேவேளை, மக்கள் பிரதிநிதிகளாக, மக்களின் வாக்குகளில் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள், மக்களின் மேம்பாட்டிற்காக … Read more

இந்தியாவில் மேலும் 3 ஆயிரத்து 157 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் நேற்றும், இன்றும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்நிலையில், இன்று (02) புதிதாக 3,157 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,82,345 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

இடைக்கால அரசு தொடர்பில் ஆளும் கட்சி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  கட்சி தமது நிலைப்பாட்டை  அறிவித்துள்ளது.   இதன்படி, 40 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில்  இடைக்கால அரசாங்கத்தை  பொதுஜன பெரமுன இணக்கம் வெளியிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.   அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் அனுர பிரியதர்சன யாப்பா இதனை குறிப்பிட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.    Source link

அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசுக்கு அனுமதி

இலங்கை மக்களுக்கு தமிழகத்தின் சார்பில் அரிசி, மருந்து, பால் மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப அனுமதியளித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், தவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் முதல்கட்டமாக அரிசி, மருந்து, பால் மா என இந்திய நாணயத்தில் ரூ.123 கோடிக்கு அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப அனுமதியளிக்கக் கோரி  தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் … Read more

இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மாவட்ட மட்டத்தில் மீளாய்வு

நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வீதி மற்றும் பாலங்கள் அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் மாவட்ட மட்டத்தில் அதன் முன்னேற்றம் ஆகியவை நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் மீளாய்வு செய்யப்பட்டது. இதன் கீழ், மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் கேகாலை ஆகிய மூன்று மாவட்டங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி மற்றும் பாலத் திட்டங்கள் மற்றும் உத்தேச திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் முதன்மையான … Read more

அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் நிலை: தனியார் வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கம் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. அதன்படி அவசர சத்திர சிகிச்சைகளை மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கத்தின் தலைவர் கலாநிதி ஆனந்த குருப்பு ஆராச்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நாடளாவிய ரீதியிலுள்ள 200 தனியார் வைத்தியசாலைகளில் 76 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் தட்டுபாடு குறித்து சுகாதார அமைச்சு மற்றும் … Read more