முள்ளிவாய்க்காலில் வெடிபொருட்கள் மீட்பு (Photos)

முள்ளிவாய்க்கால் பகுதிகளில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெடி பொருட்களானது நேற்று(30) மீட்கப்பட்டுள்ளது. வெடிபொருட்கள் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் எட்டு ஆர்.பி.ஜி ரக குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. Source link

கையை மீறிய இலங்கையின் நிலவரம்! கோட்டாபயவின் கைகளில் முடிவு………!

தற்போதைய நெருக்கடியில் இலங்கையின் அனைத்து வழிகளும் கைமீறி போய்விட்டதாகவும், சுமூகமான தீர்வுகளை கானும் காலம் கடந்துவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், கடந்த ஏப்ரல் மாதத்தில் அரசியல் ரீதியாக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அதனை நான் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெளிவாக எடுத்துரைத்திருந்தோம். அந்த நேரத்தில்  ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அந்த … Read more

உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய நடிகர் அஜித் குமார்.. அனைவருக்கும் ஷாக் கொடுத்த புகைப்படம்

AK 61 நடிகர் அஜித் வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் தனது AK 61 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் பல வேடங்களில் நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்காக தனது உடல் எடையில் இருந்து 25 கிலோவை அஜித் குறைவுள்ளார் என்றும், அதில் 10 கிலோ வரை குறைத்துவிட்டார் என்றும் தெரியவந்தது. உடல் எடையை குறைத்த அஜித் இந்நிலையில், அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் நடிகர் அஜித் உடல் எடையை … Read more

நியூசிலாந்தில் ஒமைக்ரோனின் டீயு – 4 வகை கொரோனா பாதிப்பு

நியூசிலாந்தில் ஒமைக்ரோனின் AB-4 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலக நாடுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது. நியூசிலாந்து நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை ஒன்பது இலட்சத்து 33 ஆயிரத்து 464 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், அந்நாட்டு சுகாதார அமைச்சு … Read more

வெளியில் தலைகாட்ட முடியாமல் பதுங்கியுள்ள ராஜபக்ஷர்கள் – தலைமறைவாக செல்லும் பசில்

இலங்கையில் இம்முறையில் முக்கிய தலைவர்களின்றி ஆளும் கட்சியின் மே தின பேரணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பேரணியில் 500 பேர் வரையிலான ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்றதாக தெரிய வருகிறது.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மே தின பேரணி இன்று பிற்பகல் நுகேகொட ஆனந்த சமரகோன் வெளிப்புற திரையரங்கில் நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் பங்கேற்பின்றி இந்த மே தினக் … Read more

மலையக மே தின நிகழ்வில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்

மலையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிலாளர் தின நிகழ்வுகளில் தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த மே தின நிகழ்வு,கொட்டகலை சீ.எல்.எப். வளாகத்தில் இன்று (01) நடைபெற்றது.இதன்போது திரு. அண்ணாமலை  பொன்னாடை  போர்த்தி கௌரவிக்கப்பட்டார்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

யாழ். சென்ற போது கண் கலங்கிய அமெரிக்க தூதுவர் (video)

இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது.   இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.  இலங்கையில் உள்ள வசதிப் படைத்தவர்களே தற்போதைய சூழல் திக்குமுக்காடிப் போயிருக்கும் நிலையில் சாதாரண மக்கள் நிலை மிக அவல நிலைக்குரியது.  இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த பல வருடங்களாக தமது உறவுகளைத் தொலைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வடக்கு – கிழக்கு தாய்மார்களின் நிலையும் மிகவும் வேதனைக்குரியதாகவே மாறியிருக்கின்றது.   தற்போதைய  இக்கட்டான நிலையில் தமது வாழ்வாதாரத்தையும் கொண்டு செல்ல … Read more

உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதுக்குழு அனுஷ்டிப்பு

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசியப் பிரிவுகளின் முதல் உதவிச் செயலாளர் கேரி கோவன் ஆகியோர் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தலைமையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளுடன் 2022 ஏப்ரல் 29ஆந் திகதி, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து கலந்துரையாடினர். இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 75வது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற இந்த சந்திப்பில், கொழும்புக்கும் கன்பராவுக்கும் இடையிலான இருதரப்பு ஈடுபாடுகளின் முழுமையான வரம்பு மற்றும் … Read more

மின் துண்டிப்பு குறித்த அறிவிப்பு

நாடு முழுவதும் இன்றும் நாளை மறுதினமும், மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மேதினம் மற்றும் ரமழான் பண்டிகை காரணமாக குறித்த தினங்களில் மின்சாரத்தை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாளை மற்றும் எதிர்வரும் 4ஆம் திகதி ஆகிய தினங்களில், A முதல் W வரையான வலயங்களில் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த வலயங்களில் காலை 9 மணிமுதல் மாலை … Read more