ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் மரணம் (video)

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  தொம்பே பகுதியில் இருந்து பேரணியில் கலந்து கொள்ள வருகைத் தந்த 65 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   இவர் தனது மகனுடன் பேரணியில் கலந்து கொள்வதற்காக வருகைத் தந்துள்ளார்.  காவடி நடனம் ஆடுவதற்காக குறித்த நபர் சென்ற வேளை இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.  சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.   Source … Read more

அதளபாதாளத்தை அடைந்த இலங்கையின் நிதி கட்டமைப்பு – செய்திகளின் தொகுப்பு

நாடு கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியிலிருந்து உத்தியோகபூர்வமாக வங்குரோத்து அடைந்து விட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மே தினத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலைமையில், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் கொடுக்கல், வாங்கல்கள், வெளிநாட்டு வர்த்தகம் என்பன நின்று போயுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி … Read more

கடற்றொழிலாளர்களுக்கு முக்கிய வானிலை அறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் … Read more

மன்னம்பிட்டி வாகன விபத்தில் கணவன், மனைவி உட்பட மூவர் பலி

பொலன்நறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மன்னப்பிட்டி பாலத்திற்கு அருகில் இன்று காலை 6.30 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பேரே உயிரிழந்துள்ளதாக மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரலகங்வில அருணபுர பிரதேசத்தை 67 வயதான யு.டப்ளியூ.ஜீ.ரண்பண்டா, 62 வயதான அவரது மனைவி ஜீ.கே. நந்தவதி மற்றும் இவர்களின் உறவினரான டி.ஜீ.விமலா ரந்தெனிய … Read more

டோனிக்கு மீண்டும் அணி தலைவர் பொறுப்பேற்பு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை நோக்கி…….?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரின் 9 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று சந்திக்கிறது. புனேயில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. சென்னை அணியின் தலைவர் பதவியில் இருந்து ஜடேஜா விலகினார். அவர் தலைவர் பதவியை டோனியிடம் ஒப்படைத்துள்ளார். துடுப்பாட்த் திறன் பாதிக்கப்படுவதால் அதில் கவனம் செலுத்துவதற்காக ஜடேஜா இந்த முடிவை எடுத்துள்ளார். டோனி மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த நிலையில் 2022 IPL போட்டித்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி … Read more

ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பம்

ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்பொழுது கொழும்பு – கொலன்னாவை பகுதியிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. கொலன்னாவை பகுதியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை கொழும்பு – டெம்பிள் மைதானத்தில் நிறைவடையவுள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளார்கள். கொழும்பு – கொலன்னாவையில் ஆரம்பமான இந்த பேரணி தெமட்டகொடை, பேஸ்லைன், மற்றும் பொரல்லை வழியாகக் கொழும்பு – … Read more

உலக அளவில் கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51.33 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. .கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 33 லட்சத்து 12 … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசியால்

இந்தியாவில் கொரோனா வைரசினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 3,324 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,79,188ஆக உயர்ந்தது. * புதிதாக 40 பேர் … Read more

உலக அளவில் தங்கத்தின் விலை மேலும் சரிந்துள்ளது

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.  இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,895 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. மேலும், இலங்கையில் ஒரு பவுன் 24 கரட் தங்கத்தின் விலை 183,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.  அத்துடன், ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 167,950 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 21 கரன் தங்கப் பவுன் ஒன்று 160,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.   Source link

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது

வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் எதிர்வரும் 4ஆம் திகதி ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகும். இந்த மேலடுக்கு சுழற்சி 6 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை நிலையம் தெரிவித்த்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் தீவிரம் அடையும். அந்த காற்றழுத்த தாழ்பு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ அல்லது அதைவிட தீவிரமாகவோ மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் நிலையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை எந்த … Read more