தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது

வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் எதிர்வரும் 4ஆம் திகதி ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகும். இந்த மேலடுக்கு சுழற்சி 6 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை நிலையம் தெரிவித்த்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் தீவிரம் அடையும். அந்த காற்றழுத்த தாழ்பு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ அல்லது அதைவிட தீவிரமாகவோ மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் நிலையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை எந்த … Read more

இராணுவத்தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு – செய்திகளின் தொகுப்பு

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் எரிபொருள் பௌசர்கள் உரிய முறையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை வந்தடைகின்றனவா என்பதைப் பரிசோதிப்பதற்காகவே இந்த கண்காணிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் விசேட பணிப்புரைக்கு அமைய இராணுவம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் … Read more

போராட்டத்தை மக்கள் சார்பான புரட்சிகர மாற்றத்துடன் நேர்மறையான திசையில் கொண்டு செல்ல ஒன்றிணையுங்கள்

உழைக்கும் மக்களுக்காக அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, போராட்டத்தை மக்கள் சார்பான புரட்சிகர மாற்றத்துடன் நேர்மறையான திசையில் கொண்டு செல்ல ஒன்றிணையுமாறும் உழைக்கும் மக்களிடம் கெளரவமாக கேட்டுக்கொள்கிறேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ள தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ள தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: மே தின வாழ்த்துச் செய்தி             உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுகின்றது. நமது நாட்டில் … Read more

இன்று இடம்பெறவுள்ள அரசியல் கட்சிகளின் பேரணிகளும் கூட்டங்களும்

தொழிலாளர் தினமான இன்று அரசியல் கட்சிகள் பேரணிகளையும், கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் நுகேகொட ரெயில் நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் நடைபெறும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டம் அதன் சேவைச் சங்க தலைமையகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் காலிமுகத்திடலில் இடம்பெறும். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் … Read more

கடற்தொழிலாளியின் படகுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய கடற்படையினரின் படகு(photos)

வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விபத்து நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.  சம்பவத்தில் கடற்தொழிலாளிகள் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன், சங்கத் தலைவரின் படகு மற்றும் இயந்திரம் மீளப் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளன. பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவராசா தேவகுமார் என்பவரது படகே இவ்வாறு சேதமடைந்துள்ளது. படகு சேதமடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த கடற்தொழிலாளிகள் இருவரையும் சில நிமிடங்கள் கழித்து கடற்படையினர் … Read more

இன்று தொழிலாளர் தினம்

மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிபடுத்திய தினம், இன்று தொழிலாளர் தினமாக உலகில் கொண்டாடப்படுகிறது.அமெரிக்காவில் 1890ஆம் ஆண்டு 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர். இதை எதிர்த்து அமெரிக்க அரசு, தாக்குதலை நடத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் கொல்லப்ப்ட்டனர். உலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தைக் … Read more

உரிமைகளுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை – பிரதமர்

தொழிலாளர் போராட்டத்திற்காக உங்களுடன் கைக்கோர்த்திருந்த நான், பொறுப்பு கூற வேண்டிய சகல சந்தர்ப்பத்திலும் உங்களது உரிமைகளுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்று பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மே தின செய்தி – 2022 மே 01 அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகல் பாராது பாடுபடும் அன்பான உழைக்கும் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு … Read more

அலரி மாளிகைக்கு முன்னால் இருந்து தமிழர்களுக்கு வந்த அழைப்பு! களத்தில் ஒற்றைத் தமிழன்(Video)

அரசியல் என்னும் சாக்கடையே எனக்கு வேண்டாம், ஒட்டு மொத்த மக்களுக்காகவும் தான் நான் போராட வந்திருக்கின்றேன் என அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக அலரி மாளிகைக்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்தில் பார்வையாளராக இருந்த இந்த தமிழ் முதியவர்  தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அலரி மாளிகை போராட்டக் களத்தில் இருக்கும் ஒரு தமிழர் இவர் என அப்பகுதியில் இருக்கும் எமது … Read more

புனித நோன்பு பெருநாளை தீர்மானிக்கும் பிறைகுழு மாநாடு

புனித நோன்பு பெருநாளை தீர்மானிக்கும் பிறைகுழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மேமன் சங்க பிரதிநிதிகள் மற்றும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். நாட்டின் எப்பாகத்திலாவது ஹிஜ்ரி 1443 புனித ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் அதுபற்றி அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து … Read more