அலரி மாளிகைக்கு முன்னால் இருந்து தமிழர்களுக்கு வந்த அழைப்பு! களத்தில் ஒற்றைத் தமிழன்(Video)

அரசியல் என்னும் சாக்கடையே எனக்கு வேண்டாம், ஒட்டு மொத்த மக்களுக்காகவும் தான் நான் போராட வந்திருக்கின்றேன் என அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக அலரி மாளிகைக்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்தில் பார்வையாளராக இருந்த இந்த தமிழ் முதியவர்  தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அலரி மாளிகை போராட்டக் களத்தில் இருக்கும் ஒரு தமிழர் இவர் என அப்பகுதியில் இருக்கும் எமது … Read more

புனித நோன்பு பெருநாளை தீர்மானிக்கும் பிறைகுழு மாநாடு

புனித நோன்பு பெருநாளை தீர்மானிக்கும் பிறைகுழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மேமன் சங்க பிரதிநிதிகள் மற்றும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். நாட்டின் எப்பாகத்திலாவது ஹிஜ்ரி 1443 புனித ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் அதுபற்றி அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து … Read more

குறைந்தது வெளிநாட்டு கையிருப்பு – ரூபாவின் பெறுமதியை நிலைநிறுத்துவதில் பெரும் சிக்கல்

Courtesy: EC நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதியை நிலைநிறுத்துவதற்கு கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதியில், மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, ஆனால் சீன அந்நியச் செலாவணி வசதியின் மதிப்பு குறைக்கப்பட்டபோது, ​​மீதமுள்ள பயன்படுத்தக்கூடிய பண இருப்பு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏனைய … Read more

கொழும்பில் பொலிஸாரை தாக்கி விட்டு தந்தேகநபர் தப்பியோட்டம்

பம்பலப்பிட்டி கடற்பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (29) பிற்பகல் 1 மணியளவில் சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் பயணித்ததாக கிடைத்த தகவலுக்கு அமைய, அதே வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேக நபர் பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டுள்ளார். மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திற்கு வந்து அவரைப் பிடிக்க முற்பட்ட போது சந்தேக நபர் பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பிச் … Read more

தமிழர் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண்கள்: வெளியான காரணம் (Video)

நாட்டில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வழிப்பறி கொலை மற்றும் பாரிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது, பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பன அடங்குகின்றன. யாழில் போதை பொருள் விற்பனையில் பெண்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ள நிலையில் கடந்த 6 மாத காலப்பகுதிகளில் யாழில் 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் அரியாலை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் மாநகரில் … Read more

இலங்கை்கு உதவுவதற்கு சமூக ஸ்திரத்தன்மையை வலியுறுத்தியுள்ள IMF!

சர்வதேச நாணய நிதியம் (IMF) பொருளாதார பிரச்சினைகளை திறம்பட நிர்வகிக்க இலங்கைக்கு உதவும் வகையில் சமூக ஸ்திரத்தன்மை பேணப்பட வேண்டுமென விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிதி அமைச்சு இதனை கூறியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடும் மக்களும் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளை திறம்பட நிர்வகிப்பதற்கு இலங்கைக்கு உதவுவதற்காக, நாட்டில் சமூக ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்கள் (IFI) வலியுறுத்தியுள்ளதாக … Read more

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகள் குறித்து பசில் வெளிப்படுத்தியுள்ள விடயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இன்று பெரும்பாலான ஊடகங்கள் எமது அரசாங்கத்திற்கு எதிராகவே செய்திகளை வெளியிடுகின்றன. இதன் பின்னணியில் யார் செயற்படுகின்றார்கள் என்று தெரியவில்லை. ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை போல் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு பிரதமரோ அல்லது பிரதமரைப் பதவி … Read more

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு அடுத்த மாதம் நிவாரணம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சமூக நல நிவாரண முறையொன்று அடுத்த மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று (29) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,இதற்காக அவசர தேவைகள் உலக வங்கி நிதியுதவியின் கீழ் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி ஏற்கனவே … Read more

நாளை விசேட போக்குவரத்து ஏற்பாடு

நாளை இடம்பெறும் சர்வதேச தொழிவாளர் தினத்தை முன்னிட் கொழும்பில்; விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதேவேளை மாகாணங்களில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் தொடர்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் பௌசர் உரிமையாளர்களின் அனுமதியை ரத்துச் செய்யுமாறு அமைச்சர் உத்தரவு

தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்களின் அனுமதியை ரத்துச் செய்யுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர உத்தரவிட்டுள்ளார். தனியார் எரிபொருள் பௌசர் இன்று நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில் அமைச்சரின் உத்தரவு வெளியாகி உள்ளது. போராட்டத்தில் ஈடுபடவுள்ள தனியார் உரிமையாளர்களின் அனுமதியை ரத்து செய்து புதிய வழங்குனர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். ரயில்கள், அரசுக்கு சொந்தமான பௌசர்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சொந்தமான பௌசர்கள் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தனியார் வாடகை பௌசர்கள் மூலம் சேவைகள் … Read more