29.04.2022 அன்று, வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால்  29.04.2022 அன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:     இலங்கை மத்திய வங்கியினால்  29.04.2022 அன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:    

IMF முடிவால் திண்டாடும் இலங்கை! மறைக்கப்படும் மக்களுக்கான கடைசி சந்தர்ப்பம் (VIDEO)

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகள் பெரும்பாலும் அந்த நாட்டினுடைய பெரும்பாலான மக்களை சந்தோசப்படுத்துவதாக நிச்சயம் இருக்க முடியாது என கலாநிதி கணேசமூர்த்தி பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் (கொழும்பு பல்கலைகழகம்) தெரிவித்துள்ளார்.S லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்தை்தையின் போது முக்கியமாக கடன்களை மீள சீரமைத்துவிட்டு,கடன் வழங்கியவர்களிடம் … Read more

தொழில் முயற்சிகளில் ஈடுபடவிரும்பும் வெளிநாடுகளிலுள்ள, இலங்கையருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்

தொழிற்பேட்டைகள், வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் என்பனவற்றை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடவிரும்பும் வெளிநாட்டுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். இதற்காக மாகாண சபை, பிரதேச சபை மூலம் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க கூறினார். கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இராஜாங்க அமைச்சர் இதுதொடர்பாக  மேலும் தெரிவிக்கையில், நாடு இன்று எதிர் நோக்கியுள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வாக வெளிநாட்டில் பணியாற்றுபவர்கள் டொலரினை இலங்கைக்கு அனுப்புவதனை ஊக்குப்படுத்தும் வகையில் அரச அதிகாரிகள் … Read more

கொழும்பில் நாளை வன்முறைகள் வெடிக்கும் அபாயம் – அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்னதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆர்ப்பாட்ட எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மே முதலாம் திகதியான நாளை கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்கள் கொழும்பிற்கு பயணித்தல், கொழும்பில் இருந்து பயணித்தல், கொழும்பிற்குள் பயணித்தல் போன்ற அனைத்தையும் ஏனைய பயணங்களை மிகவும் கடினமாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாள் … Read more

பணவீக்கம் 2022 ஏப்ரலில் தொடர்ச்சியாக அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மாச்சின் 18.7 சதவீதத்திலிருந்து 2022 ஏப்பிறலில் 29.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பானது 2022 ஏப்பிறலில் உணவு மற்றும் உணவல்லா ஆகிய இரு வகைப்படுத்தல்களினதும் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மாச்சில் 30.2 சதவீதத்திலிருந்து 2022 ஏப்பிறலில் 46.6 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் … Read more

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்ய புதிய நிறுவனம் தெரிவு! லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். அதன்படி தாய்லாந்தின் சியாம் கேஸ் என்ற நிறுவனமே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரு ஆண்டுகளில் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனமானது மெட்ரிக் தொன் ஒன்றுக்கு அறவிட்ட தொகையை விட 9 டொலர் குறைவாக புதிய … Read more