இலங்கையில் வற் வரியை அதிகரிக்க நிதியமைச்சு நடவடிக்கை

இலங்கையில் பொருட்கள் சேவைகள் மீதான வற் வரியை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் வரியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமகால அரசாங்கம் வற் வரியை எட்டு வீதமாக குறைந்தமையினால் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கம் பெரும் தவறை செய்துள்ளதாக அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். நாளாந்த அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அடுத்த எட்டு மாதங்களில் 4 பில்லியன் டொலர்கள் … Read more

IMF நிதியத்துடன் 2 மாதங்களில் ஆரம்ப உடன்படிக்கை

IMF நிதியத்துடன் எதிர்வரும் 2 மாதங்களில் ஆரம்ப உடன்பாL ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை வர்த்தக சபை கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் சமீப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நிதிக் கொள்கை மாற்றத்துக்கு மத்தியில் நிதியின் மூலம் சிறப்பான எதிபார்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். இலங்கை கடந்த 12 ஆம் திகதி வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்துவதை இடைநிறுத்த தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது. அவர் மேலும் … Read more

வடக்கு மக்களின் செயற்பாடு – மகிழ்ச்சியில் சிங்கள மக்கள்

அரசாங்கத்திற்கு எதிராக நேற்றைய தினம் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் பாரிய பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர். இந்நிலையில் வடக்கிலும் நேற்றையதினம் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகளை சிங்கள இணையத்தளங்கள் வெளியிட்டுள்ள நிலையில் அந்த செய்திக்கு சிங்களவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். வடக்கும், தெற்கும் தனி நாடு என்றே சிந்தித்தோம். இன்று வடக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள் என … Read more

மகிந்தவை பதவி விலகுமாறு கோட்டாபய கூறுவார்! அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியான தகவல்

பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரவுள்ளார் என அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி  வெளியிட்டுள்ளது.    புதிய பிரதமருக்கு வழிவிடுவதற்காக மகிந்த ராஜபக்ச பதவி விலகவேண்டும் என ஜனாதிபதி வேண்டுகோள் விடுப்பார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமரும் அமைச்சரவையும் பதவி விலகியபின்னர் புதிய அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஏற்கனவே ஆளும்கட்சியின் அதிருப்தியாளர்களிற்கு தெரிவித்துள்ளார். நான் பதவி விலகமாட்டேன் என்னை விரும்பினால் பதவி நீக்கம் செய்யலாம் என பிரதமர் … Read more

மே மாதம் 2ஆம் திகதி விசேட பொது விடுமுறை

எதிர்வரும் இரண்டாம் திகதி அதாவது மே மாதம் 2ஆம் திகதி விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தொழிலாளர்தினமான மே முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. எனவே அடுத்த நாள் திங்கட்கிழமை இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  Source link

இலங்கை மத்திய வங்கி 2021ஆம் ஆண்டிற்கான அதன் ஆண்டறிக்கையை வெளியிடுகிறது

இலங்கை மத்திய வங்கி 2021ஆம் ஆண்டிற்கான அதன் ஆண்டறிக்கையை வெளியிடுகிறது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் எழுபத்திரெண்டாவது ஆண்டறிக்கையானது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். பி. நந்தலால் வீரசிங்க அவர்களினால் நிதி அமைச்சர் கௌரவ. எம்.யு.எம். அலி சப்ரி அவர்களுக்கு இன்று (2022.04.29) சமர்ப்பிக்கப்பட்டது.   https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20220429_the_central_bank_of_sri_lanka_releases_its_annual_report_for_the_year_2021_e.pd  

மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கம் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் இராஜதந்திர விளக்கம்

2022 ஏப்ரல் 26ஆந் திகதி இடம்பெற்ற தூதுவர்கள் குழுவுடனான சந்திப்பின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மற்றும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்தை சுட்டிக் காட்டினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட கணிசமான திருத்தங்கள் மற்றும் பயங்கரவாதத்தின் சமகால பரிமாணங்களுக்கு ஏற்ப அதனைக் கொண்டு வருவதற்கு விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள … Read more

இணக்கம் வெளியிட்டார் கோட்டாபய! முடிந்த அனைத்தையும் செய்வதாக உறுதி: ஒரு வருடத்திற்கு நீடிக்கும் என தகவல் (Video)

இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளதாக நாடாளுனமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் தொடர்புடைய கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்று கலந்துரையாடலின் போது இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.  இந்த கூட்டத்தில் பிரதமரை நீக்குவது அல்லது ஜனாதிபதி விலகுவது குறித்து எந்த ஒரு விடயமும் பேசப்படவில்லை. தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக ஜனாதிபதி கூறினார். நாங்களும் உடனடியாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறினோம். இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டால் ஒரு வருடமேனும் நீடிக்கும் … Read more

வடக்கில் பாரிய கடல் பாசித் திட்டம் – தேவையறிந்து உதவும் இந்தியாவிற்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கடல்பாசி செய்கையை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று(26) இந்திய தனியார் முதலீட்டாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நடைபெற்றது. இதன்போது இந்தியாவில் இருந்து கிடைக்கும் காலத்தின் தேவை உணர்ந்த ஒத்துளைப்புக்களை நினைவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “பொருளாதார சவால்களில் இருந்து மீள்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. இந்நிலையில், இலங்கையில் காணப்படுகின்ற வளங்களை இனங்கண்டு நவீன … Read more

உயர் தேசிய டிப்ளோமா ஆங்கில கற்கை (HNDE) நெறிக்கான பரீட்சை ஒத்திவைப்பு

நாளை (29) நடைபெறவிருந்த உயர் தேசிய டிப்ளோமோ ஆங்கில கற்கை (HNDE) நெறிக்கான பரீட்சை ,ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார துண்டிப்பு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பரீட்சைக்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்வதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் கேட்டு கொண்டதற்கு அமைவாக, பரீட்சையை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எமது செய்தி பரிவுக்கு தெரிவித்தார். K.Sayanthiny