வடக்கில் பாரிய கடல் பாசித் திட்டம் – தேவையறிந்து உதவும் இந்தியாவிற்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கடல்பாசி செய்கையை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று(26) இந்திய தனியார் முதலீட்டாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நடைபெற்றது. இதன்போது இந்தியாவில் இருந்து கிடைக்கும் காலத்தின் தேவை உணர்ந்த ஒத்துளைப்புக்களை நினைவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “பொருளாதார சவால்களில் இருந்து மீள்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. இந்நிலையில், இலங்கையில் காணப்படுகின்ற வளங்களை இனங்கண்டு நவீன … Read more

உயர் தேசிய டிப்ளோமா ஆங்கில கற்கை (HNDE) நெறிக்கான பரீட்சை ஒத்திவைப்பு

நாளை (29) நடைபெறவிருந்த உயர் தேசிய டிப்ளோமோ ஆங்கில கற்கை (HNDE) நெறிக்கான பரீட்சை ,ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார துண்டிப்பு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பரீட்சைக்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்வதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் கேட்டு கொண்டதற்கு அமைவாக, பரீட்சையை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எமது செய்தி பரிவுக்கு தெரிவித்தார். K.Sayanthiny

அலரி மாளிகையின் முன் நடந்த குழப்பம் தொடர்பில் பொலிஸார் தகவல்

அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸ் அதிகாரிகள் தாக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அங்கு தற்காப்புக்காகவே செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  இன்று காலை அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் வாகனங்களில் போடப்பட்டிருந்த தடைகளை அகற்ற பொலிஸாருக்கு போராட்டக்காரர் அனுமதிக்க மறுத்துவிட்டார். அவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் … Read more

இன்று முதல் ரயில் , பஸ் சேவைகள் வழமைபோல் இடம்பெறும்

இன்று (29) வழமை போன்று புகையிரதங்களை இயக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்றைய (28) தினம் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக புகையிரத சேவை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இன்று திட்டமிட்டபடி ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே தொழிற்சங்க கூட்டடமைப்பின் அமைப்பாளர் எஸ். பி. விதானகே தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி உள்ளிட்டோரை இராஜினாமா செய்யுமாறு கோரி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் … Read more

நெடுந்தீவு கடலில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் இழப்பீடு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

நெடுந்தீவு கடலில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளை ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்த கடற்றொழிலாளர் ஒருவரது குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கையை அடுத்து, கடந்த வருடம் இடம்பெற்ற, இயற்கை அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்த மரியவேதநாயகம் அமரலமேயன் என்பவரது குடும்பத்தினருக்கு இந்த இழப்பீட்டுத் தொகை  கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் இன்று(28.04.2022) மாவட்ட கடற்றொழில் பணிப்பாளர் சுதாகரன் தலைமையில் நடைபெற்ற குறித்த இழப்பீடு வழங்கும் நிகழ்வில் … Read more

திரிபோச உற்பத்தி இடை நிறுத்தப்பட்டது

மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோச உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா திரிபோச நிறுவனம் அறிவித்துள்ளது.  நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களினால் திரிபோச விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோச இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதல் சில மாதங்களில் மட்டுமே தமக்கு திரிபோச கிடைத்ததாக அப்பகுதி கர்ப்பிணித் தாய்மார்கள் தெரிவித்துள்ளனர். Source link

வலுசக்தி – மின்சக்தி, வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு முன்னிலையில் 

நாட்டில் தற்பொழுது நிலவிவரும் வலுசக்தி, மின்சக்தி மற்றும் எரிவாயு தொடர்பான பிரச்சினைகளின் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர, வர்த்தக மற்றும் சமுர்த்திஅபிவிருத்தி அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்க, அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு முன்னிலையில் நேற்று (28) அழைக்கப்பட்டனர். தற்போதைய நெருக்கடிக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். … Read more

புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது … Read more

ஆசிரியர்களுக்கான நியமனங்கள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள இணக்கம்

எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிபர், ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் நியமனங்களை வழங்குவது சிறந்த யோசனை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்யே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு தமக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு நியமனத்தை மாற்றித் தருமாறு அதிபர் மற்றும் ஆசிரியர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை உண்மையில் சிறந்ததொரு யோசனையாகும். எவ்வாறிருப்பினும், அதிபர், ஆசிரியர்களுக்கு மாத்திரம் … Read more

உலகிற்கு பொருந்தக்கூடிய பட்டதாரிகளை உருவாக்குவது பல்கலைக்கழங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்

இலங்கை சமூகத்திற்கும் உலகிற்கும் பொருந்தக்கூடிய வகையில் பட்டதாரிகளை உருவாக்குவது பல்கலைக்கழங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் ,பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் பட்டப்படிப்புக்களின் தரத்தை விருத்தி செய்யவேண்டியதன் அவசியத்தையும்  சுட்டிக்காட்டினார்.. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பின்னர் பெரும்பாலானோர் பல்கலைக்கழக வாய்ப்பினைப் பெறுவதில்லை. நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் உயர் … Read more