சகோதரர்களான எங்களை யாரும் பிரிக்க முடியாது, பிரதமராக மஹிந்த தொடர்வார்! ஜனாதிபதி கோட்டபாய

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு எந்த அறிவித்தலையும் தான் வழங்கவில்லை எனவும் அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகிய கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி குழுவினர் நேற்று ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் கூடியுள்ளனர். … Read more

பசில் ஆதரவு தரப்பினரின் திட்டம் – முக்கிய நபர் வெளிப்படுத்திய தகவல்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச அணி எதிர்க்கட்சியில் அமரத் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தகைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் அமைப்பு சீர்குலைந்துவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போது சபையில் 40க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதாகவும், இவ்வாறான சூழ்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் தரப்பினர் அதிக ஆசனங்களைக் கொண்டிருப்பதாகவும், எனவே அவர்கள் … Read more

அரசாங்கத்துடன் எந்த ஒப்பந்தமும் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு

அரசாங்கத்துடன் இணைந்த எந்தக் கட்சிகளுடனும் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்பதை ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தியது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, “ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இடைக்கால அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸவின் அறிக்கையை மறுத்துள்ளார். முழு நாட்டினாலும் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முட்டுக் கொடுப்பதற்காக செயற்படும் எந்தவொரு திட்டத்திற்கும் அல்லது … Read more

தொடரும் அரசிய நெருக்கடி – சலசலப்புடன் நிறைவடைந்த ஆளும் கட்சி கூட்டம்

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் பெரும் சலசலப்புடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசாங்கம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ முதலில் உரையாற்றினார். எனினும், அருந்திக பெர்னாண்டோவின் உரையை விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, இடைக்கால அரசாங்கங்களை அமைப்பதற்கு ஆணை வழங்கப்படவில்லை எனவும் ஆட்சியமைப்பதற்கே இந்த ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், … Read more

இலங்கை வரலாற்றின் பாரிய ஆர்ப்பாட்டம்! தீவிரமடையுமென கொழும்பில் எச்சரிக்கை

இன்று இலங்கை வரலாற்றிலேயே பாரிய ஆர்ப்பாட்டமொன்று தான் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன், கோட்டாபய ராஜபக்ச வெளியேற வேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டு கொண்டு ஆட்சியில் தொடரப் பார்க்கிறது. இன்று 1000இற்கும் … Read more

கொழும்பு அரசியலில் தொடரும் நெருக்கடி – ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று (28) மாலை இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு அரசியலில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.    Source link

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு மாதத்தில் தீர்வு! நிதி அமைச்சர் உறுதி

மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும் என நிதி அமைச்சர் அலி சப்ரி கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்சித் தலைமைக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் வர்த்தக மற்றும் சமுர்த்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோரும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு எடுக்கப்பட … Read more