சாதாரண தரப் பரீட்சை மே 23ம் திகதி,உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17ம் திகதி,புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 16ம்

2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சை மே மாதம் 23ம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சும்இ பரீட்சைகள் திணைக்களமும் திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இம்முறை இந்தப் பரீட்சைக்கு நான்கு இலட்சத்து 5 ஆயிரத்து 123 பாடசாலை விண்ணப்பதாரிகளும்இ 1 இலட்சத்து 10 ஆயிரத்து 367 தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் விண்ணப்பத்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார். எதிர்வரும் காலத்தில் பாடசாலை … Read more

தியவண்ணா பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு 40 வருடங்கள் பூர்த்தி

இலங்கை பாராளுமன்றம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே இல் உள்ள தற்போதைய கட்டடத்துக்கு கொண்டுவரப்பட்டு நாளையுடன் (29) 40 வருடங்கள் பூர்த்தியடைகிறது. காலி முகத்திடலில் அமைந்திருந்த பாராளுமன்றக் கட்டடத்தில் போதிய இடவசதி இன்மையால் அதனை வேறொரு இடத்துக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் பின்னர் கோட்டே பிரதேசத்தில் பாராளுமன்றத்துக்குப் புதிய கட்டடத்தை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்கமைய 1979ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பிரதேசத்தில் காணப்பட்ட 16 ஏக்கர் சிறிய தீவில் புதிய பாராளுமன்றக் கட்டடத்துக்கான … Read more

எதிர்க்கட்சி தலைவராகும் நாமல்..! ஜனாதிபதியிடம் சென்ற பொதுஜன பெரமுனவின் பின்வரிசை எம்.பிக்கள்

மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனவே மகிந்தவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க வேண்டாம் என குறித்த குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மகிந்தவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் 100க்கும் மேற்பட்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் … Read more

விமானப்படைத் தளபதி சுமங்கல டயஸ் ,மலேசிய மன்னருக்கு நற்சான்றிதழ்களை கையளிப்பு

உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் தாபரே லியனகே சுமங்கல டயஸ் அவர்கள் நற்சான்றிதழ் கடிதங்களை மலேசியாவின் அதி மேதகு யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா அல்-முஸ்தாயின் பில்லாவிடம் 2022 ஏப்ரல் 25ஆந் திகதி இஸ்தானா நெகாரா, கோலாலம்பூரில் வைத்து கையளித்தார். நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கௌரவ அணிவகுப்பு வழங்கப்பட்டு, இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. கௌரவ அணிவகுப்பைத் தொடர்ந்து நற்சான்றிதழ்களை கையளித்ததன் … Read more

குடிவரவு – குடியகல்வுத் திணக்களத்தின் ஊடக அறிக்கை

இலங்கையில், செல்லுடியான வீசாவைக் கொண்டுள்ள ரஷ்யா மற்றம் உக்ரைன் நாட்டு சுற்றுலாப்பயணிகள் தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:  

கணக்கு விபரங்களுடன் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் குறைவடைந்த வெளிநாட்டு நாணய ஒதுக்குகள் இலங்கையர்களுக்கு அத்தியாவசியமான மருந்து பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவு போன்ற நாளாந்த தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு பாரியளவான இடர்பாடுகளை தோற்றுவித்ததன் காரணமாக அனைத்து இலங்கையர்களும் தற்போது சமூக, பொருளாதார மற்றும் நிதியியல் போன்ற இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எனவே இலங்கை மக்களால் முகங்கொடுக்கப்படும் இன்னல்களை இலகுபடுத்த உதவுவதற்காக வெளிநாட்டில் வதிகின்ற அனைத்து இலங்கையர்கள் மற்றும் எந்தவொரு தேசத்தையும் சேர்ந்த அனைத்து நலன்விரும்பிகளின் வெளிநாட்டு நாணய … Read more

தனியார், அரச போக்குவரத்து சேவைகள் வழமை போன்று…

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் வழமையான முறையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்ஹங்ஸ தெரிவித்துள்ளார். இன்று நான்காயிரத்து 700 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை. தனியார் பஸ்களும் இன்று சேவையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.  

மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை

நிட்டம்புவ பிரதேசத்தில் மக்கள் ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்டத்தினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நிட்டம்புவ மக்கள் இன்றும் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டயர்களை எரித்தும், சாலை மறியல் செய்தும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டயர்கள் பற்றி எரிவதனால் வீதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, இன்றைய வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ரயில் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் உறுதியாக பணிகளுக்குச் செல்வதாக வழங்கிய … Read more

இந்தோனேசியா ,இலங்கைக்கு 3.1 டொன் மனிதாபிமான நன்கொடை உதவி

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இந்தோனேசியாவின் தூதுவர் மாண்புமிகு திருமதி. டெவி குஸ்டினா டோபிங்கை 2022 ஏப்ரல் 27ஆந் திகதியாகிய தினம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து வரவேற்றதுடன், இந்தோனேசியா அரசாங்கத்தின் இலங்கைக்கான மனிதாபிமான உதவியின் புதிய தகவல்கள் குறித்து இந்தோனேசியத் தூதுவர் விளக்கினார். இலங்கையின் சுகாதார அமைச்சின் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான கோரிக்கைக்கு இணங்க, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உள்ளடக்கிய 517.5 மில்லியன் இலங்கை ரூபா (அண்ணளவாக … Read more