நாளுக்கு நாள் உயரும் டொலரின் பெறுமதி! நெருக்கடி தொடர்பில் ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு

இன்று பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 360 ரூபாவாக பதிவாகியுள்ளது. நாளுக்கு நாள் டொலரின் மதிப்பு உயர்ந்து வருவதே கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மத்திய வங்கியினால் நேற்று (27) வெளியிடப்பட்ட மாற்று விகிதங்களின்படி 350 ரூபா 49 சதம் மற்றும் கொள்முதல் விலை 337 ரூபா 82 சதமாகும்.   Source link

போக்குவரத்து சேவைக்கு பாதுகாப்பு

அரச சேவை ஊழியர் சங்கங்கள் பல இன்று ஏற்பாடு செய்துள்ள வேலை நிறுத்தத்தில், ரயில் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவை ஊழியர் சங்கங்கள் ஒன்றிணைவதில்லை என்றும் , தனியார் பஸ் சேவை ஊழியர்களும் பங்குகொள்வதில்லை எனவும்  போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதற்கு அமைவாக பொது பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு இந்த பிரதிநிதிகள் உடன்பட்டிருப்பதாகவும் அமைச்சர் நேற்று தெரிவித்தார். இதேபோன்று இன்றைய தினம் சேவையில் ஈடுபடும் பொது போக்குவரத்து சேவைகளுக்கு தேவையான … Read more

திணைக்களங்கள் பலவற்றில் ஒரு நாள் சேவைக்கு பாதிப்பு இல்லை

இன்று (28) பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை இடம்பெற்ற போதிலும் திணைக்களங்கள் பலவற்றின் ஒரு நாள் சேவைக்கு தடை ஏற்படாது என இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு அமைவாக குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றில் ஒரு நாள் சேவை இடம்பெறும்

முழுமையாக முடங்கியது கொழும்பு நகரம் (Video)

சமகால அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு நகரம் தற்போது முழுமையாக முடங்கியுள்ளது.   நாடளாவிய ரீதியில்  அரச மற்றும் தனியார் துறையின் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணியளவில் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகள் முடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழு Leprosy நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார் . ஐனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 50 நோயாளிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆரையம்பதி,ஏறாவூர்,செங்கலடி போன்ற பகுதிகளில் அதிகமான நோயாளிகள் இனங்காணப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார். மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் தொழுநோய் தடுப்பு இயக்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலமர்வு மண்டபத்தில் (28) இடம்பெற்றது. தேசிய … Read more

காலி முகத்திடல் போராட்டக்காரர்களினால் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

காலி முகத்திட்டலில் மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த நாள் முதல் இதுவரையில் கடமையில் ஈடுபட நாட்டின் 4 பக்கத்தில் இருந்தும் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு உணவு வழங்குவதற்காக மாத்திரம் இன்று வரையில் பொலிஸ் திணைக்களம் 3 கோடி ரூபாய் வரையில் செலவிட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. தற்போது போராட்ட இடத்தை இலக்கு வைத்து சுமார் 1500 பேர் பொலிஸ் திணைக்களத்திற்கு விஷேட கடமைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நாளாந்த உணவுக்காக பொலிஸ் திணைக்களம் நாளொன்றுக்கு சுமார் 17 … Read more

அரசாங்கத்தின் எதிர்காலம் தொடர்பில் ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் முரண்பாடு

அரசாங்கத்தின் எதிர்காலம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் தொடர்ந்து முரண்பாடுகள் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதியினால் எழுதப்பட்ட கடிதத்துடன் இந்த விடயம் வெளிவந்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு மூன்று பிரிவுகளின் மகாநாயக்கர்கள் உட்பட பல … Read more

இலங்கையின் நிலை குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கடும் ஆதங்கம்

இலங்கையின் வளங்களை சூறையாடியவர்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் Steven Horsford தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான Steven Horsford அண்மையில் இலங்கையர்கள் சிலரை சந்தித்த பேசிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் வளங்கள் சூறையாடப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பிலான தகவல்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை ஆட்சி செய்யும் ஒரு குடும்பம் காரணமாக இலங்கை வங்குரோத்து நிலையினை எதிர்நோக்கியுள்ளமை தொடர்பாக அமெரிக்க தலைவர்களை தௌிவுபடுத்துவதாக … Read more

வர்த்தக அமைச்சின் செயலாளர் உடன் அமுலாகும் வகையில் பதவியிலிருந்து நீக்கம்

வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜே.எம்.பி.ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜே.எம்.பி.ஜயவர்தன வர்த்தக அமைச்சின் செயலாளராக இருப்பதுடன், பல நிறுவனங்களின் தலைவராகவும் மேலும் பல நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், ஜே.எம்.பி.ஜயவர்தனவை செயலாளர் பதவியிலிருந்து நீக்குமாறு முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தொடர்ந்தும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, வர்த்தக அமைச்சின் புதிய செயலாளராக … Read more