இலங்கையின் நிலை குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கடும் ஆதங்கம்

இலங்கையின் வளங்களை சூறையாடியவர்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் Steven Horsford தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான Steven Horsford அண்மையில் இலங்கையர்கள் சிலரை சந்தித்த பேசிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் வளங்கள் சூறையாடப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பிலான தகவல்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை ஆட்சி செய்யும் ஒரு குடும்பம் காரணமாக இலங்கை வங்குரோத்து நிலையினை எதிர்நோக்கியுள்ளமை தொடர்பாக அமெரிக்க தலைவர்களை தௌிவுபடுத்துவதாக … Read more

வர்த்தக அமைச்சின் செயலாளர் உடன் அமுலாகும் வகையில் பதவியிலிருந்து நீக்கம்

வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜே.எம்.பி.ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜே.எம்.பி.ஜயவர்தன வர்த்தக அமைச்சின் செயலாளராக இருப்பதுடன், பல நிறுவனங்களின் தலைவராகவும் மேலும் பல நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், ஜே.எம்.பி.ஜயவர்தனவை செயலாளர் பதவியிலிருந்து நீக்குமாறு முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தொடர்ந்தும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, வர்த்தக அமைச்சின் புதிய செயலாளராக … Read more

மக்கள் மத்தியில் கோட்டாபயவின் செல்வாக்கு பாரியளவில் வீழ்ச்சி – IHP அறிக்கை வெளியானது (Photo)

 தற்போதைய பொருளாதார நெருக்கடி நாட்டிலுள்ள அனைத்து அரசியல்வாதிகள் மீதும் பொதுமக்களின் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார கொள்கை நிறுவனம் (IHP Sri Lanka Opinion Tracker Survey) நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் இருந்து ஆதரவு சரிந்துள்ளது என்பதை இந்த கருத்துக்கணிப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு மக்கள் மத்தியில் இருந்து ஆதரவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, 2021 ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நாடு … Read more

ஒரு சக்திவாய்ந்த குடும்பம் வெறும் 30 மாதங்களில் இலங்கையை திவாலாக்கியது – Bloomberg சஞ்சிகை தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கை எவ்வாறு வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளது என்பது குறித்து Bloomberg சஞ்சிகை விரிவாக விளக்கியுள்ளது. 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வரிக் குறைப்புகளை அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்த போது, ​​இலங்கையின் அப்போதைய நிதியமைச்சர் மங்கள சமரவீம, இது ஒரு ஆபத்தான நடவடிக்கை என்று தெரிவித்திருந்தார். இந்த முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் முழு நாடும் திவாலாகிவிடும் என்றும் கூறினார். முழு நாடும் மற்றொரு வெனிசுலா அல்லது … Read more

மகிந்த மற்றும் கோட்டாபயவுக்கு மீண்டுமொரு கால அவகாசம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகுவதற்கு மீண்டும் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க பிரதிநிதிகள்  இதனை தெரிவித்துள்ளனர். இதனை புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். இன்று இந்த நடவடிக்கைக்கு சம்மதித்துள்ள தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. எனவே, ராஜபக்ச அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தயவு செய்து இதை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறோம். … Read more

பிரதமர் பதவி விலகக் கூடாது என பிரதேச சபை தவிசாளர்களும் மேயர்களும் ஏகமனதாக தீர்மானம்

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்யக்கூடாது என பிரதேச சபை தவிசாளர்களும் மேயர்களும் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். கௌரவ பிரதமருடன் அலரி மாளிகையில் இன்று (27) நடைபெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத் தலைவர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஆகியோர் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தமது கருத்துக்களை முன்வைத்தனர். மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் பெரும்பான்மை வாக்குகளால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் பிரதமர் என்றும் மக்களின் இறையாண்மைக்கு பிரதமர் தலைவணங்கினால் அவர் … Read more

அலரி மாளிகையில் இருந்து கேட்கும் பாரிய சத்தம்! அமைதி காக்கும் போராட்டக் காரர்கள் (Video)

அலரி மாளிகையிலிருந்து பிரித் ஓதும் சத்தம் கேட்பதாக  அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  மிக அதிகமான சத்தத்துடன் பிரித் ஓதும் ஓசை கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டக்  காரர்கள் கூடாரம் அமைத்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதனை தடுப்பதற்காக பிரித் ஓதும் சத்தம் ஒலிக்கச் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது பிரித் ஓதும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.  இந்த சத்தத்தின் காரணமாக அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக … Read more

றம்புக்கனை சம்பவம்: தொடர்புடைய அனைத்து பொலிசாரையும் கைதுசெய்து ஆஜர்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீதிவான் உத்தரவு

றம்புக்கனை துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிசாரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு கேகாலை நீதவான் திருமதி வாசனா நவரட்ன உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் செய்த மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அவர் அறிவித்துள்ளார். றம்புக்கனை ரயில் நிலையத்திற்கு அருகில் பாதையை இடைமறித்து, கடந்த 19ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது, கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டவர்களை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் … Read more