றம்புக்கண சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸார் அதிகாரிகளையும் கைது செய்ய உத்தரவு

றம்புக்கண பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸாரையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேகாலை நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சட்டவைத்திய பரிசோதனைகளில் அவர்களது காயங்கள் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டது என உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக கைது … Read more

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ,எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து திணைக்களத் தலைவர்களுடன் கலந்துரையாடல்

நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத், எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் கீழ் உள்ள திணைக்களத் தலைவர்களுடன் கூட்டுக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளார்.  2022.04.27 நெடுஞ்சாலைகள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அது தொடர்பான சேவைப் பிரிவுகளின் தலைவர்களுடனான சந்திப்பு புதிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள … Read more

IMF ஐ இறுகப்பிடிக்கும் இலங்கை!! ராஜபக்சர்களின் தலை தப்ப ஒரே வழி (Video)

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நிராகரித்து வந்தநிலையில், நிலைமை மோசமடையும் பட்சத்தில் தற்போது பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் கடந்த ஒரு வருடமாக ஏற்பட்டுள்ள டாலர் பிரச்சனை காரணமாக நாட்டில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவி கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஆனாலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்கும் போது நிபந்தனைகளை விதிக்கும் என்ற விடயம் வெகுவாக பேசப்படுகிறது. Source link

தமிழக தேர்த்திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்! 10பேர் பலியாகினர்(Photo)

தமிழகம் -தஞ்சாவூர் அருகில் இடம்பெற்ற தேர்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கம் காரணமாக 10 பேர் பஉயிரிழந்துள்ளனர். களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம், 94-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்று வந்தது. இதன்போது  தஞ்சாவூர் பூதலூர் சாலையில் உயர் மின்அழுத்த கம்பியுடன் தேர் உரசியபோதே மின்சார தாக்கம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே 10பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தஞ்சை அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி … Read more

ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி! 350ஐ கடந்த டொலர்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.   இதன்படி,  அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில்  இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்று 355 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.  தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ரூபாவின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து வருகிறது. நேற்று  மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 333.88 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   Source link

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு

2021 ஆம் ஆண்டு 3.6 சதவீதமாக இருந்த இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.6 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இந்த வாரம் ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளுக்கான கணிப்புகளை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பிற்கமைய, 2023ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதம் என கணிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில், உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு, சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, ஏற்கனவே இருக்கும் பாதிப்புகள் மற்றும் கடன் நிலைத்தன்மை … Read more

இலங்கையில் இதுவரையில் 6, 63 , 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் நேற்று (25) 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 63 ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிக்கையின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) 898 பேருக்கு பிசிஆர் பரிசோதனையும் மற்றும் 665 பேருக்கு அன்டிஜென் பரிசோதனையும் மேற்கொண்டதில் 29 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையின்படி ஜனவரி 1 முதல் இதுவரையில் மொத்தமாக 75 ஆயிரத்து … Read more

அரச நிறுவகங்களின் செலவினத்தை கட்டுப்படுத்துவதற்கு புதிய சுற்றுநிரூபம்

பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கோடு நிதியமைச்சு புதிய சுற்றுநிரூபமொன்றை வெளியிட்டுள்ளது. அரச சேவைச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக நிதி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சுக்கள், அரச அமைச்சுக்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு இதுதொடர்பாக விசேட சுற்றறிக்கை ஒன்றை நேற்று (26) விடுத்துள்ளார். அரச நிதியை பொறுப்பாகவும், முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டுமென்று இந்த சுற்றுநிரூபத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களின் போது செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. … Read more

சமையல் எரிவாயு விலை மறுசீரமைப்பு

நேற்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2,675 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,860 ரூபாவாகும். 5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,945 ரூபாவாகும். 2.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 910 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவிருப்பதாக … Read more

இலங்கை தேங்காய் துருவல் தயாரிப்புகள் பெல்ஜியத்தில் ஊக்குவிப்பு

பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 ஏப்ரல் 21ஆந் திகதி பெல்ஜியத்திற்கு இலங்கை தேங்காய் துருவல் தயாரிப்புக்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பதற்காக ‘தேங்காய் அதிசயம் – உண்மையிலேயே இலங்கை’ என்ற தலைப்பில் ஒரு பட்டறையை நடாத்தியது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, சிலோன் வர்த்தக சம்மேளனம் மற்றும் வர்த்தக சம்மேளனம் மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஆகியவை இலங்கையில் உள்ள தேங்காய் உற்பத்திகளை ஏற்றுமதி செய்பவர்களின் பங்கேற்பை மெய்நிகர் தளத்தில் ஒருங்கிணைத்தன. சைவம், சைவ உணவு மற்றும் ஆசிய … Read more