சமையல் எரிவாயு விலை மறுசீரமைப்பு

நேற்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2,675 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,860 ரூபாவாகும். 5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,945 ரூபாவாகும். 2.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 910 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவிருப்பதாக … Read more

இலங்கை தேங்காய் துருவல் தயாரிப்புகள் பெல்ஜியத்தில் ஊக்குவிப்பு

பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 ஏப்ரல் 21ஆந் திகதி பெல்ஜியத்திற்கு இலங்கை தேங்காய் துருவல் தயாரிப்புக்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பதற்காக ‘தேங்காய் அதிசயம் – உண்மையிலேயே இலங்கை’ என்ற தலைப்பில் ஒரு பட்டறையை நடாத்தியது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, சிலோன் வர்த்தக சம்மேளனம் மற்றும் வர்த்தக சம்மேளனம் மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஆகியவை இலங்கையில் உள்ள தேங்காய் உற்பத்திகளை ஏற்றுமதி செய்பவர்களின் பங்கேற்பை மெய்நிகர் தளத்தில் ஒருங்கிணைத்தன. சைவம், சைவ உணவு மற்றும் ஆசிய … Read more

பொருளாதார நெருக்கடி – ஊட்டச்சத்து குறைபாடுள்ள சமூகம் உருவாகும் அபாயம்

நாட்டில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் வாழ்க்கைச் செலவுகள் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்து போசாக்குக் குறைபாடுள்ள சமூகம் உருவாகுவதை தவிர்க்க முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் … Read more

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை பதவி விலகி புதிய ஜனாதிபதி மற்றும் அமைச்சரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கீழ் அரசாங்கத்தை அமைக்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகள் தயாரில்லை. நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மிகவும் உணர்வுப்பூர்வமாக … Read more

கொழும்பில் தொடரும் அவலம் – மண்ணெண்ணெய்க்காக வீதியில் உறங்கும் மக்கள் (Photo)

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருட்களுக்கான விலையும் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போதைய நெருக்கடி காரணமாக அரசியல் ஸ்தீரதன்மையும் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களை உடன் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையிலும் … Read more

பிரதமர் பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் ஏகமனதாக தீர்மானம்

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் இன்று (26) முற்பகல் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். கௌரவ பிரதமர், அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் சங்கத்தினருக்கு இடையில் அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய இந்த தீர்மானம் குறித்து அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கு அறிவிப்பதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைய … Read more

உக்ரைனின் மற்றுமொரு முக்கிய நகரை கைப்பறியது ரஷ்யா

உக்ரைன் முழு Kherson பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளதாக Interfax செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் தெற்கில் உள்ள மற்ற இடங்களில், ரஷ்ய துருப்புக்கள் Zaporizhzhia மற்றும் Mykolaiv பகுதிகளையும், Kyiv க்கு கிழக்கே உள்ள Karkiv இன் ஒரு பகுதியையும் கைப்பற்றியதாக, ஒரு மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லையென Sky News தெரிவித்துள்ளது. தெற்கு உக்ரைனில் உள்ள Kherson கருங்கடலில் உள்ள … Read more

உலக வங்கியிடம் இருந்து 600 மில்லியன் டொலர்கள் நிதியுதவி… தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க இணக்கம்…  

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படும் என உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி திருமதி சியோ கெண்டா (Chiyo Kanda) தெரிவித்துள்ளார். உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கும் இடையில் இன்று (26) பிற்பகல், கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே திருமதி சியோ கெண்டா இதனைத் தெரிவித்தார். … Read more