உலக வங்கியிடம் இருந்து 600 மில்லியன் டொலர்கள் நிதியுதவி… தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க இணக்கம்…  

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படும் என உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி திருமதி சியோ கெண்டா (Chiyo Kanda) தெரிவித்துள்ளார். உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கும் இடையில் இன்று (26) பிற்பகல், கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே திருமதி சியோ கெண்டா இதனைத் தெரிவித்தார். … Read more

மலையகத்தின் முதலாவது பேராசிரியை திருமதி ராஜலட்சுமி சேனாதிராஜா

மலையகத்தின் முதலாவது பேராசிரியை என்ற கௌரவம் திருமதி அன்னலட்சுமி சேனாதிராஜாவிற்கு கிடைத்துள்ளது. அவருக்கு கொழும்பு பல்கலைக்கழகம் முகாமைத்துவ பேராசிரியர் என்ற பதவி உயர்வை வழங்கியிருக்கிறது. மலையகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பேராசிரியையாக நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னதாக, கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் முதல் பீடாதிபதியாக கடமையாற்றிய பெருமை ராஜலட்சுமி சேனாதிராஜா அம்மையாருக்கு உள்ளது. இவர் பல தடவைகள் பதில் உபவேந்தராகவும் கடமையாற்றியவர். பேராசிரியை ராஜலட்சுமி பல நூல்களை எழுதியவர். தேசிய கல்வி நிறுவகத்திலும் பணியாற்றி … Read more

மகிந்தவின் அவசர அழைப்பு: அலரி மாளிகைக்கு செல்லப் போகும் உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவசர அழைப்பொன்றை விடுத்துள்ளார்.  இவர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.   பிரதமர் மகிந்த ராஜபக்ச  தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக   தெரிவிக்கப்படுகின்றது.  இக்கலந்துரையாடலில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Source link

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை தோண்டியெடுக்க நீதிமன்றம் அனுமதி

சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் தொடர்பான DNA பரிசோதனைக்கு, சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் நாளை (27) தோண்டியெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று (26) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை, இவ்வாறு தோண்டியெடுக்க கல்முனை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில், பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2019 … Read more

அலி சப்ரி அவர்கள் நீதி அமைச்சராக பதவியேற்றார்…  

அலி சப்ரி அவர்கள் நீதி அமைச்சராக இன்று (26) பிற்பகல், கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவர், நிதி அமைச்சராகவும் தொடர்ந்து செயற்படுவார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 26.04.2022

ஜூன் மாதத்திற்குள் ஏற்படப்போகும் மற்றொரு விலை அதிகரிப்பு

எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் ஒரு கிலோ கோழி இறைச்சி மற்றும் முட்டையின்  விலை அதிகரிக்கும் என தேசிய கால்நடை சபையின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள சுமித் மாகமகே தெரிவித்துள்ளார். இதன்படி, கோழி இறைச்சி  1500 ரூபாவாகவும் முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   கால்நடைத் தீவன விலைகள் மற்றும் இதர செலவுகள் பெருமளவில் அதிகரிப்பதே இதற்குக் காரணமாக இருக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறு மற்றும் நடுத்தர கால்நடை வளர்ப்புத் தொழிலாளர்கள் அந்தத் தொழில்களிலிருந்து … Read more

ஏறாவூர் புன்னக்குடா ஆடைக் கைத்தொழிற் பூங்கா வலயத்திற்கு முதலீட்டாளர்கள் விஜயம்

இலங்கை முதலீட்டு சபை தலைவர் ராஜ எதிரிசூரிய ,வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஏறாவூர் புன்னக்குடா ஆடைக் கைத்தொழிற் பூங்கா வலயத்திற்கு இன்று 26.04.2022 உத்தியோகபூர்வ கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர். இதன்போது இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேனுகா எம்.வீரகோன்,  சபையின் வலய நிறைவேற்று பணிப்பாளர் எம்.கே.டீ.லோரஸ்,  உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியளாளர் எந்திரி ஏ.எம்.றிஸ்வி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியியலாளர் டீ.ஏ.பிரகாஸ் … Read more

இலங்கைக்கு பெருந்தொகை டொலர் வழங்கும் உலக வங்கி

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வாக 600 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது. அதில் 400 மில்லியன் டொலர் நிதி உதவியை முதல் கட்டத்தின் கீழ் விரைவில் வழங்குவதாக உலக வங்கியின் இலங்கை சட்ட பிரதிநிதி சியோ கென்டா தெரிவித்துள்ளார். உலக வங்கியின் பிரதிநிதி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையில் இன்று மாலை கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் சியோ கென்டா இதனை தெரிவித்துள்ளார். மருந்து மற்றும் … Read more

அத்தியாவசிய சேவைகளுக்கான வரிசைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

குறுகிய காலத்தில் வரிசையில் காத்திருக்கும் செயற்பாட்டை நிறுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டவுடன் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்தப் பொறுப்புகளை இன்னொருவர் நிறைவேற்றும் வரை காத்திருப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தாம் முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறிய கௌரவ பிரதமர், இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னணியிலும் தான் காணப்படுவதை உறுதியாக நினைவில் கொள்ள … Read more