அத்தியாவசிய சேவைகளுக்கான வரிசைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

குறுகிய காலத்தில் வரிசையில் காத்திருக்கும் செயற்பாட்டை நிறுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டவுடன் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்தப் பொறுப்புகளை இன்னொருவர் நிறைவேற்றும் வரை காத்திருப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தாம் முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறிய கௌரவ பிரதமர், இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னணியிலும் தான் காணப்படுவதை உறுதியாக நினைவில் கொள்ள … Read more

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை: அமைச்சர் வெளியிட்ட தகவல்

எதிர்காலத்தில் நிச்சயமாக புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், தனது அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி குறைவினால் சம்பளம் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய வைத்தியசாலையில் சம்பளம் உட்பட ஏனைய தேவைகளுக்கு சம்பளம் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அப்படி … Read more

இலங்கையில் தங்கியுள்ள ரஷ்யா, உக்ரேன் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வீசா காலப்பகுதி நீடிப்பு

இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டண அறவீடுகளின்றி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுலா வீசா காலப்பகுதி நீடிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக 2022.04.25 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 01. இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டண அறவீடுகளின்றி வீசாவுக்கான காலப்பகுதியை நீடித்தல் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளால் இலங்கையில் … Read more

பிரதமரின் முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி (Photo)

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது என பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்வைத்த முன்மொழிவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் நேற்று பிற்பகல் கூடியிருந்தது. ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின் போது குறித்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது உட்பட சாதகமான அம்சங்களுடன் … Read more

சீனா இலங்கைக்கு மேலும் கடனுதவி

தற்போது நாட்டின் கடனை செலுத்துவதற்கு சீனா மேலும் ஒரு தொகையை கடனாக வழங்கவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை நடத்தி வரும் பேச்சுவார்த்தை தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள கூற்று பாதிப்பை ஏற்படுத்துமா? என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். சீனா உலக நாடுகளுக்கு கடன் வழங்கி வருகின்றது. கடன் மறுசீரமைப்பிற்கு சீனா இணக்கம் வெளியிடாமைக்கான காரணத்தையும் அமைச்சர் … Read more

தமிழ்நாட்டில் ,ஊரடங்கை அமல்படுத்தும் சூழ்நிலை தற்போது இல்லை

தமிழ்நாட்டில் ஊரடங்கை அமல்படுத்துவதற்கும், கட்டுப்பாடுகள் தீவிர படுத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என தமிழ்நாட்டின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். நோய் கட்டுப்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. ஐஐடியில் 79 ஆக இருந்த கொரோனா எண்ணிக்கை மேலும் 32 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்று … Read more

அலரி மாளிகைக்கு முன்னால் தீவிரமடையும் போராட்டம்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு (Video)

அலரி மாளிகையைச் சுற்றி தற்போது பாரிய போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் உடன் பதவி விலகவேண்டும் என தெரிவித்து நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அலரி மாளிகையைச் சுற்றியும்  போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.  இந்த நிலையில் குறித்த போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது.   இதேவேளை, குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   … Read more

ட்விட்டரை (Twitter ) எலோன் மஸ்க்கிற்கு விற்பனை செய்ய தீர்மானம்

சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை Twitter , டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க்கிற்கு Elon Musk. விற்பனை செய்வதற்கு அதன்  பணிப்பாளர் சபை உடன்பட்டுள்ளது. மஸ்க் கடந்த சில காலமாக ட்விட்டரை வாங்க முயற்சித்து வந்த நிலையில், தற்போது ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கிய … Read more

வாரத்தில் 7 நாட்களிலும் ஊடக கலந்துரையாடல் – புதிய ஊடக அமைச்சர் தெரிவிப்பு

வாரத்தில் 7 நாட்களில் வெகுஜன ஊடக அமைச்சு ஊடாக ஊடக கலந்துரையாடலை நடத்தி பொது மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (26) காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.இந்த ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரண, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர் … Read more