ட்விட்டரை (Twitter ) எலோன் மஸ்க்கிற்கு விற்பனை செய்ய தீர்மானம்

சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை Twitter , டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க்கிற்கு Elon Musk. விற்பனை செய்வதற்கு அதன்  பணிப்பாளர் சபை உடன்பட்டுள்ளது. மஸ்க் கடந்த சில காலமாக ட்விட்டரை வாங்க முயற்சித்து வந்த நிலையில், தற்போது ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கிய … Read more

வாரத்தில் 7 நாட்களிலும் ஊடக கலந்துரையாடல் – புதிய ஊடக அமைச்சர் தெரிவிப்பு

வாரத்தில் 7 நாட்களில் வெகுஜன ஊடக அமைச்சு ஊடாக ஊடக கலந்துரையாடலை நடத்தி பொது மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (26) காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.இந்த ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரண, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர் … Read more

விலை அதிகரிக்காமல் விநியோகம் இல்லை: லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரொன்றின் விலையானது 5175 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக கடந்த 22ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதன்படி எரிவாயு விலை அதிகரிக்கப்படாது எனவும் அரசாங்கம் … Read more

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால வதிவிட வீசா

நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால வதிவிட வீசா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண இன்று (26)  ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 01. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால வதிவிட வீசா வழங்குதல் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நீண்டகால வதிவிட வீசா வழங்கும் பொறிமுறைக்குப் பதிலாக … Read more

கோட்டாகோகமவிற்கு பிறகு இலங்கையில் உருவான மற்றொரு கிராமம் (Photos)

கோட்டாகோகமவிற்கு பிறகு இலங்கையில்  மற்றொரு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.  பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடுபவர்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் எனக் கோரி கடந்த இரு தினங்களான அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  இந்த போராட்டகார்கள் அருகில் தற்காலிக கூடாரங்களை அமைந்துள்ளதுடன் அதற்கு மைனா கோ கம (கிராமம்) என பெயரிட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு … Read more

ஜனாதிபதி, பிரதமர் பதவியில் இருந்து நீங்க வேண்டும் என்பது அரசியல் யாப்பிற்கு அமைவாக இடம்பெற வேண்டிய விடயம் – அமைச்சரவை பேச்சாளர்

ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு கோசங்கள் மூலம் ஜனாதிபதியையோ பிரதமரையோ பதவியில் இருந்து நீக்க முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பேராசிரியர் நாலக்க கொடஹேவா  தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.  ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 1993 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவிற்கு பதிலாக,  டி.பி.விஜயதுங்க இடைக்கால நிர்வாகத்திற்காக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி … Read more

தங்க சுவர்க்க விசா திட்டம்: விசா வழங்குவதில் புதிய பொறிமுறை – ஜனாதிபதியின் யோசனைக்கு அனுமதி

இலங்கையில் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நீண்டகால வதிவிட விசா வழங்கும் பொறிமுறைக்குப் பதிலாக புதிய முறைமையொன்றுக்கு 2021 மார்ச் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொறிமுறையின் கீழ் குறிப்பிட்ட நீண்டகால வதிவிட விசா வழங்குதல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கூட்டு ஆதனங்களின் பெறுமதி குறைந்தபட்சம் 75,000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு மேலதிகமாக முதலீடு செய்கின்ற வெளிநாட்டவர்களுக்கு … Read more

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணை அரசாங்கத்தின் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் சுயேட்சை உறுப்பினர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ்ஸின் இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் … Read more