இலங்கையில் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ள மின்சார கட்டணங்கள்: வழங்கப்பட்டுள்ள அனுமதி

இலங்கையில் மின்சாரக் கட்டணங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மின்சாரக் கட்டணங்களை 100 வீதத்தினால் உயர்த்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் இந்த கோரிக்கைக்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளது. சில மின்சாரக் கட்டணங்கள் 100 வீதத்தினால் உயர்த்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெற்கு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் சில மின்சாரக் கட்டணங்கள் 300, 400 வீதமாக உயர்வடையும் சாத்தியங்களும் உண்டு என … Read more

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம்: சமூக நெருக்கடிக்கான நடைமுறை சாத்தியமிக்க தீர்வு – பிரதமர்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை வலுவற்றதாக்கி, 19ஆவது திருத்தத்தில் தேவையான மற்றும் காலத்திற்கேற்ற திருத்தங்களை மேற்கொண்டு அமுல்படுத்துவதே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கான நடைமுறை சாத்தியமிக்க தீர்வாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையின் முதலாவது அமர்வு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ தலைமையில் நேற்று (26) இடம்பெற்றது. இதன் போது இது தொடர்பான ஆலோசனையை பிரதமர் அமைச்சரவையில் முன்வைத்தார். திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்க பிரதமர் அமைச்சரவையின் அனுமதியை … Read more

மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம்

நேற்று (25) முதல் மூன்று நாட்களுக்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நாளாந்த மின் துண்டிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் குறைக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இதன்படி நேற்று முதல், எதிர்வரும் மூன்று நாட்களுக்கு, மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுவதாக என்று சபை தெரிவித்துள்ளது. மேலும், A முதல் L வரையிலான வலயங்களுக்கும், P முதல் W வரையிலான வலயங்களுக்கும் காலை 9.30 முதல் மாலை 5.30 வரையிலான நேரத்தில் 2 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு … Read more

அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கிய எஸ்.பி. திஸாநாயக்க

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க விரைவில் தீர்க்கமானதொரு அரசியல் முடிவை எடுக்கவுள்ளார் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசு மீது அவர் ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்தார். அவரைச் சமாளிப்பதற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. அந்தப் பதவியில் அவர் 30 நாட்கள் மட்டுமே நீடித்தார். புதிய அமைச்சரவையில் அவருக்கு இடமளிக்கப்படவில்லை. தற்போது அரசை அகற்றுவதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. … Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு (Photo)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். தற்போதைய நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தியதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன்றைய சவால்களைத் தீர்ப்பதற்கான ஒரே வழி, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதும், தீர்வில் அனைத்து இலங்கையர்களின் நலன்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகும” என குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கான … Read more

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்ற தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட நிகழ்ச்சி  

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்ற தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்வை எதிர்வரும் 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு பாராளுமன்றக் குழு அறை இலக்கம் 01 இல் இந்த விசேட நிகழ்வு நடைபெறவுள்ளதுடன், இதனை பாராளுமன்ற அரசாங்க நிதி பற்றிய குழு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் பிரதான வளவாளராக கலாநிதி ஸ்வர்னிம் வாக்லே கலந்துகொள்ளவுள்ளார். இவர் தற்பொழுது பொருளாதாரக் … Read more

இலங்கையின் பொருளாதாரம் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு

இலங்கையின் 2022ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை 2.6 வீதமாக சர்வதேச நாணய நிதியம் குறைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் பிரகாரம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.6 வீதமாக பதிவாகியிருந்தது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கணிப்பின் பிரகாரம் 2023ம் ஆண்டு 2.7 வீத வளர்ச்சியும் 2029ம் ஆண்டு 2.9 வீத வளர்ச்சியும் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட உலகப் பொருளாதார கண்ணோட்ட கணிப்பின் பின்னர் அனைத்துலக பொருளாதார நிலைமைகள் கணிசமான அளவு … Read more