ஜனாதிபதி செயலகம் முன் சவப்பெட்டியை எரித்து ஆர்ப்பாட்டம் (Photo)

அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் 16வது நாளாக தொடர்ந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சவப்பெட்டி மற்றும் மலர்வளையம் ஆகியவற்றை கொண்டுவந்துள்ளனர். அண்மையில் றம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற அரச எரிப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த … Read more

இத்தாலி ,இலங்கைக்கு  125 மில்லியன் ரூபா அவசர நிதி உதவி

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ,இலங்கை அரசாங்கத்திற்கு ,ஒரு தொகை நிதியை அவசர உதவியாக வழங்க இத்தாலி முன்வந்துள்ளது. இதற்கமைவாக இலங்கைக்கு 125 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக ,கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின், இத்தாலிய இருதரப்பு அவசர நிதியம் மூலம் ,இந்த நிதி இலங்கைக்கு வழங்கப்படுவதாக கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விநியோக வலைப்பின்னல் முகாமைத்துவ செயல்முறையின் கீழ், சுகாதார அமைச்சினால் பெறுகை நடைமுறைக்கு ஏற்ப … Read more

மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து பதில் கடிதம்…

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதி  அவர்கள், பிரதமர் அவர்கள்,   எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளால் 2022.04.20ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  அவர்கள் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேற்கோள், “அதிவணக்கத்திற்குரிய உயர் தலைமை தேரர்களே, நாட்டில்  தற்போது ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை விரைவில் தீர்ப்பது தொடர்பாக, மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகள் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாக, … Read more

இராஜாங்க அமைச்சு பதவியேற்ற இருவரை கட்சியிலிருந்து நீக்கிய மைத்திரி

இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்த நீக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார். Source link

3,600 மெட்ரிக் தொன் எரிவாயுடனான கப்பல் நாளை இலங்கையை வந்தடையும்

மூவாயிரத்து 600 மெட்ரிக் தொன் எரிவாயுடனான கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக லிற்றோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார். இந்த காஸ் நாளை மறுதினம் முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ஏழாயிரத்து 200 மெட்ரிக் தொன் எரிவாயுடனான இரண்டு கப்பல்கள் ,இரண்டு வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

21ம் திருத்தச் சட்டத்தை கொண்டுவர அனுமதி

21ம் திருத்தச் சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 19ம் மற்றும் 20ம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 21ம் திருத்தச் சட்டத்தை கொண்டுவரவும், அதற்கான அமைச்சரவை உப குழுவை நியமிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    Source link

இந்தியாவில் ஒரே வாரத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 90% மாக அதிகரிப்பு

கடந்த சில வாரங்களில் வெளிவந்த கொரோனா தரவுகளின்படி, இந்தியாவில் 12 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. கடந்த ஞாயிறிலிருந்து நேற்று வரைக்குட்பட்ட காலகட்டத்தில்மட்டும், இந்தியாவில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. அந்தவகையில் இந்தியாவில் ஏப்ரல் 18 முதல் 24 வரைக்குட்பட்ட காலத்தில் சுமார் 15,700 பேருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 8,050 என்றே இருந்தது. கிட்டத்தட்ட 95% அதிகம் பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. கிட்டதட்ட 11 வாரம் … Read more

மகிந்தவுக்கு கடும் நெருக்குவாரம்: பதவி விலகாவிட்டால் தூக்கியெறியப்படும் ஆபத்து!

அரசாங்கத்திற்கு எதிராக தற்போது 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர், தற்போது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வரைவை தயாரித்து, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜேவிபியுடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பில் அந்த இரண்டு எதிர்க்கட்சிகளும் தமது சம்மதத்தை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் அரசாங்கம் பதவி … Read more

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு மூன்றே நாளில் தீர்வு: வெளியான அறிவிப்பு

அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய நெருக்கடிக்கு மூன்று நாட்களுக்குள் தீர்வு காண முடியும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.  இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள விசேட கடிதமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக மக்கள் கோரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் இடைக்கால தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய நெருக்கடிக்கு … Read more