மகிந்தவுக்கு கடும் நெருக்குவாரம்: பதவி விலகாவிட்டால் தூக்கியெறியப்படும் ஆபத்து!

அரசாங்கத்திற்கு எதிராக தற்போது 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர், தற்போது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வரைவை தயாரித்து, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜேவிபியுடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பில் அந்த இரண்டு எதிர்க்கட்சிகளும் தமது சம்மதத்தை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் அரசாங்கம் பதவி … Read more

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு மூன்றே நாளில் தீர்வு: வெளியான அறிவிப்பு

அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய நெருக்கடிக்கு மூன்று நாட்களுக்குள் தீர்வு காண முடியும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.  இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள விசேட கடிதமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக மக்கள் கோரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் இடைக்கால தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய நெருக்கடிக்கு … Read more

சிங்கள மேலாதிக்கத்தால் தமிழர்களை கொலை செய்து விட்டோம் – குமுறும் தென்னிலங்கை நபர்(video)

இலங்கையில் சிங்களவர்கள் தான் முதன்மையானவர்கள் என எண்ணி அப்பாவி தமிழர்களை கொலை செய்துவிட்டோம் என, கொழும்பு, காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிங்கள ஒருவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். “நாட்டில் குண்டு போட்டு மகிந்த குடும்பத்தினர் வீரர்களாக திகழ்ந்தார்கள். 69 லட்ச மக்களுக்கும் அவர்கள் வீரர்களாக காணப்பட்டார்கள். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள தவறை மக்களாகிய நாங்களும் ஏற்க வேண்டிய நிலைமையில் உள்ளோம். 80ஆம் ஆண்டுகளில் இனப்படுகொலைகள் நடந்த போது … Read more

பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்: குறைக்கப்படவுள்ள பொருட்களில் விலைகள்

எதிர்வரும் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சிறிதளவு குறைக்கப்படலாம் என  எதிர்பார்க்கப்படுகின்றது.   இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு குறைப்பு எதிர்பார்க்கப்படுவதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதை ஆரம்பிக்க முடியும் என குறித்த சங்கத்தின்  பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். டொலர் மதிப்பு உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக … Read more

அலரி மாளிகையை சுற்றி ஆர்ப்பாட்டம்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு (Photo)

அலரி மாளிகைக்கு முன்பாக தற்போது சிறிய குழுவினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றது.  குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  மேலும் அலரி மாளிகையைச் சுற்றிய வளாகத்தில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் போன்ற பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.   Source link

மூன்று நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அந்த அடிப்படையில் குறித்த மூன்று நாட்களிலும் A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலய பகுதிகளுக்கு முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த வலய பகுதிகளில் மாலை 5.30 மணி முதல் இரவு … Read more

பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து

நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் இந்த வீதம் 30 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் நிபுணர் மருத்துவர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளமையினால் இதய நோய்கள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பலர் தங்கள் அன்றாட  நடவடிக்கைகளை தவிர்த்து கடுமையான வெயிலில் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. வரிசையில் நின்றும் சில சமயங்களில் வெறுங்கையுடன் … Read more

இலங்கையிலிருந்து மேலும் பலர் தமிழகத்தில் தஞ்சம் (Video)

இலங்கையர்கள் 15 பேர் இன்று காலை தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகம் நோக்கி அகதிகள் படையெடுக்கின்றனர். அந்தவகையில் யாழ். காக்கைதீவைச் சேர்ந்த 15 பேர் இன்று அதிகாலையும் தமிழகத்திற்கு தனுஷ்கோடி ஊடாக சென்றடைந்துள்ளனர். Source link

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஏற்பட்டுள்ள நிலை: விமான சேவைகள் முடங்கும் ஆபத்து

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 24 விமானங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் 11 விமானங்களாக குறைக்கப்படும் என விமான சேவையின் ஸ்ரீலங்கன் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் சர்வதேச விமான நிறுவனங்களுடன் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் போட்டியிட முடியாது நிலைமை ஏற்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான 24 விமானங்களில் எட்டு விமானங்களின் பயணிக்கும் கால எல்லை அடுத்த ஆண்டு காலாவதியாகும் எனவும், தற்போதைய தினசரி அட்டவணையைப் பராமரிக்க விமானங்களைப் பெறுவது கட்டாயமாகும் … Read more

கொழும்பில் கடுமையாக அமைக்கப்பட்டுள்ள வீதித்தடைகள்! நேரில் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலை நோக்கி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் முகமாக கொழும்பை சூழவுள்ள சில வீதிகளில் போடப்பட்டிருந்த வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற பொருள் பொருத்தப்பட்டு, அவை கறுப்பு பிளாஸ்டிக்குகளால் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்ததுடன்,அவை தொடர்பிலான புகைப்படங்களும் வெளியாகியிருந்தது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசனும் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது பாதுகாப்பிற்காக நின்ற படையினரிடம் … Read more