புது சேனல் தொடங்கும் விஜய் டிவி! பெயர் இது தான்.. லீக் ஆன லோகோ

சின்னத்திரையில் ரசிகர்களுக்கு போட்டிபோட்டுக்கொண்டு சேனல்கள் நிகழ்ச்சிகளை உருவாக்கி வருகிறார்கள். இதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் அதிகம் போட்டி இருந்து வருகிறது. சன் டிவிக்கு சொந்தமாக பல சேனல்கள் இருக்கின்றன. ஸ்டார் விஜய் குரூப்புக்கு தமிழில் தற்போது விஜய், விஜய் மியூசிக் ஆகிய சேனல்கள் இருக்கின்றன. இந்நிலையில் “விஜய் டக்கர்” என அந்த சேனலுக்கு பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. இருப்பினும் இது முழுவதும் புது சேனலா, அல்லது விஜய் மியூசிக் … Read more

அம்பியூலன்ஸ் வண்டிக்கு இடம் கொடாத பொலிஸார்! ஆத்திரமடைந்த பொது மக்கள் (Video)

கொழும்பு –   லோட்டஸ் வீதியில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடையின் காரணமாக அப்பகுதியில் வந்த அம்பியூலன்ஸ் வண்டிக்கு பொலிஸார் இடம்கொடுக்கவில்லை என அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  இதன் பின்னர் அங்கிருக்கும் பொதுமக்கள் ஆத்திரமடைந்ததை அடுத்து அம்பியூலன்ஸ் வண்டி திரும்பிச் சென்றுள்ளது.   கொழும்பு காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கிளை ஆர்ப்பாட்டப் பேரணிகள் காலி முகத்திடலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.  இதனைத் தடுக்கும் முகமாக காலி முகத்திடலை அண்மித்த வீதிகளில் வீதித் … Read more

தீவிர முயற்சியில் பிரதமர் மஹிந்த – கண்டுகொள்ளாத இளைஞர்கள்

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் கலந்துரையாடலுக்கு தயார் என அலரி மாளிகை எந்த நேரத்திலும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். போராட்டமான சூழல் உள்ளது தான். அதற்கு தீர்வு காண கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ள வேண்டாமா? கலந்துரையாடலுக்கு வரவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் தான் தொடரும். அரசாங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொள்ளுங்கள். அதனை மாத்திரமே என்னால் மேற்கொள்ள முடியும். அரசாங்கத்தில் அவர்கள் நம்பும் … Read more

தனது உடல் நிலை தொடர்பில் பிரதமர் மகிந்த வெளியிடும் தகவல்(Video)

தான் எந்தவொரு நோயினாலும் பாதிக்கப்படவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தான் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்களை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு நோயாளியைக் கூட பார்ப்பதற்காகவேனும் தான் வைத்தியசாலையின் பக்கம் செல்லவில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். தான் பேசும் தருணத்தில் கூட உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,  … Read more

கோட்டாபயவின் ஏமாற்றத்தால் கடும் வேதனையில் முன்னாள் அமைச்சர்

 முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது பெரும் மன வேதனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கு இம்முறை அமைச்சரவை அமைச்சு பதவி வழங்காமையே இதற்கு பிரதான காரணமாகும். இது தொடர்பில் அவர் தனக்கு நெருக்கமான அரசியல்வாதிகள் சிலருடன் கடந்த நாட்களாக கருத்து வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. “இயற்கை உரம் என்பது ஜனாதிபதியின் மகன். அதனை செய்வதற்கு ஒருவரும் முன்வரவில்லை. இறுதியில் நான் தான் எனது அரசியல் குறித்தும் சிந்திக்காமல் அதனை செய்வதற்கு முன்வந்தேன். ஜனாதிபதிக்காக ஜனாதிபதியின் இயற்கை … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்பும் தொகையில் அதிகரிப்பு – மத்திய வங்கி அறிக்கை

இலங்கைக்கான வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் 2022 மார்ச் மாதத்தில் சிறிய அதிகரிப்பு கண்டுள்ளது. பெப்ரவரியில் 205 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கை தொழிலாளர்களின் பணம் மார்ச் மாதத்தில் 318 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. மார்ச் 2021 இல் இலங்கை பெற்ற 612 மில்லியன் அமெரிக்க டொலர்களை விட இந்த தொகை இன்னும் குறைவாகவே உள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து இலங்கை நாணயத்தை மிதக்க … Read more

எதிர்வரும் காலங்களில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் – ரணில் எச்சரிக்கை

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருளுக்காக வழங்கப்பட்ட இந்தியக் கடன் வசதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான ஒரு பில்லியன் டொலர் கடன் திட்டம் முதல் வாரத்தில் முடிவடைவதால் அடுத்த மாதம் இலங்கை பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற தனியார் வங்கியாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் … Read more

அரசை எதிர்த்து கண்டி முதல் கொழும்பு வரை இடம்பெறப்போகும் மாபெரும் பேரணி

ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் இருந்து கொழும்பு வரை ‘சமகி ஜன பாகமன’ என்ற பெயரில் எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் கண்டியில் இருந்து ஆரம்பமாகி 30ஆம் திகதி கொழும்பை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, இந்த எதிர்ப்புப் பேரணியானது பின்வரும் 5 கட்டங்களைக் கொண்டதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். * முதலாம் … Read more

நீதி கோரி வீதிக்கு இறங்கிய மஹிந்த! (Photo)

றம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞருக்கு நீதி கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலை நாளுக்கு நாள்  விண்ணை தொடும் அளவிற்கு உயர்கின்றன. இதனை கண்டித்து அண்மையில் … Read more

அடுத்த மூன்றாடுகளுக்கான திட்டங்களை அறிவித்தார் ஜனாதிபதி

எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் நீர் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் தேசிய இலக்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நீர் வழங்கல் திட்டங்களின் கொள்ளளவையும் தரத்தையும் மேம்படுத்தி, நாடு முழுவதும் புதிய நீர் திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ஜப்பானின் குமமோட்டோவில் இன்று (23) முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட 4வது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி … Read more