நீதி கோரி வீதிக்கு இறங்கிய மஹிந்த! (Photo)

றம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞருக்கு நீதி கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலை நாளுக்கு நாள்  விண்ணை தொடும் அளவிற்கு உயர்கின்றன. இதனை கண்டித்து அண்மையில் … Read more

அடுத்த மூன்றாடுகளுக்கான திட்டங்களை அறிவித்தார் ஜனாதிபதி

எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் நீர் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் தேசிய இலக்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நீர் வழங்கல் திட்டங்களின் கொள்ளளவையும் தரத்தையும் மேம்படுத்தி, நாடு முழுவதும் புதிய நீர் திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ஜப்பானின் குமமோட்டோவில் இன்று (23) முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட 4வது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி … Read more

இலங்கைக்கு உதவ தயார் – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவு வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்ப தொழில்நுட்ப கலந்துரையாடல்களை சர்வதேச நாணய நிதிய குழு நிறைவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   Source link

எதிர்வரும் வாரம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள விலை அதிகரிப்பு

பால் மாவுக்கான உறுதியான விலை அதிகரிப்பு எதிர்வரும் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு  வரும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு சரிவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பால் மாவுகளும் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக புதிய பங்குகள் இறக்குமதி செய்யப்படவில்லை என இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர். அடுத்த வார இறுதிக்குள் பால் மா இறக்குமதி செய்யப்படவுள்ளது.  … Read more

பாலியல் ரீதியான துன்புறுத்தல் முயற்சியை துணிச்சலாக எதிர்கொண்ட வெளிநாட்டு பெண்!

கண்டியில் வெளிநாட்டு பெண் ஒருவரை உள்ளூர்வாசிகள் குழுவொன்று பாலியல் ரீதியாக துன்புறுத்த முற்பட்ட சம்பவம் காணொளியில் பதிவாகியுள்ளது. இந்த தகவலை கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. எனினும் சம்பவம் எப்போது இடம்பெற்றது என்ற தகவலை ஊடகம் வெளியிடவில்லை. இதனையடுத்து தன்னைத் துன்புறுத்த முற்பட்ட குழுவினர் வெளிநாட்டு பெண் எதிர்கொள்ள முற்பட்டபோது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அவருடன் சென்ற மற்றொரு வெளிநாட்டவரின் காணொளியில் பதிவாகியுள்ளது. இந்தநிலையில் சம்பவத்தின் பின்னர் கருத்துரைத்துள்ள குறித்த பெண்,இது தமக்கு … Read more

மகிந்த பதவி விலகினால் அடுத்த பிரதமர் இவர்தான்! முன் வைக்கப்பட்ட புதிய யோசனை

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய நேரிட்டால், புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும், பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறி, ஜனாதிபதிக்கு கடிதத்தை அனுப்பிய பின்னர், பிரதமரை சந்தித்துள்ள ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பிரதமர் பதவி விலக நேரிட்டால், அந்த பதவியை தினேஷ் குணவர்தனவுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எது எப்படி இருந்த போதிலும் மகிந்த ராஜபக்ச … Read more

றம்புக்கண கலவரத்தில் உயிரிழந்த சமிந்தவின் வீட்டின் முன்னால் ஒன்றுகுவிந்த பொது மக்கள் (Video)

றம்புக்கண பகுதியில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சமிந்த லக்ஷானின் வீட்டின் முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  சமிந்த லக்ஷானின் வீட்டின் முன்னால் ஒன்று  திரண்ட பொதுமக்கள் கோஷங்களை எழுப்பி, தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.   றம்புக்கண பகுதியில் கடந்து இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற போராட்டத்தின் போது எரிபொருள் பௌசருக்கு தீ வைக்க முற்பட்டனர் என தெரிவித்து பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சமிந்த லக்ஷான் என்பவர்  உயிரிழந்த நிலையில் … Read more

பெரும்பான்மையை இழந்த மஹிந்த: கொழும்பு அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம்

இலங்கையில் சமகாலத்தில் இரண்டு விதமான பாரிய பிரச்சினைகள் தீவிரம் அடைந்துள்ளன. அரசியல் மட்டத்தில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மையற்ற நிலை, பொருளாதார ரீதியான பாரிய பின்னடைவுகள் என்பன இவையாகும். பொருளாதார நெருக்கடிக்கு தேவையான டொலரினை பெற்றுக்கொள்ள உலக நாடுகளின் உதவியை நாடி உள்ளனர். எனினும் அரசியல் ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு என்பது எட்டப்படாத முடியாத இடியப்பச் சிக்கலாக மாறியுள்ளது. அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது அதனை இழக்கும் நிலைக்கு வந்துள்ளது. அடுத்த ஆட்சியாளர்கள் யார் … Read more

தமிழகத்தில் மீண்டும் கொரோனா – முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

தமிழகத்தில் கொரோனா வைரசு தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பரவல் அதிகமாக காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதற்கு பொதுமக்கள் முக கவசம் அணியாமை முக்கிய காரணம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தொடர்ந்து தமிழகத்தில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சுற்றினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட … Read more

மகிந்தவின் உடல்நிலைக்கு என்ன நடந்தது..! பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

தான் எந்த நோயினாலும் பாதிக்கப்படவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்து விட்டதாகவும் இணையத்தளங்களில் நேற்றிரவு முதல் தகவல்கள் பரிமாறப்பட்டு வந்தன. எனினும் சமூகவலைத்தளங்களில் பரவிவரும் பிரசாரம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்தக் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக பிரதமரின் உடல்நிலை தொடர்பில் … Read more