கடனட்டை மற்றும் தங்கக்கடன் முற்பணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வங்கிகளின் கடன் மற்றும் வைப்புக்களுக்கான வட்டி வீதங்கள் தொடர்பான அறிவிப்பொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி பங்குனி 11, 2022 திகதியிட்ட 2022 ஆம் ஆண்டின் பணவியல் சட்டத்தின் எண் 01இன் ஆணை 2.1ஐ ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணவியல் கொள்கை நடவடிக்கைகளை கடுமையாக்கும் இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய முடிவிற்கு இணங்க இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடனட்டைக்கான முற்பணம், புதிய முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக மேலதிக பற்று மற்றும் நடைமுறையிலுள்ள … Read more

துப்பாக்கி பிரயோகம் குறித்து கேகாலை பொலிஸ் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நீதி மன்றதில் சாட்சியம்

ரம்புக்கனையில் இடம்பெற்ற பொது மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஏற்ப்பட்ட அமைதியின்மையை  கட்டுப்படுத்துவதற்காக பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதுடன் அது முடியாமற் போனது. பொது மக்களின் உயிர் பாதுகாப்புக்காகவும் பொது சொத்துக்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் தாம் ஆகக்குறைந்த அதிகாரத்தை பயன்படுத்தியதாக கேகாலை பொலிஸ் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. யு. கீர்த்திரட்ன தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் கடந்த 19 ஆம் திகதி இடம் பெற்ற ஆர்ப்பாட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கேகாலை நீதவான் நீதி மன்றத்தில் நீதவான் வாசனா … Read more

கடற்பரப்புகளில் அவ்வப்போது கொந்தளிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாககாலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட … Read more

இலங்கைக்கு இனி வேறு வழியே இல்லை! விரும்பியோ விரும்பாமலோ ஏற்பட்டுள்ள நிலை

தற்போது சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால், தற்போதைய நிதி நெருக்கடியின் பாதிப்பை இன்னும் 10 முதல் 15 வருடங்களுக்கு இந்நாட்டு மக்கள் அனுபவிக்க நேரிடும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், நாடு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இலங்கை மீண்டு வருவதற்கு வழியில்லை. எனினும் இலங்கைக்கு வேறு வழியும் இல்லை. விரும்பியோ விரும்பாமலோ அங்கு … Read more

பசிலால் ஆபத்து – கோட்டபாயவை காப்பாற்ற தயாராகும் சிரேஷ்ட அரசியல்வாதி

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கி நாட்டில் மேலும் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அவரை நீக்குவதற்கு பதிலாக, தேசத்தின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தில் சேர ஜனாதிபதியை வற்புறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் இடைக்கால அரசாங்கமும் உடனடியாக நிறுவப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியின் பதவி நீக்கத்தை தடுக்க எந்தவொரு அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் … Read more

ஜனாதிபதி புத்திசுயாதீனம் அற்றவர் – நாடாளுமன்றில் தெரிவிப்பு (Video)

இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வழங்கக் கூடிய நிலையை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,  புத்திசுயாதீனம் அற்ற ஒருவருக்கு இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி கிடைக்கம் என்றா மோசமா விளைவுள் ஏற்பதும் என கலாநிதி எம்.எம்.பெரேரா தெரிவித்திருந்தார். 40 ஆண்டுகளுக்கு முன் காலாநிதி எம்.எம்.பெரேராவால் … Read more

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை நிர்வாகம் விடுத்துள்ள அவசர வேண்டுகோள் (PHOTO)

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை நிர்வாகம் பொது மக்களிடம் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது. அந்த வகையில், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது 20 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விரும்பிய நன்கொடையாளர்கள் தமக்கு தேவையாக மருந்து வகைகளை வழங்கி உதவுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நன்கொடையாக பின்வரும் பொருட்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. அவை வருமாறு, Source link

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் – தேசத்துக்கான சுயாதீன வல்லுநர்கள் கோரிக்கை

மக்களின் கோரிக்கைகளை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என தேசத்துக்கான சுயாதீன வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். முன்மொழிவுகளுடன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளதுடன், உடனடியாக எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்றும், இடைக்கால தேசிய அரசாங்கத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்மூலம் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சம எண்ணிக்கையிலான பிரதி … Read more