ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் – தேசத்துக்கான சுயாதீன வல்லுநர்கள் கோரிக்கை

மக்களின் கோரிக்கைகளை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என தேசத்துக்கான சுயாதீன வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். முன்மொழிவுகளுடன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளதுடன், உடனடியாக எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்றும், இடைக்கால தேசிய அரசாங்கத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்மூலம் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சம எண்ணிக்கையிலான பிரதி … Read more

பிரதமர் மஹிந்தவிடம் சீனா வழங்கியுள்ள உறுதிமொழி

பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான ஆதரவை இலங்கைக்கு வழங்குவதாக சீன பிரதமர் உறுதியளித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடிய சீனப் பிரதமர் லீ கெகியாங் இந்த உறுதிமொழியை வழங்கினார். பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் அதிக ஸ்திரத்தன்மைக்கு இலங்கைக்கு சீனா ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா கவனம் செலுத்தி வருவதாகவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய முடியுமென சீன பிரதமர் தெரிவித்தார். … Read more

நாட்டின் முன்னணி நிறுவனங்கள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

நாட்டிலுள்ள பல முன்னணி வர்த்தக நாமங்களை கொண்டுள்ள நிறுவனங்கள் அரசாங்கத்திடம் இன்று முக்கிய கோரிக்கை விடுத்துள்ளன. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளன. இதன்படி, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கு தேவையான ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான தருணத்தில் பொருளாதாரத்தை மீண்டும் பலப்படுத்துவதற்கு தேவையான ஸ்திரத்தன்மை தேவை என குறித்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மாற்றம் கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு … Read more

எதிர்க்கட்சி தலைவர் ஊடகங்களுக்காகவே பாராளுமன்றத்தில் உரை

எதிர்க்கட்சி தலைவர் ஊடகங்களுக்காகவே பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார் எதிர்க்கட்சி தலைவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவது ஊடகங்களுக்காகவே  ஆகும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் இன்று (22)  தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரை நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக உரையாற்றுமாறு கூறுங்கள். இவர் உரையாற்றுவது ஊடகங்களுக்கே ஆகும். ஊடக கலந்துரையாடலை நடத்தி அதில் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் என்றும் குறிப்பிட்டார்.

எத்தியோப்பியாவில் வாரத்தில் ஒரு முறை மட்டுமே எரிவாயு விநியோகிக்கப்படுகிறது

எத்தியோப்பிய போன்ற நாடுகளில் வாரத்திற்கு ஒரு முறை மாத்திரமே சமையல் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது எனவும் இலங்கையில் அவ்வாறான நிலைமை இல்லை என்பது குறித்து பொது மக்கள் நன்றி கூற வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடு வரலாற்றில் என்றும் எதிர்நோக்காத மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை நாங்கள் எதிர்நோக்கி வருகின்றோம். இலங்கை மட்டுமல்ல முழு உலகமும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார … Read more

ப்ளூ பிளானட் நிதியத்துடன் இலங்கை ஒத்துழைப்பு

ஐக்கிய இராச்சியத்தின் 500 மில்லியன் பவுன் புளூ பிளானட் நிதியம் கடல் சூழலைப் பாதுகாக்கவும், வறுமையைக் குறைக்கவும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு ஆதரவளிக்கிறது. பிளாஸ்டிக் மாசுபாடு, வெப்பமயமாதல் கடல் வெப்பநிலை மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தல் ஆகியவற்றிலிருந்து கடலைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தால் இந்த நிதி உருவாக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி வரவு செலவுத் திட்டத்தால் நிதியளிக்கப்பட்டதுடன், ப்ளூ பிளானட் நிதியானது கடல்சார் பிரச்சினைகளில் ஐக்கிய இராச்சியத்தின் உலகளாவிய தலைமையின் ஒரு முக்கிய பகுதியாகும். 2030 … Read more

41 பேர் கொண்ட குழுவின் அரசியலமைப்பு முன்மொழிவுகள்

அரசாங்கத்திலிருந்து வெளியேறி ,தனியான குழுவாக செயற்படுகின்ற 41 பேர் கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு முன்மொழிவுகள் இன்று (22) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டன. தனக்கு கிடைத்துள்ள அனைத்து அரசியலமைப்பு முன்மொழிவுகளையும் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டத்தின் அம்சங்களை நீக்கிவிட்டு 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஜனநாயக அம்சங்களை மீண்டும் அரசியலமைப்பில் இணைத்து அதிகாரத்தை சமநிலைப்படுத்தும் நோக்கில் 21ஆவது திருத்தச் சட்டம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது என்று … Read more

மின்வெட்டு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி

வார இறுதியில்  மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, நாளைய  தினம் நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், நாளை மறுதினம்  3 மணித்தியாலங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளைய தினம் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அவ்வாறே, குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு … Read more

இலங்கை இந்தியாவின் மாநிலமாகின்றமை தொடர்பிலான செய்தி! இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிவிப்பு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் டுவிட்டர் கணக்கிற்குரியதென காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட போலியான படம் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அத்துடன் இது முழுக்கமுழுக்க போலியானதும் புனையப்பட்டதுமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான பதிவில் மேலும், தீய எண்ணத்துடனான இதன் உள்ளீடுகளை நாம் கடுமையாக மறுக்கின்றோம். இந்தியா இலங்கை இடையில் காணப்படும் நட்புரீதியானதும், நெருக்கமானதும், தொன்மையானதுமான உறவை பாதிக்கும் வகையில், அவநம்பிக்கை கொண்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தீய … Read more

குவைத் டினாரின் பெறுமதி உச்சத்தை தொட்டது

மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 339.99 ஆக பதிவாகி உள்ளது. மேலும், குவைத் தினாரின் பெறுமதி 1,096.62 ரூபாவாக பதிவாகி உள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, Source link