இலங்கை இந்தியாவின் மாநிலமாகின்றமை தொடர்பிலான செய்தி! இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிவிப்பு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் டுவிட்டர் கணக்கிற்குரியதென காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட போலியான படம் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அத்துடன் இது முழுக்கமுழுக்க போலியானதும் புனையப்பட்டதுமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான பதிவில் மேலும், தீய எண்ணத்துடனான இதன் உள்ளீடுகளை நாம் கடுமையாக மறுக்கின்றோம். இந்தியா இலங்கை இடையில் காணப்படும் நட்புரீதியானதும், நெருக்கமானதும், தொன்மையானதுமான உறவை பாதிக்கும் வகையில், அவநம்பிக்கை கொண்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தீய … Read more

குவைத் டினாரின் பெறுமதி உச்சத்தை தொட்டது

மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 339.99 ஆக பதிவாகி உள்ளது. மேலும், குவைத் தினாரின் பெறுமதி 1,096.62 ரூபாவாக பதிவாகி உள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, Source link

மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒத்துழைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன – கடற்றொழில் அமைச்சர்

நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் அடைக்கப்பட்ட கூடுகளில் மீன் வளர்க்கும் முறைமையினை விருத்தி செய்து மொத்த மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதனை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புக்களையும் முதலீடுகளையும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய விவகாரங்களுக்கான பிரிவின் இலங்கை மற்றும் மாலைதீவு  பிரதிநிதி விம்லேந்திரா ஷாரனுடனான சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளின் தற்போதைய … Read more

2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண, உயர்தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

2022ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை ,கல்விப் பொதுத் தராதர சாதாரண, தர உயர்தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகும். இது ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகி, நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதேவேளை, 2022ஆம் … Read more

கோட்டாபயவின் பதவியைப் பறிப்பதில் முக்கிய நகர்வு! கொழும்புக்கு அழைக்கப்படும் விசேட அணிகள் (VIDEO)

 சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வரும் பட்சத்தில் அரசாங்கத்தின் ஊழல்களை ஜே.வி.பி கையில் எடுக்கும் என அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய விடயங்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி, மகிந்தன் கம்பனி 70 ஆண்டுகள் சிங்கள மக்களை முட்டாள்களாக்கிய மனித குலத்திற்கே அபகீர்த்தியான ஆட்சி என்பதை சிங்கள மக்கள் புரிந்துக்கொண்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மனித … Read more

நிதி அமைச்சர் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து இன்று தெளிவுபடுத்துவார்

நிதி அமைச்சர் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய  பேச்சுவார்த்தை குறித்து இன்று தெளிவுபடுத்துவார்.  

றம்புக்கணை சம்பவம்! வெளிவரும் உண்மைகள்

றம்புக்கணையில் போராட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த  சம்பவம் தொடர்பில் மற்றுமொரு புதிய தகவல்  வெளியாகியுள்ளது.   சம்பவத்தின் போது பொலிஸார் நான்கு T-56 துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்களை பாவித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  ஆவணத்தின் மூலம் இந்த விடயம் வெளிவந்துள்ளது. றம்புக்கணை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், பலர் படுகாயமடைந்திருந்தனர். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் … Read more

வாய்மூல விடைகளை எதிர்பார்த்து சமர்ப்பிக்கும் வினாக்களை ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதில் புதிய நடைமுறை

பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூல விடைகளை எதிர்பார்த்து சமர்ப்பிக்கும் வினாக்களை ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதில் புதிய நடைமுறை பின்பற்றப்படுவதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (22) அறிவித்தார். பின்வரிசை உறுப்பினர்கள் வாய்மூல விடைகளை எதிர்பார்த்து சமர்ப்பிக்கும் வினாக்கள், பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படும்போது தற்போது பின்பற்றப்படுகின்ற முறையியலின் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்படுகின்ற அனைத்து நாட்களிலும் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே வினாக்களைக் கேட்பதற்கான வாய்ப்பு கிடைப்பதனால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார். இந்த … Read more

அமரர் சந்திரசேகரன் கனவை நனவாக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட அமைச்சின் கடப்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்

மலையக மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமாக இலக்குடன் செயல்படுவதாக தோட்ட வீடமைப்பு சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். தோட்ட வீடமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் புதிய இராஜாங்க அமைச்சர் அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,இவ்வாறு குறிப்பிட்ட அவர், இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்கள், மற்றும் பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். போராட்டங்களை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அதனை மதிக்கிறேன் என்றும்கூறினார். … Read more

யாழில் கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கொடிகாமம் புகையிரத கடவையில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் தந்தை மற்றும் இரண்டு மகன்ளே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  அண்மைக்காலமாக வட மாகாணத்தில் இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  Source link