யாழில் கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கொடிகாமம் புகையிரத கடவையில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் தந்தை மற்றும் இரண்டு மகன்ளே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  அண்மைக்காலமாக வட மாகாணத்தில் இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  Source link

புதிய அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் , பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி ஜே. சுங் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை (ஏப்ரல் 20) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில்  சந்தித்தார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் பாதுகாப்புச் செயலாளரும் அமெரிக்க தூதுவர் தூதுவரை வரவேற்றனர். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து சுமுகமான … Read more

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்22ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் … Read more

எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் நுரைச்சோலை

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் நெருக்கடி காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் தொடர்ச்சியாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளமையால் சுமார் 15 அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூன்று 300 மெகாவோட் இயந்திரங்கள் மூலம் தேசிய கட்டமைப்பிற்கு சுமார் 900 மெகாவோட்களை … Read more

கடற்பரப்புகளில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாகஹம்பாந்தோட்டை … Read more

இலங்கையில் பல தசாப்தங்களின் பின் இடம்பெற்ற மிக மோசமான சம்பவம்

ரம்புக்கனையில் எரிபொருள் தொடர்ந்து விலை அதிகரிப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 13 பேர் காயமடைந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் பல தசாப்த்தங்களின் பின்னர் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பல வார ஆர்ப்பாட்டங்களின் இடையில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது துப்பாக்கி பிரயோகமாகும். ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் அதிகாரி 15 பேர் சிறிய காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிற்கு 90 கிலோ மீற்றர் தூரத்தில் … Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றம்

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு நேற்று (21) பிற்பகல் பாராளுமன்ற குழு அறை இலக்கம் 1 இல் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் அதனை வலுவாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் அவர்கள் … Read more

புத்தகங்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் பணி இறுதிக் கட்டத்தில்…

பாடசாலைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது பூரணமடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன  தெரிவித்துள்ளார். புத்தகங்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் இறுதிக் கட்டத்தை அண்மித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த மாதம் நடுப்பகுதியை அண்மிக்கும்போது மின்சார நெருக்கடியை இயலுமான அளவு தீர்க்க முடியும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன நம்பிக்கை தெரிவித்தார். நேற்றைய பாராளுமன்ற அமர்வின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.; அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் … Read more

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் மனைவியின் கண்ணீர் சாட்சியம்

றம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் இறுதி கிரியையில் உயிரிழந்தவின் மனைவியின் நிராகரிப்பையும் மீறி இராணுவத்தினர் செயற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட கணவரின் இறுதிக் கிரியைகளுக்கு உதவ அழைக்கப்படாத இராணுவ குழுவொன்று வந்ததாகவும், தான் உதவி தேவையில்லை என கூறிய போதிலும் கூடாரம் அமைத்து உணவு கொண்டு வந்து தருவதாக கூறியதாக, பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்ஷனின் மனைவி சமன் குமாரி கேகாலை நீதவான் வாசனா நவரத்ன முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். தனது கணவர் இராணுவத்திலோ அல்லது பாதுகாப்புப் … Read more