பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் மனைவியின் கண்ணீர் சாட்சியம்

றம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் இறுதி கிரியையில் உயிரிழந்தவின் மனைவியின் நிராகரிப்பையும் மீறி இராணுவத்தினர் செயற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட கணவரின் இறுதிக் கிரியைகளுக்கு உதவ அழைக்கப்படாத இராணுவ குழுவொன்று வந்ததாகவும், தான் உதவி தேவையில்லை என கூறிய போதிலும் கூடாரம் அமைத்து உணவு கொண்டு வந்து தருவதாக கூறியதாக, பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்ஷனின் மனைவி சமன் குமாரி கேகாலை நீதவான் வாசனா நவரத்ன முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். தனது கணவர் இராணுவத்திலோ அல்லது பாதுகாப்புப் … Read more

சர்வதேச நாணய நிதி இலங்கைக்கு வழங்கவுள்ள நிதியுதவி பல கட்டங்களின் கீழ் கிடைக்கும்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவிருக்கும் உதவிகள் கிடைப்பதற்கு இன்னும் 6 மாதங்கள் செல்லலாம். எனினும், எரிபொருள், மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை,எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மேலும் 50 கோடி அமெரிக்க டொலரை இந்தியா, இலங்கைக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது. எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா … Read more

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தொழிற்சங்கங்களின் ஆதரவை நான் பாராட்டுகின்றேன் – பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் வேலைத்திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவை பாராட்டுவதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். முற்போக்கு தொழிற்சங்கங்களுக்கான தேசிய நிலையத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நேற்று முன்தினம்(20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இதனைத் தெரிவித்தார். கடந்த காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் எடுத்த தீர்மானங்களாலேயே தற்போதைய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தற்போது அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். நெருக்கடியை உருவாக்குவதற்கு … Read more

தெற்காசியாவிலேயே அதிக விலைக்கு இலங்கையில் எரிபொருள் விற்பனை – வெளியாகியுள்ள தகவல்

சர்வதேச தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, தெற்காசிய நாடுகளிலேயே அதிக விலையில் இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் ஒரு லீற்றர் பெட்ரோல் விலை 113.19 இந்திய ரூபாயாகவும், நேபாளத்தில் 158.76 ரூபாயாகவும், பாகிஸ்தானில் 152.06 ரூபாயாகவும், வங்கதேசத்தில் 87.49 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இலங்கையில், தற்போது நாட்டில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 338 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 289 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தற்போது … Read more

கொழும்புத் திட்ட அறிஞர்கள் கன்பராவிள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம்

புதிய கொழும்புத் திட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கையில் கல்வியைத் தொடரும் கொழும்புத் திட்ட அறிஞர்களை வரவேற்கும் நிகழ்வு 2022 ஏப்ரல் 14ஆந் திகதி கன்பராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் சுமார் 10,000 இளங்கலைப் பட்டதாரிகளை ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் உள்ள 40 நாடுகளில் கல்வி கற்கவும், பயிற்சிகளைப் பெறவும் புதிய கொழும்பு திட்ட நிகழ்ச்சித்திட்டம் சந்தரப்பம் வழங்குகின்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய பதில் உயர்ஸ்தானிகர், ஆய்வுத் திட்டத்திற்கு இலங்கையை தெரிவு செய்தமைக்காக கொழும்புத் திட்ட … Read more

பால் மாவின் விலையை மீளவும் அதிகரிக்க தீர்மானம்!

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரத்தில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சில இறக்குமதியாளர்களும் டொலர் நெருக்கடி காரணமாக சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர், மேலும் பால்மா அடுத்த வாரம் நாட்டுக்கு வரவிருக்கும் நிலையில், பங்குகள் வந்த பிறகு விலை அதிகரிப்பு … Read more

இலங்கை மாணவர்கள் நாடு திரும்புவதற்கு சீனா அனுமதி!

சீனப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் மீளவும் நாடு திரும்புவதற்கு சீனா அனுமதிவழங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சொந்த நாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கை மாணவர்களுக்கு, மீளவும் நேரில் கற்றலை தொடங்குவதற்கு தங்கள் வளாகங்களுக்குத் திரும்புவதற்கு சீனா அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மாணவர்களை நாடு திரும்ப அனுமதிக்கும் சீனாவின் முடிவை பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இரண்டு (02) மாணவர் குழுக்களை சீனாவுக்குத் திரும்புவதற்கு … Read more

சீனத் தூதுவர் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதி  

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஏப்ரல் 21ஆந் திகதியாகிய இன்றைய தினம் சீனத் தூதுவர் கி சென்ஹொங் அவர்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். தூதுவரை வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இரு நாடுகளுக்கும் இடையில் முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு முன்னரே இலங்கைக்கான சீனாவின் தொடர்ச்சியான உதவிகளைப் பாராட்டினார். சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையில் அமைக்கப்பட்ட சீன நினைவுச் சின்னங்களையும் நினைவு கூர்ந்தார். நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை … Read more

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை ,கடல் நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 21ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை … Read more

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையைில், சீமெந்தின் விலைகளை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். 50 கிலோ எடை கொண்ட ஒரு சீமெந்து பொதி தற்போது சந்தையில் 2 ஆயிரத்து 300 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 350 ரூபாய் வரையான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சீமெந்தின் புதிய விலையானது 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் கூறியுள்ளனர். சீமெந்து விலைகள் அதிகரிக்கப்பட்டமை காரணமாக … Read more